Tuesday, January 16, 2024

கொல்லிமலை திரு அறப்பளிக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்


🌷 கொல்லிமலையில் குடிகொண்டிருக்கும் திரு அறப்பளிக்கும் பெருமான். இவரை, இன்று, அறப்பளீசுவரர் என்று அசுரம் கலந்து அழைக்கிறோம்.

🌷 அறப்பளிக்கும் பெருமான் - அறப்பு + அளிக்கும் + பெருமை வாய்ந்தவர்.

🌷 அறப்பு - இறையிலி நிலம் / பகுதி. அதாவது, இப்பகுதியில் குடியிருப்போர் வரி கட்டத்தேவையில்லை.

🌷 இவரது அருளுக்கு பாத்திரமானால், வரியில்லாத பகுதியில் நம்மை குடியமர்த்துவார் என்பது இவரது திருப்பெயருக்கான விளக்கமாகும்.

🌷 எனில், தற்போது, நாம் வரி கட்டி, வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நீர், உணவு, எரிபொருள், உடை, இருப்பிடம்... என பல வரிகளை செலுத்தி, உடலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

🌷 உடலுடன் வாழ்வதென்பது வரி கட்டி வாழும் பகுதியெனில், உடலற்று வாழ்வதே வரி கட்டாமல் வாமும் பகுதியாகும். அதாவது, திருநீற்று நிலையாகும் (அசுரத்தில், சமாதியாகும்)!

அறப்பளிக்கும் பெருமான் = திருநீற்று நிலையை வழங்கும் பெருமான்!!

oOo

இவ்வாறு, நமது பெருமான்களின் திருநெறிய தமிழ்ப்பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே நிலைபேற்றினை அடைந்துவிடலாம்! 🙏🏽

அசுரப்பெயர்களும் இத்தகையதே. ஏனெனில், அவர்கள் கற்றுக்கொண்டதும் நம்மிடமிருந்தே!

நமது முன்னோர்கள், இறைநிலையை அடைந்தவர்களுக்கு ஒரு வகையான பெயர்களும், ஏனையோருக்கு வேறு வகையான பெயர்களும் வைத்தனர். அசுரர்கள், எல்லோருக்கும் இறைநிலையை குறிக்கும் பெயர்களையே வைத்தனர். நம்மிடமிருந்து கற்றுக்கொண்டு, சில மாற்றங்களை செய்து, "நாங்க ஒசத்தியாக்கும்" என்று படங்காட்டுவது அவர்களது இன-நுட்பமாகும்! 👊🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment