🔸 முருகரும் தென்னாடுடையவனே!
🔸 அன்னையும் தென்னாடுடையவனே!
🔸 பெருமாளும் தென்னாடுடையவனே!
🔸 மொட்டையரும் பிறந்தமேனியரும் குறிப்பிடும் பாழும் தென்னாடுடையவனே!
🔸 சைத்தான்களுடையதும் தென்னாடுடையவனே!
🔸 சாத்தான்களுடையதும் தென்னாடுடையவனே!
🔸 மேற்கண்ட இருவரிடமும் பொரை பெறும் பான்பராக் & கூவஞ் சட்டைகள் குறிப்பிடும் இயற்கையும் தென்னாடுடையவனே!
🔸 பொரை பெறுவோரால் கொம்பு சீவப்பட்டோர் குறிப்பிடும் இயற்கையும் தென்னாடுடையவனே!
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாமனைவருமே தென்னாடுடையவன்தான்!
oOo
🌷 எது எப்போதும் நம்மை விட்டு நீங்காதோ அதுவே தென்னாடுடையவன்!
🌷 எது எப்போதும் மாறாதோ அதுவே தென்னாடுடையவன்!
🌷 எது எப்போதும் இன்னொருவரின் / இன்னொன்றின் சான்றில்லாமல் உணரப்படுகிறதோ அதுவே தென்னாடுடையவன்!
எது அது?
நமது தன்மையுணர்வே அது!
(கடவுளில்லை என்று சொல்பவனும் தானில்லை என்று சொல்லமுடியுமா? -- திரு சாதுஓம் பெருமான்)
oOo
🌷 நாடு - பக்கம்
🌷 தென்னாடு - தென்படும் பக்கம்
🌷 தென்படுவது - மனம், உடல், நம் முன்னே விரியும் பார்
🌷 தென்படுவதை உடையது? தென்படாதது.
🌷 தென்படாதது - நமது தன்மையுணர்வு. நம்மை நாம் உணர மட்டுமே முடியும்.
🌷 தென்படாதது = தென்படுவதை உடையது
🌷 தென்னாடுடையது - தென்னாடுடையவன் - தென்படும் யாவற்றையும் உடையவன்!!
oOo
பிள்ளையாரின் வடிவம் உணர்த்துவது:
🌷 யானை வடிவம் - நினைவுகளின் தொகுப்பே நீ
🌷 பாசக்கயிறு - பற்றுகளில் சிக்கிக்கொள்பவனும் நீயே!
🌷 அங்குசம் - பற்றுகளை அறுத்தெரிபவனும் நீயே!
🌷 ஒடித்த தந்தம் - உன் வாழ்க்கையை எழுதுபவனும் நீயே!
மொத்தத்தில், அவ்வடிவம் உணர்த்துவது: உன் வாழ்க்கை உன் கையில்!
மேற்கண்ட கண்ணோட்டத்தை உடைய பெருமான்கள் உடலுகுத்த பிறகு, அவர்தம் திருவிடங்களுக்கு மேல் பிள்ளையார் சிலைகளை வைப்பர். நிற்க.
கண்ணோட்டத்தை உடையவர் யார்? எதையும் உடையவர் யார்? 😏
(திரு ஆதிகும்பேசுவரர், செண்பகபுரம், கீவளூர், நாகை)
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment