Monday, February 27, 2023

திரு மறைக்காட்டு மணாளர் & திருமறைக்காடு திருக்கதவு திறந்து மூடும் திருவிழா



திரு மறைக்காட்டு மணாளர் (திருமறைக்காடு (வேதாரண்யம்) கருவறை உடையவர்) என்ற இறையுருவின் கீழே திருநீற்று நிலையிலிருப்பது... தொன்ம கதைகளில் இடம்பெற்றவரும், பெரும் புகழ் பெற்றவருமான திரு விசுவாமித்திர மாமுனிவர்!! 🌺🙏🏽🙇🏽‍♂️

நம் சமயத்தில் 108 என்ற எண் தனிச்சிறப்பு பெற்றது. அந்த சிறப்பை வழங்கியவர் இவரே. "நம் புவிக்கும் நம் திங்களுக்கும் இடையோன தூரம் 108 திங்கள்கள்", மற்றும், "நம் புவிக்கும் நம் பகலவனுக்கும் இடையோன தூரம் 108 புவிகள்" என்ற இரு இயற்பியல் கண்டுபிடிப்புகளும் இவருடையதாகும்.

மேலும், மற்ற விண்மீன்களிடமிருந்து மாறுபட்டு இயங்கிக்கொண்டிருந்த ஒரு விண்மீனை ஆராய்ந்தவர். இவரது இச்செயலை "திரிசங்கு சொர்க்கம்" என்ற புனைவாக நம் பெரியவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இவற்றிலிருந்து இப்பெருமான் ஒரு சிறந்த விண்ணியல் ஆய்வாளராக இருந்துள்ளார் என்பதை அறியலாம்.

உடையவரின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவை புடைப்பாக அமைத்துள்ளனர். எனில், இம்மாமுனிவர் திருக்கயிலாயக் காட்சியை கண்டவர் என்பது பொருளாகும். அதாவது, வையகக் காட்சியை "கண்கூடாகக்" கண்டவர் என்பது பொருளாகும்.

oOo


"மனிதவுருத் தாங்கிய நான்மறைகள்" மூடிவிட்டுச்சென்ற இத்திருக்கோயிலின் திருக்கதவை திரு அப்பர் பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ திரு திருஞானசம்பந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிகங்கள் பாடி, திறந்து மூடி பொதுப் பயன்பாட்டைத் துவங்கிவைத்தனர். இந்நிகழ்வை நினைவுகூறும் "திருக்கதவு திறந்து மூடும் திருவிழா" கடந்த 22 பிப்ரவரி அன்று நடந்துள்ளது.

ஒருவர் ஒரு துறையில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தால் அவரை:

- நடமாடும் "அத்துறையின் பெயர்"
- அத்துறையின் அரசர்
- அத்துறையே மனிதவுரு தாங்கிவந்தது போன்று

என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறோம். இதுபோன்றதுதான் "மனிதவுருத் தாங்கிய நான்மறைகள்" என்பதுமாகும். நான்மறைகளில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தோர் கதவை மூடிவிட்டுச்சென்றுள்ளனர். பின்னர் வந்த நாயன்மார்கள் பதிகங்கள் பாடி திறந்துள்ளனர்.

இப்பகுதியில் திரு விசுவாமித்திர மாமுனிவர் கல்விச்சாலை நடத்தியுள்ளார். ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். அவர் விட்டுச்சென்ற பணிகள் பல காலம் தொடர்ந்திருக்கும். ஒரு சமயத்தில் [திருமறைக்]"காடாகி"யிருக்கும்.

1 மரம் = மரம்
சில மரங்கள் = மரங்கள்
பல மரங்கள் = காடு

ஒருவர் தொடங்கிவைத்தது, பல்கிப் பெருகி, பல குடும்பங்களையும், பல நூறு மாணவர்களையும் கொண்ட இடமாக - காடாக - வளர்ந்திருக்கும். கால மாற்றத்தால், ஒரு சமயத்தில், கல்வியை கற்பிக்க முடியாமலும், ஆய்வுகளை மேற்கொள்ள முடியாமலும் போயிருக்கும். மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.

oOo

பல சிறப்புகளைக்கொண்ட இத்திருக்கோயிலில்தான் "வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் புகழ்பெற்ற கோளறு பதிகத்தை காழியூர் பிள்ளை பாடினார்!

oOo

🌷 திருமறைக்காடு - திரு விசுவாமித்திர மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
🌷 திட்டக்குடி - திரு வசிஷ்ட மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
🌷 திருவான்மியூர் - திரு வான்மீகி மாமுனிவரின் உறைவிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️
...

பெயர்களை ஆரியமாக்கிவிடுவதால் அப்பெருமான்கள் ஆரியர்களாகிவிடமாட்டார்கள். தமிழரென்று அவர்களை ஆரியர்களால் தவிர்க்கவும்முடியாது. ஏனெனில், அவர்களது பங்களிப்பு அத்தகையது. 😎

என்றும் வாய்மையே வெல்லும்! 💪🏽

(படங்கள்: திரு தமிழ்பிரியன், முகநூல்)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment