Monday, July 3, 2017

தமிழகத்தை துண்டாக்கியாவது ஆள துடிக்கும் மஸ்தான்!! 😡😡

http://tamil.oneindia.com/news/tamilnadu/delhi-conisder-demand-tn-bifurcation-288265.html

புராணங்களில் அசுரர் பிறப்பு பற்றிய ஒரு கதை உண்டு...

ஒரு அந்திப் பொழுதில் ஒரு முனிவரின் மனைவிக்கு கலவி கொள்ளும் இச்சை தோன்றுகிறது. தன் கணவரான முனிவரிடம் இதை தெரிவிக்கிறார். முனிவர் பொழுது சரியில்லை என்று எடுத்துச் சொல்லியும் மனைவி கேட்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தவே, முனிவர் இணங்குகிறார். மனைவியின் இச்சையைத் தீர்க்க, மூர்க்கமாக செயல்படுகிறார். இத்தகைய சேர்க்கையினால் அசுர குலம் தோன்றுகிறது.

இந்தக் கதையில் ஓட்டைகள் பல இருந்தாலும், பெரியவர்கள் சொல்லி வைத்த செய்தி என்னவெனில், பிள்ளைப்பேறுக்காக இணைபவர்கள், காலம் பார்த்து, நல்ல எண்ணங்களுடன், சாந்தமாக இணையவேண்டும் என்பது தான். ஒரு விதத்தில் இது சமைத்தலுக்குச் சமம். எவ்வாறு நல்ல எண்ணங்களுடன் சமைப்பது, அதை உண்பவர்களுக்கு நன்மையைத் தருமோ, அவ்வாறே கலவி முதல் பேறு வரை நல்ல குணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் நல்ல மகவைப் பெற்றிட உதவும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் தான் பேச்சு வழக்கில், சரியில்லாத நபரை குறித்து சிலர், "என்ன நெனச்சு இவன பெத்தாங்களோ தெரியல" என்று அங்கலாயிப்பர்.

இப்போது மஸ்தானுக்கு வருவோம்...

தினம் தினம் குட்டையைக் குழப்புதல், சதா தேசத்தை கொள்ளையடிப்பதைப் பற்றிய சிந்தனை, ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் உலகம் சுற்றுதல், எதற்கெடுத்தாலும் ஆள்காட்டி விரலை காண்பித்து "கொன்னுபுடுவேன்" என்று மிரட்டுதல், சில்லரை ஆசைகள் (ரூ. 10ல உடை, அமெரிக்க அதிபருக்கு - உலக மகா கொள்ளைக்காரனுக்கு - தேநீர் தயாரித்து வழங்கியது, மார்க் ஜுகர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளியது), மொழி வெறி (வாந்தி திணிப்பு), இன வெறி (துண்டாக்கியாவது தமிழகத்தை ஆள முயற்சிப்பது), துரோகத்தனம் (ஆட்சியைப் பெற பேஜார், மரபணு மாற்றிய விதைகள், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற பல மக்கள் விரோதத் திட்டங்களை நிறுத்துவேன் என்று பீலா தள்ளிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை விரிவுபடுத்தியது) என இவரது "தங்கமான" நடவடிக்கைகளைப் பார்க்கும் போது நம் மனதில் நிச்சயமாகத் தோன்றும் கேள்வி: என்ன நெனச்சுயா பெத்தாங்க இவன?

😛😜😝 😁😂😂

No comments:

Post a Comment