Showing posts with label ஆடித்தபசு. Show all posts
Showing posts with label ஆடித்தபசு. Show all posts

Thursday, July 30, 2026

ஆடித்தபசு - உட்பொருள்


ஆடித்தபசு - அன்னையானவள் ஊசிமுனையில், ஒற்றைக்காலில் வடக்கிருந்து, மாலொருபாகனின் திருக்காட்சியை பெற்ற நாள்.

உட்பொருள்:

🌷 அன்னை - மனம்
🌷 மால் - காணும் காட்சி
🌷 இறைவன் - காண்பான்
🌷 ஊசிமுனை - நுண்ணிய அறிவு
🌷 ஒற்றைக்கால் - அகம் (தன்மையுணர்வு)

மாலொருபாகன் (அசுரத்தில், சங்கரநாராயணன்) திருக்கோவில் கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த பொழுதில், அகம்-புறம் ஆகியவற்றை நுட்பமாக ஆராய்ந்து, தெளிந்து, அதில் உறுதியாக நின்று, மாலொருபாகன் காட்சியை பெற்று, வீடுபேறு அடைந்துள்ளார். அப்பெருநிகழ்வை நினைவு கூறுதலே ஆடித்தபசு ஆகும்.

🌷 மாலொருபாகன்,
🌷 மாதொருபாகன்,
🌷 திரு காரைக்கால் அம்மையார் கண்ட திருக்கூத்து ("நான் பாட நீ ஆட"),
🌷 திரு அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சி,
🌷 திருவாதவூரடிகள் கண்ட சூழ்சியில்லாக் காட்சி,
🌷 பல பெருமான்கள் கண்ட திருமணக் காட்சி

ஆகிய யாவும் ஒன்றேயாகும்! தற்போது காட்சிக்குள் நாமிருப்பது போன்ற உணர்விருக்கிறது. மாலொருபாகன் காட்சியின் போது, நாம் ஒரு புறமிருக்க, காட்சி இன்னொரு புறம் தோன்றும். மெய்நிகர் பொறி (Virtual Reality Device) வழியாக காணுவது போன்றிருக்கும். இதற்கு தொல்தமிழர் இட்ட திருத்தமிழ்ப் பெயர்: கண்கூடாகக் காணுதல்!!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻