Showing posts with label காணும் பொங்கல். Show all posts
Showing posts with label காணும் பொங்கல். Show all posts

Sunday, January 14, 2024

இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽


🔥 போகி - பற்றுகளை விட்டொழித்தல்

🍚 பொங்கல் - மெய்யறிவு பெறுதல். நமக்கே தோன்றும் அறிவாக கொள்ளலாம். பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் (பொங்கி வழியும்) அறிவுரையாகவும் கொள்ளலாம்.

🎪 வாடி வாசல் - வாடிய வாசல் - மனம் வாடினால்தான் எண்ணங்கள் தோன்றும் - காளைகள் வெளிப்படும்.

🐂 ஜல்லிக்கட்டு - மனதை அடக்குதல்

🐮 மாட்டுப்பொங்கல் - மெய்யறிவில் நிலைபெறும் முயற்சிகள் / நிலைபெறுதல்.

🎪 காணும் பொங்கல் - நிலைபேறு அடைந்து, திரு மணிவாசகப் பெருமான் குறிப்பிடும் "சூழ்ச்சியில்லா காட்சியை" கண்டு, களித்து & இருத்தல்.

அனைவருக்கும் எனது உளங்கனிந்த, இனிய போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்!! 😍🥳



🔥 மனதிலுள்ள குப்பைகளை போக்கி (போகி),

🍚 நமது தன்மையுணர்வாய் எக்கணமும் விளங்கும் உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு (பொங்கல்), 

⛏️ வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து (யாரிடமும் இரவாமலும், வந்து இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமலும்), 

🛕 வேண்டுதலும் வேண்டாமையும் இல்லா நிலைபேற்றினை (சிவம்) அடைந்து, வருவதை கண்டு களித்திருப்போம் (காணும் பொங்கல்)!!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽