Friday, February 18, 2022

திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?


செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

தொன்மவழி பொருள்: முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். (மு.வ.)

செரு, வேந்தன் & வெரு ஆகிய சொற்களுக்கு போர், நாட்டை ஆள்பவர் & விரைவில் என்று பொருள் கொள்வதை விட, செருக்கு (அகந்தை), உடலெனும் நிலத்தின் வேந்தராகிய நாம் & உடனடியாக என்று பொருள் கொண்டால் குறளுக்கு சிறப்பான பொருள் கிடைக்கும்.

இனி பொருள் காண்போம்: அகந்தை தோன்றிய போது, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளாதவன், அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு உடனடியாக அழிந்துபோவான்.

🔸 அகந்தைக்கும் அச்சத்திற்குமுள்ள தொடர்பு

"மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, "அத்தோடு இறப்பைப் பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது" என்று பதிலளித்தார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ . எனில், அகந்தை அழியும்போது (மெய்யறிவு தோன்றும்போது) அச்சம் நீங்குகிறது; அகந்தை தோன்றும்போது அச்சம் தோன்றுகிறது.

அன்றாட வாழ்க்கையில், வெளியே தலைகனத்துடன் சுற்றித்திரியும் பெரும்பாலான நபர்கள் உள்ளே வெருக்கொள்ளிகளாக இருப்பதைக் காணலாம் (வெருக்கொள்ளி - பயங்கொள்ளி. வெரு[ள்] - அச்சம் / பயம். பயம் - ஆரியம். வெரு[ள்], அச்சம் - தமிழ்.)

🔸 அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பு

மெய்யறிவில் நிலைபெறும் நிகழ்வே பிறப்பென்றும், மற்றதெல்லாம் இறப்பென்றும் பல முறை அறிவுறுத்தியிருக்கிறார் பகவான். எனில், அகந்தையின் அழிவு பிறப்பாகிறது; அதன் தோற்றம் இறப்பாகிறது.

"ஏன்யா பயப்பட்டு சாவுற?" என்பது பொது மக்கள் அடிக்கடி பேசும் / கேட்கும் சொற்றொடர்களில் ஒன்றாகும். அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பை, அத்தொடர்பை பற்றிய நம் முன்னோர்களின் ஆழமான புரிதலை இந்த கேள்வி காட்டுகிறது! 😍

oOo

திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு கிறித்துவர் என்று "ஊழியம்" செய்த நரித்துவனுக்கு 👊🏽!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment