Wednesday, March 29, 2023

வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽



இணைப்புப்படம், ராமகிருஷ்ண விஜயத்தின் சித்திரை 2023 இதழின் பின்னட்டைப்படமாக வந்துள்ளது.

திரு கண்ணபிரானுக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️, அர்ஜுனனுக்கும் நாமத்தை போட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு பட்டையை போட்டிருக்கிறார்கள். அதாவது, சைவர்களை கொடூரர்களாகவும், நாமப் பேர்வழிகளை நல்லவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்!

> நாமச் சின்னத்தை இராமானுஜர் வரைந்தது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர்.

> வைணவம் என்றொரு மதம் தோன்றத் தொடங்கியது திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ மறைவுக்குப் பின்னர். அது முழுவடிவம் பெற்றது இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர். 

> கண்ணபிரான் வாழ்ந்ததும், மகாபாரதம் நிகழ்ந்ததும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்.

> எனில், பிரானுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி நாமத்தை போட்டுவிடலாம்?

நாமம் ஒன்றும் இராமானுஜரின் தனிப்பட்ட படைப்பல்ல! அதற்கு முன்னரே பாலைவன மதங்களில் வெகுவாக பயன்படுத்தப்பட்ட பெண்குறி திறப்பு எனும் குறியீட்டை, தலைகீழாக்கி, நடுவில் சிவப்பு கோட்டைச் சேர்த்து வெளியிட்டார். பாலைவன மதங்களில், பெண்குறி, 'n' என்ற வடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர், அதை 'U' என்றாக்கி, நடுவில் கோடு சேர்த்து, அச்சு அசல் பெண்குறியாக்கிவிட்டார். |/

> நாமம் போட்டுட்டாங்களா? = உன்னை ஏமாற்றிவிட்டார்களா?

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

>> நாமம் = வைணவம் = ஏமாற்றுவேலை!!

அடிப்படையில், இவர்கள் வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களாவர். அப்போது இவர்களது தொழில் மொட்டைப் போடுதலாகும். 

> மொட்டப் போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?

> மொட்டப் போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

>> மொட்டை = பௌத்தம் = திருட்டு வேலை!!

ஆக மொத்தம், இவர்களது தொழில் ஊரையேமாற்றிப் பிழைப்பதாகும்!!

இவ்வாறு, இவர்களது திருட்டுத்தனங்களை பக்கம் பக்கமாக தோலுரித்துக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். 👊🏽👊🏽

என்றும் வாய்மையே வெல்லும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, March 22, 2023

திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் - சில குறிப்புகள்


திருவனந்தபுரம் திரு பத்மநாப உடையார் திருக்கோயில் - தொன்ம கதைகளில் வரும் திரு அகத்திய மாமுனிவரின் திருவிடமாகும்!

🌷 அகத்தியர் = குள்ள மாமுனிவர்.

பல திருக்கோயில்களில், "அகத்தியருக்கு இறைவன் தனது திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று பதிவு செய்திருப்பார்கள். இது குள்ள மாமுனிவரை குறிக்காது!! அந்தந்த திருக்கோயில்களில் திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான்களைக் குறிக்கும். உண்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.

🌷 தொடக்கத்தில் நம்மிடமிருந்த இக்கோயில், 1700-1800 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களிடம் சென்றது. தற்போது, பெளத்தத்திலிருந்து தோன்றிய வைணவர்களிடமுள்ளது. அப்போது, படுத்திருக்கும் கெளதம் புத்தர் சிலையிருந்திருக்கும். தற்போது, படுத்திருக்கும் பெருமாள் சிலையுள்ளது.

🌷 ஒரு சமயத்தில், இக்கோயில் வைணவத்தின் தலைமையகமாக விளங்கியது.

🌷 இங்கு சென்று திரும்பும்போதுதான், வேதாந்த தேசிகருக்கு "குதிரைத்தலை பெருமாள்" எனும் வடிவத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

🌷 இங்குள்ள பெருமாளின் உருவம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த சிலை தீக்கிரையாகிப் போனது.

🌷 தற்போதுள்ள உருவம் ஒரு சிவலிங்கத்தை தொட்டபடியிருக்கும். சைவத்தை / சிவப்பரம்பொருளை மட்டம் தட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இவ்வமைப்பையும், உடனிருக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளையும் நீக்கிவிட்டு சிந்தித்தால், பெருமாளின் உருவம் ஒரு சிவலிங்கமே என்பது விளங்கும்!!

> சிவலிங்க ஆவுடை = பாம்பணை = ஐம்பொருட்களால் ஆன உடல் உலகம். அதாவது, காணப்படுவது / அறியப்படுவது.

> சிவலிங்கம் = பெருமாள் = செயலற்ற உள்ளபொருள். அதாவது, காண்பான் / அறிபவன்.

> சிவலிங்கம் = அருவுருவம் = உருவமாகவும் கொள்ளலாம். அருவமாகவும் கொள்ளலாம்.

> பெருமாள் = உருவமாக மட்டுமே கொள்ளமுடியும். 

முழு அருவ வழிபாட்டின் விளைவு பாலைவன மதங்களெனில் (காட்டுமிராண்டித்தனம் & பைத்தியக்காரத்தனம்), முழு உருவ வழிபாட்டின் விளைவு... 

பெருமாளுக்கு வெந்நீர் குளியல் & கம்பளி உடை, மடக் மடக் என்று குடிப்பதற்கு நரசிம்மருக்கு பானகம், அம்மனுக்கு மாதவிடாய்... 

பூஜா, அபிஷேகா, அலங்காரா, அர்ச்சனா, ஆராதனா, ஹோமா, தர்ப்பணா...

நாசமா போச்சு!! 🤬😡

எல்லாம் சில காலம். 
இதுவும் கடந்துபோகும். 
இறுதியில் வாய்மையே வெல்லும்.

oOOo

திரு அகத்திய மாமுனிவர் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, March 6, 2023

திருக்குறள் #28 (நீத்தார் பெருமை): நிறைமொழி மாந்தர் பெருமை...



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

-- திருக்குறள் #28 (நீத்தார் பெருமை)

🔸 நிறைமொழி மாந்தர் - மனமழிந்தவர் / தன்னையுணர்ந்தவர். இவர்களால் மட்டுமே உள்ளபொருளை பற்றி சரியாக எடுத்துக்கூறமுடியும்.

உள்ளபொருள் - முழுபொருள் - நிறைபொருள். இது பற்றிய மொழி நிறைமொழி.

சில நிறைமொழி மாந்தர்:

🙏🏽 பகவான் இரமண மாமுனிவர்
🙏🏽 திருவள்ளுவர்
🙏🏽 ஒளவையார்
🙏🏽 கபிலதேவர்
🙏🏽 நம்பியாண்டார் நம்பி

🔸 மறைமொழி - நீரிலிருந்தும் நீரையுணராத மீனுக்கு நீரைப் பற்றி எப்படி நேரடியாக எடுத்துக்கூறமுடியும்? மறைமுகமாக குறிப்பால்தான் உணர்த்தமுடியும்.

மறைமொழி - உள்ளபொருளை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தும் மொழி.

மேற்கண்ட நிறைமொழி மாந்தரிடமிருந்து வெளிப்பட்ட சில மறைமொழிகள்:

🌷 தன்மையின் உண்மையை தான் ஆய, தன்மை அறும்
🌷 தூஉய்மை என்பது அவாவின்மை
🌷 [சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாத] ... என்னை யறிவித்து எனக்கருள் செய்து
🌷 [விநாயகனே வெவ்வினையை வேரறுக்க] ... தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
🌷 [என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்து] ... தன்னை நினையத் தருகின்றான்

இம்மறைமொழிகளைக் கொண்டு மேற்கண்ட மெய்யறிவாளர்களின் பெருமையை உணரலாம்.

மக்களிடம் (நிலத்தில்) பயன்பாட்டிலிருக்கும் மறைமொழிகளைக் கொண்டு, அவற்றை வெளியிட்ட நிறைமொழி மாந்தரின் பெருமைகளை உணரலாம். 🙏🏽

oOo

மறைமொழி என்றதும் ஆரியம் நினைவுக்கு வருமாறு கைங்கரியம் செய்துள்ளனர். இந்த சீர்கேடெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்துள்ளது. அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல; உண்மையான மறைமொழியுமாகும். 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, March 1, 2023

நியூட்டனுக்கு முன்னாடியே நமக்கு ஈர்ப்பு விசைய பத்தி தெரியறதுக்கு வாய்ப்பே இல்லீங்க!



காட்டுமிராண்டி குறிமதத்தான்களின் வருகையைத்தான் "1197ல் எல்லாம் முடிஞ்சு போச்சு"-ன்னு சொல்றாருங்க.

அப்புறம், இவரு சொல்றது சரியாப்படலீங்க!

17ம் நூற்றாண்டுலதான் நியூட்டன் ஐயா பொறக்குறாருங்க. மெக்காலே தொர 19ம் நூற்றாண்டுல பொறக்குறாருங்க. அப்புறம், காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது 20ம் நூற்றாண்டுலைங்க. நியூட்டன் ஐயா கண்டுபுடிச்சி, மெக்காலே தொர கல்வித்திட்டம் போட்டு, மக்களாட்சி வந்து, உத்தமருங்க ஆட்சில உக்காந்து, சாதிய வெச்சு மேல வந்தவங்க புத்தகம் எழுதி, அத நாம தொறந்து, சாதிகள் இல்லையடி பாப்பான்னு படிச்சு, பொறவுதானுங்க ஈர்ப்பு விசைய பத்தி தெரிஞ்சுகிட்டோம். எப்புடி 12ம் நூற்றாண்டுலேயே நம்மாளுங்க ஈர்ப்பு விசைய பத்தி சண்ட போட்டிருக்க முடியும்?

எல்லாத்தும் மேல, நேர்மையா போர் செஞ்ச வாஸ்கோட காமா நம்மள கண்டுபுடிச்சதே 16ம் நூற்றாண்டோட தொடக்கத்துலைங்க. அதுவரைக்கும் நம்மள பத்தி நமக்கே தெரியாதுங்க. அப்புறம் எப்புடி ஈர்ப்பு விசைய பத்தி நாம தெரிஞ்சுகிட்டிருக்கமுடியுங்க?

இவரு சொல்றது தப்புங்க. பகுத்தறிவோட சிந்திக்கணுமுங்க!!

😂😂✊🏽👊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽😌

Monday, February 27, 2023

திரு மறைக்காட்டு மணாளர் & திருமறைக்காடு திருக்கதவு திறந்து மூடும் திருவிழா



திரு மறைக்காட்டு மணாளர் (திருமறைக்காடு (வேதாரண்யம்) கருவறை உடையவர்) என்ற இறையுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது... தொன்ம கதைகளில் இடம்பெற்றவரும், பெரும் புகழ் பெற்றவருமான திரு விசுவாமித்திர மாமுனிவர்!! 🌺🙏🏽🙇🏽‍♂️

நம் சமயத்தில் 108 என்ற எண் தனிச்சிறப்பு பெற்றது. அந்த சிறப்பை வழங்கியவர் இவரே. "நம் புவிக்கும் நம் திங்களுக்கும் இடையோன தூரம் 108 திங்கள்கள்", மற்றும், "நம் புவிக்கும் நம் பகலவனுக்கும் இடையோன தூரம் 108 புவிகள்" என்ற இரு இயற்பியல் கண்டுபிடிப்புகளும் இவருடையதாகும்.

மேலும், மற்ற விண்மீன்களிடமிருந்து மாறுபட்டு இயங்கிக்கொண்டிருந்த ஒரு விண்மீனை ஆராய்ந்தவர். இவரது இச்செயலை "திரிசங்கு சொர்க்கம்" என்ற புனைவாக நம் பெரியவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இவற்றிலிருந்து இப்பெருமான் ஒரு சிறந்த விண்ணியல் ஆய்வாளராக இருந்துள்ளார் என்பதை அறியலாம்.

உடையவரின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவை புடைப்பாக அமைத்துள்ளனர். எனில், இம்மாமுனிவர் திருக்கயிலாயக் காட்சியை கண்டவர் என்பது பொருளாகும். அதாவது, வையகக் காட்சியை "கண்கூடாகக்" கண்டவர் என்பது பொருளாகும்.

oOo


"மனிதவுருத் தாங்கிய நான்மறைகள்" மூடிவிட்டுச்சென்ற இத்திருக்கோயிலின் திருக்கதவை திரு அப்பர் பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ திரு திருஞானசம்பந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிகங்கள் பாடி, திறந்து மூடி பொதுப் பயன்பாட்டைத் துவங்கிவைத்தனர். இந்நிகழ்வை நினைவுகூறும் "திருக்கதவு திறந்து மூடும் திருவிழா" கடந்த 22 பிப்ரவரி அன்று நடந்துள்ளது.

ஒருவர் ஒரு துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தால் அவரை:

- நடமாடும் "அத்துறையின் பெயர்"
- அத்துறையின் அரசர்
- அத்துறையே மனிதவுரு தாங்கிவந்தது போன்று

என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறோம். இதுபோன்றதுதான் "மனிதவுருத் தாங்கிய நான்மறைகள்" என்பதுமாகும். நான்மறைகளில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தோர் கதவை மூடிவிட்டுச்சென்றுள்ளனர். பின்னர் வந்த நாயன்மார்கள் பதிகங்கள் பாடி திறந்துள்ளனர்.

இப்பகுதியில் திரு விசுவாமித்திர மாமுனிவர் கல்விச்சாலை நடத்தியுள்ளார். ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். அவர் விட்டுச்சென்ற பணிகள் பல காலம் தொடர்ந்திருக்கும். ஒரு சமயத்தில் [திருமறைக்]"காடாகி"யிருக்கும்.

1 மரம் = மரம்
சில மரங்கள் = மரங்கள்
பல மரங்கள் = காடு

ஒருவர் தொடங்கிவைத்தது, பல்கிப் பெருகி, பல குடும்பங்களையும், பல நூறு மாணவர்களையும் கொண்ட இடமாக - காடாக - வளர்ந்திருக்கும். கால மாற்றத்தால், ஒரு சமயத்தில், கல்வியை கற்பிக்க முடியாமலும், ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமலும் போயிருக்கும். மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

oOo

பல சிறப்புகளைக்கொண்ட இத்திருக்கோயிலில்தான் "வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் புகழ்பெற்ற கோளறு பதிகத்தை காழியூர் பிள்ளை பாடினார்!

oOo

🌷 திருமறைக்காடு - திரு விசுவாமித்திர மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
🌷 திட்டக்குடி - திரு வசிஷ்ட மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
🌷 திருவான்மியூர் - திரு வான்மீகி மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
...

பெயர்களை ஆரியமாக்கிவிடுவதால் அப்பெருமான்கள் ஆரியர்களாகிவிடமாட்டார்கள். தமிழரென்று அவர்களை ஆரியர்களால் தவிர்க்கவும்முடியாது. ஏனெனில், அவர்களது பங்களிப்பு அத்தகையது. 😎

என்றும் வாய்மையே வெல்லும்! 💪🏽

(படங்கள்: திரு தமிழ்பிரியன், முகநூல்)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Thursday, February 16, 2023

நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்?



ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திவிட்டு, வெளியேறும் முன், இணைக்கப்பட்டுள்ள விளம்பரம் வந்தது. நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்? வடமொழிகளை எதிர்ப்பதாக படங்காட்டும் திராவிடியாள் கூட்டம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா?

குறிமதத்து நிறுவனங்கள் எனில் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), பெண்ணுறுப்பு (கலவி நிலைய நுழைவாயில்), ஆணுறுப்பு (மினார்) என்பதோடு இப்போது கோழிக்கிறுக்கலும் சேர்ந்துள்ளது.

பெரும்பாலான குறிமதத்து நிறுவனங்கள் தங்களது மத அடையாளங்களை மறைக்கும்; அல்லது, அடக்கி வாசிக்கும். இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

🏢 ஹிமாலயா - மென்மையான பச்சை நிறத்தை மட்டும் பயன்படுத்துவார்கள். மற்றபடி, இதொரு குறிமத நிறுவனம் என்பது பொதுமக்களுக்கு தெரியாது.

🏢 ID (தோசைமாவு, சப்பாத்தி, பரோட்டா...) - ID என்ற எழுத்துகளை ஆண்குறி திறப்பு (பிறைநிலா) போன்று வடிவமைத்திருப்பார்கள். அடர் பச்சை பயன்படுத்தியிருப்பார்கள். சற்று சிந்தித்தால், இதொரு குறிமத நிறுவனம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

🏢 iDrive - அடர் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு போன்று வடிவமைக்கப்பட்ட iD எழுத்துகள், மற்றும், கோழிக்கிறுக்கல். "இதொரு குறிமத நிறுவனம்" என்று பறையறிவிக்காத குறைமட்டுமே!

ஒரு வகையில், இப்படி பறையறிவிப்பது போன்று நடந்துகொள்வது நல்லது. நாம் முடிவெடுக்க வசதியாகவிருக்கும்.

oOo

பல உருவங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டே, "உருவ வழிபாட்டை அறவே எதிர்ப்பவர்கள் நாங்கள்" என்று பீற்றிக்கொள்வார்கள் குறிமதத்தவர்கள். அதிலும், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), கருநிற கனசதுரம் எனில் அவ்வளவுதான்! உருகிவிடுவார்கள்.

பிறைநிலா என்ற உருவத்தை கண்டதும் அவர்களுக்கு ஆண்குறி திறப்பு நினைவுக்கு வரவேண்டும். ஆண்குறி திறப்பு என்றதும் உடலுறவின் இறுதியில் நடக்கும் விந்து வெளியேற்றம் நினைவுக்கு வரவேண்டும். விந்து வெளியேற்றம் என்றதும் அச்சமயம் ஆண்மகன் ஓரிரு நொடிகளுக்கு உடலுணர்வு இழப்பது நினைவுக்கு வரவேண்டும். அந்த துய்ப்பை (ஆரியத்தில் "அனுபவத்தை") நினைவில் நிறுத்தவேண்டும்! 😮

புறமுகமாக செல்லும் கண்ணோக்கத்தை அகமுகமாக நம் மீது (தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டு, அப்படியே இருக்கவேண்டும். அவ்வளவுதான்! இதற்கு எதற்கு பலானதை நினைக்க வேண்டும்? மூக்கை தொடவேண்டுமெனில், நேராக மூக்கில் கையை வைக்கவேண்டும். ஏன் எங்கெங்கோ சுற்றி, மூக்கை தொடவேண்டும்?

🌷 தன்னை உபாதிவிட்டு ஓர்வதுதான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

இந்த ஒரு பாடலில் நாம் என்ன செய்யவேண்டும், ஏன் செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 தூஉய்மை என்பது அவாவின்மை

மூன்றே சொற்களில் இறைநிலை என்பது எது, அதையடைய என்ன செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் திரு முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

நம் மெய்யியலாளர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்களே! 💪🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, February 13, 2023

கொழுக்கட்டையும் ஹைத்தலக்கடியும்!! 😀



உங்க மதம் மட்டுமில்ல, பாய். உலகத்துல இருக்கிற, இருந்த எல்லா மதங்களுக்கும் தாய்மண் பாரதம்தான். எல்லாத்துக்குமான விதைங்க இங்கிருந்துதான் போச்சு. என்ன, சில விதைங்க, போற வழியில கெட்டுப் போச்சு; சில விதைங்க போய் சேர்ந்த எடத்தினால கெட்டுப் போச்சு. உங்க எடத்தில அசல் காட்டுமிராண்டிங்க வாழ்ந்தாங்க. அவுகளுக்கேத்த மாதிரி பலான ஐயிட்டங்கள சேத்துக் கொடுத்திட்டாரு உங்க ஆளு. ஒரு கத சொல்றேன்; கேளுங்க, பாய்.

oOo

அவன் ஒரு சரியான மூடன். புதிதாக திருமணமானவன். ஏதோ ஒரு வேலைக்காக ஓர் ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த ஊருக்கு அருகில்தான் அவனது மாமியார் வீடு இருந்தது. வேலையை முடித்துவிட்டு, தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வரும்படி அவனது மனைவி கேட்டுக்கொண்டதால், அவனும் மாமியார் வீட்டிற்கு சென்றான்.

புது மாப்பிள்ளை என்பதால் தடபுடலாக வரவேற்று, பல வகையான சிற்றுண்டிகளை பரிமாறினர். அவற்றில் கொழுக்கட்டை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி மாமியாரிடம் கேட்டான். அவரும் அது பற்றி விளக்கிவிட்டு, உடன், தனது மகள் மிக நன்றாக கொழுக்கட்டை செய்வாள் என்பதையும் கூறினார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும்போது, "கொழுக்கட்டை" என்ற பெயர் மறவாதிருக்க, அதை சொல்லிக்கொண்டே வந்தான்.

இடையில் ஒரு சிறு கால்வாய் வந்தது. அதிலொரு பாம்பும் இருந்தது. இவனை தாண்டவிடாமல் சீறியது. இவன் சற்று சிந்தித்துவிட்டு, பின்னே வந்து, வேகமாக ஓடி, "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே குதித்து, கால்வாயை தாண்டினான். பாம்பிடமிருந்து தப்பினான். தப்பித்த மகிழ்ச்சியில் "ஹைத்தலக்கடி" என்று திரும்ப திரும்ப கூவிக்கூத்தாடினான். கூத்தாடியதில் "கொழுக்கட்டை" என்ற பெயரை மறந்துபோனான். "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே ஊர் போய் சேர்ந்தான்.

வீடு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, தனது மனைவியிடம் "ஹைத்தலக்கடி" சமைத்து தரச்சொன்னான். அவள், அது பற்றி தனக்கு தெரியாது என்றும், அப்படியொரு உணவை சமைத்ததேயில்லை என்றும் சொன்னாள். இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மனைவி தன்னிடம் பொய் சொல்கிறாள் என்று கருதி, அவளை நையப் புடைத்தான்.

மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து, அவனிடமிருந்து மனைவியை காப்பாற்றிவிட்டு, நடந்ததை கேட்டனர். அவனும் சொன்னான். ஒருவருக்கும் ஹைத்தலக்கடி பற்றி தெரியவில்லை. இதற்குள் மனைவியின் தலை, முகமெல்லாம் வீங்கிப்போனது. அதை பார்த்த ஒருவர், "வேற ஏதாச்சும் சமைச்சு தரச் சொல்லவேண்டியதுதானே. இப்பிடி அடிச்சு, கொழுக்கட்ட மாதிரி வீங்க வெச்சுட்டியே!" என்றார். அதைக்கேட்ட அந்த மூடன், "ஆங்! கொழுக்கட்ட! கொழுக்கட்ட!!" என்று மகிழ்ச்சி பொங்க சொல்லிவிட்டு, நடந்ததைக் கூறினான்.

இப்போது, அவனது மனைவிக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் எப்படியிருந்திருக்கும்? 😛

கதையின் நீதி: மூடனிடம் செய்தி சொல்லாதே!

oOo

இது மாதிரிதான், பாய், பாலைவன மதங்களோட கதை. இங்கிருந்து போன கொழுக்கட்டைங்க, ஹைத்தலக்கடிகளா மாறிப்போச்சு. ஒன்னு என்னடான்னா, "ஹைத்தலக்கடி நல்லது. சுவைத்துப் பாருங்கள்."-ன்னு சொல்லுது. நீங்க என்னடான்னா, "ஹைத்தலக்கடி மிகப் பெரிது"-ன்னு சொல்றீங்க. ஆனா, ரெண்டுபேருமே ஹைத்தலக்கடி பாரதத்துலதான் தோன்றிச்சுன்னு அடம்புடிக்கிறீங்க. கொழுக்கட்டய கண்டுபுடிச்சு, எல்லாரும் சாப்டுட்டு நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்ச எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்.

வரலாறு தரும் பாடம்: காட்டுமிராண்டிகளையும், மறை கழன்றவர்களையும் பண்படுத்த முயற்சிக்காதே!

தொடக்கமுடையது முடிவடைந்தே தீரும்.
தோன்றியது மறைந்தே தீரும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸