Friday, July 17, 2026

அசுரபாடசாலை விதி #102: பழமையும் பெருமையும் சேர்ப்பதெப்படி? 😜


இராமாயணம், திரேதயுகம், வாலி போன்ற "வஸ்துக்களை" சேர்த்து தலபுருடா கிண்டினால்,
தாங்கள் தொழில் செய்யும் இடத்திற்கும், தங்களுக்கும் மற்றும் மேற்கண்ட பொருட்களுக்கும் பழமையும் பெருமையும் சேருமென்பது அசுரரின் கணக்காகும்! 😏

🔸 இராமாயணப் பொழுது = வீடுபேறு அடைவதற்கு முந்தைய பொழுது.

🔸 வாலியால் வழிபடப்பட்ட = மனதால் வழிபடப்பட்ட.

🔸 திரேத யுகம் = 3 பொருட்களால் ஆன பொழுது. காண்பான், காணப்படும் செயல் & காட்சி.

இராமாயணப் பொழுதில் / திரேத பொழுதில் வாலியால் வழிபடப்பட்ட திருமேனி = மெய்யறிவு அடையாத நம்மை போன்றொருவரால் வணங்கப்பட்ட திருமேனி!!

ஒன்று, அக்கோவில் உயிர்ப்புள்ள கோவிலல்ல. அதாவது, அங்கு எந்த பெருமானும் குடி கொண்டிருக்கவில்லை. எனவே, கோவிலுக்கு பழமையும் பெருமையும் சேர்ப்பதற்காக மேற்கண்ட பொருட்களை சேர்த்திருக்கின்றனர்.

அல்லது, அது உயிர்ப்புள்ள கோவிலாக இருக்கலாம். ஆனால், அங்கு குடி கொண்டிருக்கும் பெருமானை பற்றி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இவர்களாகவே மேற்கண்ட பொருட்களை சேர்த்திருக்கின்றனர்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment