Monday, May 30, 2022

வேள்வியின் உட்பொருள் என்ன?

https://youtu.be/7fPR-eGr738

"காணக்கிடைக்காத காட்சி" என்ற உரையுடன், அண்மையில், திரு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற ஒரு வேள்வியின் இறுதிப் பகுதியை காணொளி பிடித்துப் பகிர்ந்திருந்தார்கள். அது பற்றி ...

oOo

எவ்வாறு பொருளுணராது சொல்லப்படும் பாடலால் பயனில்லையோ, அவ்வாறே பொருளுணராது காணும் காட்சியாலும் பயனில்லை!

🌷 இங்கு ஓதப்படுவது திரு ருத்திரத்தின் நமகப் பகுதியிலுள்ள 8வது செய்யுளாகும். சிவபெருமானின் தோற்றத்தை, தன்மையை, அருமை பெருமைகளை ஓதுகின்றனர். ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த பொருளுள்ளது. "நம" என்ற ஒரு சொல்லைப் பற்றி சிந்தித்தாலே போதும்:

ந - இல்லை
ம - எனது
ந+ம - என்னுடையது இல்லை. எதுவும் என்னுடையது இல்லை. எனில், யாவும் இறைவனுடையதே.

🌷 அடுத்தது, வேள்விக் காட்சி.

🔸 மூன்றடுக்குகள் கொண்ட வேள்விக்குழி (குண்டம்) - தூல, சூக்கும & காரண உடல்கள். மொத்தத்தில், நமதுடல்

🔸 எரியும் நெருப்பு - மூலக்கனல் எனப்படும் நமது தன்மையுணர்வு. இதுவே, உள்ளபொருளுமாகும்.

🔸 குழிக்குள் இடப்படும் பொருள்கள் - நமக்கு தோன்றும் எண்ணங்கள்

🌷 எண்ணங்களை எவ்வாறு தன்மையுணர்வுக்கு இரையாக்குவது?

ஓயாத அலைகள் போன்று ஓயாமல் தோன்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களைப் பின்பற்றிச் செல்லாமல், நமது தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றிக்கொண்டிருந்தால், தோன்றிய எண்ணங்கள் தாமாகவே மறைந்துபோகும். இதுவே இரையாக்குவதாகும்.

🌷 நிறைபொருள் (பூர்ணாஹுதி) - "நான் யார்?" என்ற நினைவு. எல்லா எண்ணங்களையும் இரையாக்கிய பின்னர், இறுதியில், இதையும் விட்டுவிடுவோம். இந்த நிறைபொருளான நான் யாரெனும் நினைவிற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இட்டுள்ள பெயர்: பிணஞ்சுடு தடி!! 😊 ("பிணஞ்சுடு தடி போல் தானுமழியும்")

🌷 அடுத்து, இறைவனுக்கு காட்டப்படும் ஐஞ்சுடர் விளக்கு.

ஐஞ்சுடர் - ஐம்பொருள்கள் - உலகம்.

"ஐம்பொருள்களின் கலவையாகிய உலகம் நீயே" என்பது பொருள்.

இவ்வாறு, வேள்வியென்ற பெயரில் அரங்கேற்றப்படும் திருக்காட்சியை பிரித்துப் பொருள் காண முற்படாவிட்டால், காணும் காட்சி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயனற்றதாகிவிடும்; ஒரு திரைப்படம் பார்த்த கணக்காகிவிடும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment