Wednesday, May 18, 2022

திருஞானசம்பந்தர் என்ற ஒரு பெருமான் தோன்றியிருக்காவிட்டால்...

விடை (வைகாசி) - குருகு (மூலம்)

திருஞானசம்பந்தர், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்பாணார் & திரு முருக நாயனார்கள் திருநாள்


எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️


முருகனுக்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

திருஞானசம்பந்தர் என்ற ஒரு பெருமான் தோன்றியிருக்காவிட்டால் என்றோ வடக்கத்தான்களுக்கு அடிமையாகி, இன்று, வெட்கங்கெட்ட சமணர்களாகவோ, நயவஞ்சக பெளத்தர்களாகவோ ஆரியத்தில் உவாச்சிக்கொண்டிருப்போம். இன்று, வாந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும். வாந்தியர்களை நம்மை ஆளவிட்டு, நமது வளங்களை சுரண்டவிட்டு, நமது நிறுவனங்களில் அமரவிட்டு பாரத இறையாண்மையைக் காப்பாற்றியிருப்போம். 

சைவத்திலும் அத்வைதத்திலும் இருப்பதை உருவி, சற்று உருமாற்றி, லட்டு, வடை, தோசை முதலானவற்றை சேர்த்து, திவ்ய மங்கள விசுவ ரூபமாக்கி தொழில் செய்யவேண்டிய நிலை ஒரு கூட்டத்திற்கு ஏற்பட்டிருக்காது. மொட்டையடித்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்.

விண்டோஸ் 2000 என்ற இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இங்கு கொண்டுவந்தபோது, அதில் தமிழ், வாந்தி & ஆங்கிலம் ஆகிய மொழிகள் இருந்தன. இதை வாந்தியர்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பதிப்பிலிருந்து தமிழ் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். ஆனால், இயற்கை அன்னையின் திட்டம் வேறாக இருந்தது. இணையத்தின் வாயிலாக நம் திருநெறிய தமிழுக்கு புத்துணர்வு ஊட்டினார்.

நமது அடையாளங்களை அழிக்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டதல்ல. இமயத்தில் சேரன் கொடி நட்டதிலிருந்து தொடங்குகிறது.

வாழ்வை மேன்மையாக்கும் சமயங்களும், சுவையாக்கும் கலைகளும் பிறந்தது தெற்கில். வடக்கில்... படங்காட்டுதல், பிடுங்கிக் கொள்ளுதல், ஊடுருவல், அத்துமீறுதல்...

oOo

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு.

அது ஒரு திருவாசகப் பாடல் பெற்ற திருக்கோவில். அங்கு குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு பூசை செய்யும் உரிமை பெற்ற ஓர் ஆரியப் பூசாரியோடு பேசிக்கொண்டிருந்தபோது "மார்கழி" என்று சொல்லிவிட்டார். "அடடடடா, தவறு செய்துவிட்டோமே!" என்ற உணர்ச்சியை வெளிப்படுத்தி, தன்னைத்தானே சற்று கடிந்துகொண்டு, "தனுர் மாசா" என்று தொடர்ந்தார். 😊

"மார்கழி மாதம்" என்று உச்சரித்தபோது அவரிடம் என்ன குறைந்துபோனது? "தனுர் மாசா" என்று உச்சரித்தபோது அவரிடம் என்ன மிகுந்தது? சிந்தித்தால் மொழித் திணிப்பின் அபாயம் புரியும்.

oOOo

பரந்தெழுந்த சமண் முதலாம் பரசமய இருள் நீக்கிய பெருமான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment