Monday, March 6, 2023

திருக்குறள் #28 (நீத்தார் பெருமை): நிறைமொழி மாந்தர் பெருமை...



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

-- திருக்குறள் #28 (நீத்தார் பெருமை)

🔸 நிறைமொழி மாந்தர் - மனமழிந்தவர் / தன்னையுணர்ந்தவர். இவர்களால் மட்டுமே உள்ளபொருளை பற்றி சரியாக எடுத்துக்கூறமுடியும்.

உள்ளபொருள் - முழுபொருள் - நிறைபொருள். இது பற்றிய மொழி நிறைமொழி.

சில நிறைமொழி மாந்தர்:

🙏🏽 பகவான் இரமண மாமுனிவர்
🙏🏽 திருவள்ளுவர்
🙏🏽 ஒளவையார்
🙏🏽 கபிலதேவர்
🙏🏽 நம்பியாண்டார் நம்பி

🔸 மறைமொழி - நீரிலிருந்தும் நீரையுணராத மீனுக்கு நீரைப் பற்றி எப்படி நேரடியாக எடுத்துக்கூறமுடியும்? மறைமுகமாக குறிப்பால்தான் உணர்த்தமுடியும்.

மறைமொழி - உள்ளபொருளை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தும் மொழி.

மேற்கண்ட நிறைமொழி மாந்தரிடமிருந்து வெளிப்பட்ட சில மறைமொழிகள்:

🌷 தன்மையின் உண்மையை தான் ஆய, தன்மை அறும்
🌷 தூஉய்மை என்பது அவாவின்மை
🌷 [சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாத] ... என்னை யறிவித்து எனக்கருள் செய்து
🌷 [விநாயகனே வெவ்வினையை வேரறுக்க] ... தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
🌷 [என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்து] ... தன்னை நினையத் தருகின்றான்

இம்மறைமொழிகளைக் கொண்டு மேற்கண்ட மெய்யறிவாளர்களின் பெருமையை உணரலாம்.

மக்களிடம் (நிலத்தில்) பயன்பாட்டிலிருக்கும் மறைமொழிகளைக் கொண்டு, அவற்றை வெளியிட்ட நிறைமொழி மாந்தரின் பெருமைகளை உணரலாம். 🙏🏽

oOo

மறைமொழி என்றதும் ஆரியம் நினைவுக்கு வருமாறு கைங்கரியம் செய்துள்ளனர். இந்த சீர்கேடெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்துள்ளது. அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல; உண்மையான மறைமொழியுமாகும். 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment