Tuesday, July 18, 2017

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்!

பலரும் அறிந்த #பழமொழி இது.

ஆனால், இது தவறு!! 👎

சரியான பழமொழி: *ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு ஒரு காலம் வரும்!* 👍

ஆநெய் ஆனை ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. யானை ஆகிவிட்டது. இதையொட்டி, பூநெய் பூனை ஆகிவிட்டது. 😁 (ஒரு படத்தில், கவுண்டமணியின் மகனாக சார்லி வருவார். இவர் குடிகாரர். கீழ்நிலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கவுண்டமணி உள்ளே விழுந்துவிடுவார். அருகில் யாரும் இருக்கமாட்டார்கள். அவ்வழியே வரும் குடிகார சார்லி, நல்லது செய்வதாக நினைத்து தொட்டியின் வாயை மூடிவிடுவார். இது போல், ஆநெய் பேச்சு வழக்கில் ஆனை ஆகியிருக்கலாம். இது தவறு என்று நினைத்த தமிழ் விரும்பி யாரேனும் ஆனையை யானையாக மாற்றியிருப்பார்!! 😂)

*இப்பழமொழி ஒரு மருத்துவக் குறிப்பு!*

#ஆநெய் = ஆ + நெய் = பசுவின் நெய்
#பூநெய் = பூ + நெய் = பூவிலிருந்து உருவாகும் தேன்

"ஓடியாடி நன்றாக உடல் உழைப்பு உள்ள காலம் வரையில் நெய்யை அதிகமாகவும், பின்னர் நெய்யை குறைத்தும், எளிதில் செரிமானமாகக் கூடியதும் மருத்துவ குணம் நிறைந்ததுமாகிய தேனை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளவேண்டும்" என்பது இப்பழமொழியின் பொருள்!! 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

No comments:

Post a Comment