Saturday, November 30, 2019

"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!




வைணவராக கருதப்படும் நம்மாழ்வாரின் 🌺🙏🏽 பாடல்களை பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 பல முறை மேற்கோள் காட்டியதுண்டு. ஒரு சமயம், பகவான் பொன்விழா கொட்டகையில் இருக்கும் போது "#உள்ளது #நாற்பது" எழுதியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது டி கே சுந்தரேசய்யர் "உள்ளது நாற்பதின் முதல் பாட்டில் வரும் 'உள்ளது' என்னும் சொல் பரம்பொருள், மெய்பொருள், இதயம் போன்றவற்றைக் குறிக்கின்றது. இச்சொல்லை இதுவரை இப்பொருள்களைக் குறிக்கும்படி யாராவது தம் பாடல்களில் கையாண்டிருக்கிறார்களா? அல்லது, பகவான் தான் முதன்முதலாக பயன்படுத்தினாரா?", என்று கேட்டார். 

அதற்கு பகவான், “இல்லாதது வராது” என்று கூறிவிட்டு, “ஏன்,  நம்மாழ்வாரின் பாசுரங்களில் கூட இருக்கிறதே!” என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து பின்வரும் பாடலை எடுத்துக்காட்டினார்:

உளனெனில் உளன்அவன் உருவம்இவ் வுருவுகள்
உளனலன் எனில்அவன் அருவமிவ் வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன்இரு தகைமையொ டொழிவிலன் பரந்தே

-- திருவாய்மொழி #9


(பரம்பொருளை உளன் - உள்ளவன் - என்று குறிப்பிடும் போது ஆண்பாலாகி விடுகிறது. அனைத்துச் சமயங்களும் இப்படித்தான் குறிப்பிடுகின்றன. ஆனால், பகவான் உள்ளது / உள்ளபொருள் என்று குறிப்பிட்டு பரம்பொருளின் பாலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறார்.)

மேலும், பகவான் தொடர்ந்தார், "வைணவ மதத்தைப் பற்றிய வாத விவாதங்களுக்கு நம்மாழ்வார் பாசுரங்களை சில வைணவர்கள் மேற்கோளாக பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அவை பெரும்பாலும் அத்வைதத்தைக் வெளிப்படுத்தும். ஆகையால், அவர்களது வாதத்திற்குச் சரிப்பட்டு வராது. இதனால், இவர்களிடையே, '#நம்மைக் #கெடுத்தான் #நம்மாழ்வான்' என்ற வாசகம் வழக்கிலுள்ளது!! 😛 நம்மாழ்வாரின் பாசுரங்கள் பரம்பொருளைப் பற்றிக் கூறும்போது (சீவனிலிருந்து) வேறுபடுத்துவதில்லை."

🌸🏵️🌼🌻💮

பகவான் புகழ் பெறாத ஆரம்ப காலத்தில் வைணவர்கள் வந்து அவரவர் காப்புரிமையை (U, V நாமங்கள்) பகவானது நெற்றியில் போட்டுவிட்டு செல்வர். 🤭 பகவானும் அமைதியாக இருந்து விட்டு, அவர்கள் சென்ற பின் அழித்து விடுவார். 😃 சற்று புகழ் பெற ஆரம்பித்த பின், வைணவர்கள் வாதம் புரிய வருவர். ஒரே பதிலில் அல்லது ஒரே பதில்-கேள்வியில் அவர்களை தலைதெறிக்க ஓடவிடுவார் 😁 (பரங்கிச் சர்ச்சியர்களுக்கும் இது போன்று அருள் புரிந்திருக்கிறார் 😍). பகவானைப் போன்று நம்மாழ்வார் இருந்திருக்கமாட்டார். மூகாம்பிகையாக"நம்மைக் கெடுத்தான் நம்மாழ்வான்"!!!இருந்திருப்பார். இதனால், காப்புரிமை, திரைக்கதை ("செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...") என பல கைங்கர்யங்கள் செய்து நம்மாழ்வாரை வைத்து தொழிலில் நிலை பெற்றுவிட்டார்கள். 😒

🌸🏵️🌼🌻💮

நம்மாழ்வார் பரம்பொருளை "அடங்கப் பிடித்தேனே" என்கிறார். மணிவாசகப் பெருமானோ "சிக்கெனப் பிடித்தேன்" என்கிறார். பேயாரோ "உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்" என்கிறார்.

யார் யாரை அடங்கப் பிடிப்பது / சிக்கெனப் பிடிப்பது / மறவாதிருப்பது? எப்படிப் பிடிப்பது / மறவாதிருப்பது? பல பொருட்களா இருக்கின்றன? ஒன்று மற்றொன்றை பிடிப்பதற்கு / மறவாதிருப்பதற்கு. இருப்பது ஒரு பரம்பொருள் தான். அதுவே யாதுமாகி இருக்கிறது. அது எவ்வாறு தன்னைத் தானே பிடிப்பது / மறவாதிருப்பது? இவற்றிற்கெல்லாம் விடையாக பகவான் அளிப்பது, "உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல் (பிடித்தல், மறவாதிருத்தல்)". இந்த 4 சொற்களை சுருக்கினால், தாயுமான சுவாமிகளின் மெய்யாசிரியர் மெளன குரு சுவாமிகள் அருளிய "சும்மா இரு" கிடைக்கும். இந்த சும்மாவும் வேண்டாம் என்றால் பகவானின் "இரு" என்பது எஞ்சி நிற்கும். இருத்தலே பிடித்தலும், மறவாதிருத்தலும், உள்ளலும் ஆகும்!! 😍

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment