Sunday, November 24, 2019

#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!

https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று  திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎

எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ...  வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺

சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒

தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

-- குறள் #319

வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!

🌸🏵️🌼🌻💮

"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.

(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)

"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.

🌸🏵️🌼🌻💮

அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.

மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.

எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?

இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):

"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.

(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment