Sunday, February 5, 2017

​🔯 7 காளைகளை அடக்கிய ஸ்ரீகிருஷ்ணர் 🔯

*பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் 7 காளைகளை அடக்கி #நப்பின்னை பிராட்டியாரை மணந்தார் என்று திருநம்மாழ்வார் பாடுகிறார்.*

உண்மையாகவே ஸ்ரீகிருஷ்ணர் 7 காளைகளை அடக்கினாரா?

ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்தது துவாரப யுக முடிவில். சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னால். #நம்மாழ்வார் வாழ்ந்தது 8 - 9 நூற்றாண்டில். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன். துவாபர யுகத்தில் நம்மிடம் ஜல்லிக்கட்டு இருந்ததா என்று தெரியாது. ஆனால், நம்மாழ்வார் காலத்தில் இருந்துள்ளது. அதை வைத்து தனது பாட்டுடைத் தலைவனை சிறப்பித்துப் பாடியிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீகிருஷ்ணரைப் போன்ற பழமையான ஞானிகளின் வரலாற்றில் வரலாறு, தத்துவம், அறிவியல், மருத்துவம், வானவியல் எனப் பலவும் அடங்கியிருக்கும். இங்கு நம்மாழ்வார் ஆன்மிகத்தைப் பேசுகிறார்.

சைவத்தில் ஒர் ஆன்மாவை 5 உறைகள் போர்த்தியிருப்பதாக வரும். சிதம்பரம் போன்று பெரிய சிவ தலங்களில் உள்ள 5 பிரகாரங்கள் இந்த 5 உறைகளைக் குறிக்கும். வைணவர்கள் இதை சிறிது மாற்றி 7 என்பார்கள் ("அதுக்கும் மேல" 😀). திருவரங்கத்தில் உள்ள 7 பிரகாரங்கள் 7 உறைகளைக் குறிக்கும்.

*இந்த 7 உறைகள் தாம் அந்த 7 காளைகள்!!*

*இவை 7-ம் சேர்ந்து ஒர் உடலாகின்றன. உடலை வெல்வது என்பது "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை வெல்வது (பகவான் ஸ்ரீரமணரின் வார்த்தைகள்). "நான் இவ்வுடல்" என்பது பொய் ஞானம். இதை ஒழித்த பின் கிடைப்பது மெய் ஞானம். இப்படி மெய் ஞானத்தை அடைந்தவர் ஞானி (ஸ்ரீகிருஷ்ணர்) எனப்படுகிறார்.*

ஞானமடைந்த பின் உடலை விடுவதென்பது அனைவருக்கும் நடக்காது. அவ்வுடல் வாங்கி வந்த வரத்தின் படி அது அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துப் பின்னர் இறந்துவிடும். இதற்கு உதாரணம் ஸ்ரீரமணரின் வரலாறு. 16 வயதில் ஞானமடைந்தாலும் 70 வயதில் தான் அவரது உடல் இறந்தது. உடல் இருக்கும் வரை, ஸ்ரீகிருஷ்ணர் (ஞானி) என்ன செய்வார்?

*அவ்வுடலின் ஐம்புலன்கள் வழியாக கிடைக்கும் இன்ப துன்பங்களை ஆனந்தமாய் அனுபவித்துக் கொண்டிருப்பார். அதாவது அந்த ஞானி என்னும் ஸ்ரீகிருஷ்ணர் நப்பின்னை பிராட்டியார் என்னும் புலமகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்!!*

*நப்பின்னை = #புலமகள் = புலன்களின் மகள் = புலன்கள் வழியாக கிடைக்கும் அனுபவம்!!*

*நப்பின்னை = நல்ல பின்னை = நல்ல பின்னே!!*

*முதலின் ஜீவன் உடலை (நிலமகள்) அனுபவிக்கிறது. ஒரு சமயத்தில் அஞ்ஞான இருள் விலகப் பெற்று ஞானம் (மலர்மகள்) பெறுகிறது. அதன் பின்னே புலன்களின் வழியே பெறும் அனுபவத்தை (புலமகள்) ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது.*

*மலர்மகளை கரம் பற்றும் முன் கிடைக்கும் புலன் அனுபவமெல்லாம் அவஸ்தையாகும். மலர்மகளைக் கரம் பற்றிய பின்னர் (ஞானம் அடைந்த பின்னர்) கிடைக்கும் அனுபவமெல்லாம் ஆனந்தமாகும். ஆகையால்,*

*நல்ல பின்னே = நப்பின்னே = நப்பின்னை*

🌺 ஓம் நமோ பகவதே ஸ்ரீவாசுதேவாய 🌺
🌸 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாசலரமணாய 🌸
🔯 திருசிற்றம்பலம் 🔯

🌸🙏🌸🙏🌸🙏🌸

இப்பேருண்மைகளை தமிழரின் சமயத்தை (ஆதிசைவம் / அத்வைதம்) அடிப்படையாகக் கொண்டுதான் விளக்க இயலும். வேறு எதைக் கொண்டும் விளக்க இயலாது. வைணவத்தைக் கொண்டு விளக்க வேண்டுமானால் மஸ்தான் வித்தை தான் காட்டவேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த காலத்தில் வைணவமும் கிடையாது. நாமமும் கிடையாது. வைணவம் தோன்றியது 7 - 9 நூற்றாண்டில். நாமம் உருவாக்கப்பட்டது 11-ஆம் நூற்றாண்டின் இறுதியில். ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர் காலத்தில் இருந்ததெல்லாம் ஒன்று தான் - ஆதிசைவம் / அத்வைதம். இது தமிழரிடமிருந்து தோன்றியவை என்பதால் தமிழரின் சமயம் என்றழைக்கிறேன்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 21/01/2017)

No comments:

Post a Comment