Wednesday, March 1, 2023

நியூட்டனுக்கு முன்னாடியே நமக்கு ஈர்ப்பு விசைய பத்தி தெரியறதுக்கு வாய்ப்பே இல்லீங்க!



காட்டுமிராண்டி குறிமதத்தான்களின் வருகையைத்தான் "1197ல் எல்லாம் முடிஞ்சு போச்சு"-ன்னு சொல்றாருங்க.

அப்புறம், இவரு சொல்றது சரியாப்படலீங்க!

17ம் நூற்றாண்டுலதான் நியூட்டன் ஐயா பொறக்குறாருங்க. மெக்காலே தொர 19ம் நூற்றாண்டுல பொறக்குறாருங்க. அப்புறம், காந்தி தாத்தாவும், நேரு மாமாவும் நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது 20ம் நூற்றாண்டுலைங்க. நியூட்டன் ஐயா கண்டுபுடிச்சி, மெக்காலே தொர கல்வித்திட்டம் போட்டு, மக்களாட்சி வந்து, உத்தமருங்க ஆட்சில உக்காந்து, சாதிய வெச்சு மேல வந்தவங்க புத்தகம் எழுதி, அத நாம தொறந்து, சாதிகள் இல்லையடி பாப்பான்னு படிச்சு, பொறவுதானுங்க ஈர்ப்பு விசைய பத்தி தெரிஞ்சுகிட்டோம். எப்புடி 12ம் நூற்றாண்டுலேயே நம்மாளுங்க ஈர்ப்பு விசைய பத்தி சண்ட போட்டிருக்க முடியும்?

எல்லாத்தும் மேல, நேர்மையா போர் செஞ்ச வாஸ்கோட காமா நம்மள கண்டுபுடிச்சதே 16ம் நூற்றாண்டோட தொடக்கத்துலைங்க. அதுவரைக்கும் நம்மள பத்தி நமக்கே தெரியாதுங்க. அப்புறம் எப்புடி ஈர்ப்பு விசைய பத்தி நாம தெரிஞ்சுகிட்டிருக்கமுடியுங்க?

இவரு சொல்றது தப்புங்க. பகுத்தறிவோட சிந்திக்கணுமுங்க!!

😂😂✊🏽👊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽😌

No comments:

Post a Comment