என்ன ஓய், குரு பகவானை நமஸ்காரம் செய்யச் சொல்றேள். தட்சிணாமூர்த்திக்கு வஸ்த்திரம் சாத்தச் சொல்றேள். நீர்தானே பகவானுக்கு எல்லாம் செய்யறேள். நீர் கைங்கரியம் செய்யலைன்னா பகவான் நாறிடுவார். So, உம்மைதான் நமஸ்காரம் பண்ணனும்; உமக்கு வஸ்த்திர தானம், டாடா சியாரா தானம், சாம்சங் அல்ட்ரா தானம், காஸா கிராண்ட் அப்பார்ட்மெண்ட் தானம் செஞ்சா பாவங்கள் விலகும்; முக்தி, ஞானம், ஐஸ்வரியம் கிடைக்கும்னு சொல்லும்!
😆😂😂🤣
திரு ஆளுடைய பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) முதற்கொண்டு, திரு வள்ளற்பெருமான் வரை எண்ணற்ற பெருமான்கள் வந்து வணங்கிய திருவலிதாயமுடையார் (பாடி திருக்கோவிலின் உடையவர்) இருக்க, ஒரு 10+ ஆண்டுகளுக்கு முன்னர், வியாழக் கோளின் பெயர்ச்சிகளின் போது, கல்லா கட்ட வசதியாக இருக்குமென்பதற்காக நிறுவிய ஒரு கற்சிலையை வணங்கச் சொல்லி, நம்மை மடைமாற்றுகின்றனர்! 😡😡
oOo
"குரு பகவான் சாபம் தீர வழிபட்ட கோவில்" என்ற தலைப்பிலுள்ள குரு பகவான் வேறு. "இங்கு குரு பகவானை வழிபட்டால் பாவங்கள் விலகும்" என்ற சொற்றொடரிலுள்ள குரு பகவான் வேறு. "தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம்..." என்ற சொற்றொடரில் மறைமுகமாக குறிக்கப்படும் குரு பகவான் (தட்சிணாமூர்த்தி) என்பவர் வேறு.
🌷 1வது குரு பகவான்: பாடி திருக்கோவிலின் அகநாழிகைக்கு (கருவறைக்கு) கீழே திருநீற்று நிலையில் இருக்கும் பெருமானை குறிக்கும். அப்பெருமான் உடல் தாங்கியிருந்த பொழுதில் ஓர் ஆயராக இருந்திருக்கவேண்டும். எனவே "குரு" ஆகிறார்.
🌷 3வது குரு பகவான்: திரு ஆலமர் செல்வரை குறிக்கும்.
இப்பெருமானை பற்றி மறைந்த திரு கணபதி ஸ்தபதி வெளிப்படுத்திய செய்திகள்: ஆலமர் செல்வன் என்பது மாமுனி மயன் ஆவார். அவர் பேரரசர் இராவணனின் மாமனார். மண்டோதரியின் தந்தை. சிற்பம், கட்டடம், வானவியல் என பல துறை வல்லுநர். ஐந்திரம் என்ற வையகத்தின் முதல் அறிவியல் நூலை எழுதியவர். அன்றைய இலங்கையை வடிவமைத்தவர். விசுவக்கர்மா என்று அசுரத்தில் அழைக்கப்படுபவர். ஒரு பெரிய கல்விச்சாலையை நடத்தியவர். மொத்தத்தில், பல செயற்கரிய செயல்களை செய்தவர்.
🌷 2வது குரு பகவான்: வானில் வலம் வரும் வியாழன் கோளை குறிக்கும். கணியத்தில் (அசுரத்தில், சோதிடம்) வியாழன் என்பது நமது எண்ணங்களை குறிக்கும். எனில், வியாழனுக்கு மஞ்சளாடை அணிவித்தல் என்பது நமது எண்ணங்கள் நல்லதாக / சிறப்பாக / செம்மையானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதலாகும்.
அவ்வாறு செம்மையாக்கிக் கொண்டால், ஒரு சமயத்தில், பிறவி சுழற்சியிலிருந்து வெளியேறுவோம். நமது எண்ணங்களை செம்மையாக்க முயற்சிக்காமல், ஒரு கற்சிலைக்கு மஞ்சளாடை அணிவிப்பதினால் ஒரு பயனும் கிட்டாது.
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment