Tuesday, July 7, 2026

யார் பொறுப்பு? எய்தவனா? எய்தப்பட்ட அம்பா? 😀


என்ன நாமாசுரவாள், எப்பவுமே திருநெறியிலிருந்து உருவுனத நேரடியா பயன்படுத்தாம, Left<->Right-ன்னு மாத்திப்போட்டு பிசினஸ் பண்ணுவேள். இங்க, திருவாலங்காட்டுக் கூத்தர அப்படியே காபி அடிச்சுட்டேள்! பட்ஜெட் இஷ்யூவா? இல்ல, கம்யூனிகேஷன் கேப்பா? 🤭


oOo

🌷 தமிழரது வடிவம் (கூத்தர்) தெரிவிப்பது

புறமுகமாக செல்லும் நமது கண்ணோட்டத்தை அகமுகமாக நம் மீதே (நமது தன்மையுணர்வின் மீதே) திருப்பி, "நான் இன்னார்" என்ற காதணியை கழட்டுவேண்டும்.

🌷 திராவிஷத்தவரின் வடிவம் (மூவடி) தெரிவிப்பது

ஒரு பெருமானை நாடி, அவரிடமிருந்து குறளனை (அறிவுரையை) பெற்று, அக்குறளனை நம்முள் மூவடியாக வளரவிடவேண்டும். அதாவது, நனவு, கனவு & தூக்கம் என்று எல்லா நிலைகளிலும், இடையறாது சிந்திக்கவேண்டும். ஒரு சமயத்தில், மெய்யறிவு கிட்டும்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment