Monday, July 31, 2017

புத்தகம்: அவன் தாள் வணங்கி

"போற்றச் சிவனிருக்க
போதாத காலமென
அக்காள் பொருமினாள்
நெஞ்சம் மருகினாள்!
விரல் பத்தும் வேறொன்றும்
செய்வதில்லை
அருள்பற்றும் அவர்திருக்கை
ஆண்டவனை தொழுதது
விழியிரண்டும் தம்பியை
மீட்டுத்தாவென அழுதது!"

அருமையான வரிகள்!! 👏👌👍🙏

வேண்டுதல் வேண்டாமை இல்லா திருவதிகைப் பெருமானை வேண்டியே அப்பர் பெருமானை இருள் சமணத்திலிருந்து மீட்டார் திலகவதியம்மையார். அங்ஙனமே அப்பெருமானை நாமும் வேண்டுவோம், கொள்ளைக்காரர்களிடமிருந்தும், நயவஞ்சகர்களிடமிருந்தும், மூடர்களிடமிருந்தும், இருள் பர மதங்களிடமிருந்தும் நம் தெய்வ சமயத்தையும், நிறை மொழியையும், மண்ணையும், மக்களையும் மீட்டுத்தாவென்று!! 🌸🙏🌸

(இணைப்பு: தினமலர் - சென்னை - 30/06/2017)

No comments:

Post a Comment