Wednesday, July 19, 2017

ஜூலை 18 - மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய நாள்

சொந்த மக்கள் விரும்பும் பெயரைக் கொண்டு வர எத்தனை போராட்டங்கள், தியாகங்கள்! இது அன்றைய நிலை. இன்றும் ஒன்றும் மாறிவிடவில்லை. அதே மக்கள் அவர்களது வீர விளையாட்டை விளையாட உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அன்று கான்-கிரஸ். இன்று பகல் கொள்ளையர்கள். பெயர்கள் தாம் வேறேயன்றி வாந்தி திணிப்பு முதலான அடிப்படை கொள்கைகளில் இருவரும் ஒருவரே.

எவரிடம் ஆட்சி, பலம் இருக்கிறதோ அவர் அவருடைய மொழி, கலாச்சாரம், மதம், வரலாற்றை ஆள்பவரின் மேல் திணிப்பர் என்பது இயற்கை விதி. அன்று வெள்ளையன். இன்று வாந்தியன்.

அண்மையில் இலண்டனில் நடந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

நம்மவர்கள் நம் மொழியில் தலைப்பிட்டு நடத்திய நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு வாந்திப் பாடல்கள் பாடவில்லை என்று வீராப்பு காட்டியது ஏன்? ஆட்சி, பலம், எண்ணிக்கை அவர்கள் கையில் இருப்பதால். அவை கொடுக்கும் திமிரால்.

இலங்கையில் இலட்சக்கணக்கில் நம்மவர்கள் கொல்லப்பட்ட போது, பெரும்பாலான வாந்தியர்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்? "ஏதோ அடித்துக் கொள்கிறார்கள்" என்பதாகத் தான் இருந்திருக்கும்.

தமிழனின் வளம் வேண்டும். அவனின் வரி வேண்டும். பதிலுக்கு அவனது அடையாளங்களை அழிக்க வேண்டும். எதிர்த்தால், "குறுகிய சிந்தனையுடையவன்", "இறையாண்மைக்கு எதிரானவன்" என்று பட்டங்கள் கட்டவேண்டும்.

கூட்டுக் குடும்பத்தில் நியாயமில்லை எனில் தனிக்குடித்தனம் தான் தீர்வு என்பதை அறியாதவனல்ல தமிழன்.

No comments:

Post a Comment