Saturday, February 4, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள்

இணைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். *அருமையாக செதுக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் திருமதி. கிரிஜா!* 👌 அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். 🙏

இதற்கு பாப் தலைகளும், ஃபிரான்சு தாடிகளும் (மேதாவித் தனத்தின் அடையாளங்கள்) என்ன பதில்  கொடுக்கப்போகின்றன? 🤔😁

ஊரை அடித்து உலையில் போட்டும், துரை சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வாய் பொத்தி நிற்கும் கருங்காலி அரசியல்(வி)யாதிகளை வைத்துக் கொண்டும், "என்ன ஆனாலும், வெள்ளக்காரன் எங்க தேவர்களாக்கும்" என்னும் பரங்கி மதத்தினரை வைத்துக் கொண்டும், இன்னும் பல துரோகிகளை உடன் வைத்துக் கொண்டும் என்ன செய்து விட முடியும் நம்மால்? 😑

என்னைப் பொறுத்தவரை இன்று நாம் காணும் அனைத்து அவலங்களுக்கும் மூன்றே தீர்வுகள்:

💥 பரங்கியரின் மொழி, கல்வி, உணவு, மதம், வாழ்க்கை என அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும்.

💥 ஒரு இனத்தை அதன் இனமே ஆளவேண்டும். அப்போது தான் அவ்வினத்தின் அடையாளங்கள், அறிவுப் பொக்கிஷங்கள் காப்பாற்றப்படும்.

💥 இயற்கைச் சார்ந்த சுயசார்பு வாழ்க்கை முறை. பிறக்கும் ஒவ்வொர் மனிதனும் தன் காலிலேயே நிற்க வேண்டும். தனது உணவை, உடையைத் தானே உருவாக்க வேண்டும். தனது கழிவைத் தானே கையாளவேண்டும்.

(ஏலே கோவாலு, கனவு கண்டது போதும். எந்திரிடா! பக்கத்து ஏ.டி.எம்.முல பணம் நெரப்பியிருக்காங்களாம். சீக்கிரம் போடா. 😂😂😂)

🌸🏵🌹💮🌺🌷🌼

*#தீ #மிதித்தல் பற்றி...*

"தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம்" என்னும் #பரங்கியர் (பரங்கி மதத் தேவர்கள்) அமெரிக்காவில் இதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பல கோடிகளை அள்ளுகின்றனர். இதைப் பற்றி ஒரு இடுகையே எழுதியுள்ளேன் (https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/QXVH2DvPLJa) வேப்பிலை ஆடை உடுத்தி, கையில் தீச்சட்டி ஏந்தி, "#செல்லாத்தா செல்ல *மரியாளாத்தா*... எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா" என்று பாடுவது அவர்களது அடுத்த இலக்கு. 😛😜😝

(இணைப்பு: தினமலர் - சென்னை - 04/02/2017)

No comments:

Post a Comment