Wednesday, February 15, 2017

திரிபுரம் எரித்தது சிவன் அல்ல! அம்பு!! 😂

இணைக்கப் பட்டிருக்கும் அல்வாவை சுவைத்து விட்டு வாருங்கள்... 😀

முப்புரம் எரித்தது சிவபெருமான் இல்லையாம்! பெருமாள் கொடுத்த அம்பு தான் எரித்ததாம்!! அறிவாளிகள்!!! 😜

அப்படியானால், இராவணனைக் கொன்றது இராமன் இல்லை போலிருக்கிறது. இராமன் எய்த அம்பு. இப்படியே இதை வளர்த்துக் கொண்டு போகலாம். நாட்டில் ஏதாவது கருவியை வைத்து கொலை நடந்தால், அந்தக் கருவியைக் கைது செய்தால் போதும். 😝

"நாங்க அதுக்கும் மேல" என்று படம் காட்டுவதற்காக இப்படி ஒரு பிட்டைப் போட்டிருக்கிறார்கள். *முதலில், சிவன், பெருமாள், சக்தி என்று யாருமில்லை. இவையெல்லாம் தத்துவங்கள். பேருண்மைகளின் வடிவங்கள்.  அண்டத்திலும் பிண்டத்திலும் இயங்குபவை.* பெருமாள் தத்துவத்தை முன்னிறுத்துவதற்காக இப்படிக் கதை விட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். பெருமாள் என்ற வார்த்தை ஒரு காலத்தில் சிவ தத்துவத்தைத் தான் குறித்தது. எப்படி பள்ளிவாசலை முகம்மதியர்களிடமும், மாதாவை சர்ச்சியர்களிடமும் இழந்தோமோ, அப்படியே பெருமாளை வைணவர்களிடம் இழந்தோம். 🙁

*மூன்று கோட்டைகள் (முப்புரம்) என்பது தூல, சூக்கும, காரண உடல்கள் அல்லது கனவு, நனவு, தூக்கம் என்ற நிலைகள் அல்லது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் ஆகும்.* "மூன்று கோட்டைகளும் ஒரு நேர்கோட்டில் வரும் போது ஒரே அம்பினால் மூன்றையும் சிவபெருமான் அழித்தார்" என்பதெல்லாம் உவமானம் தான். *ஒரு ஜீவன் ஞானமடையும் (சிவநிலையை அடையும்) நிகழ்வைத் தான் இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.* "மூன்று மனைவிகளுடைய ஓர் ஆண் இறந்தால், அவனது மனைவியர் ஒவ்வொருவராக கைம்பெண் ஆவரா? அல்லது மூவரும் ஒரே நேரத்தில் கைம்பெண்கள் ஆவரா?" என்று கேட்பார் பகவான் ஸ்ரீரமணர். 👌 🙏 உண்மையில் அழிக்கப்படுவது "நான் இவ்வுடல்" என்ற பொய்யறிவு. இந்தப் பொய்யறிவு அழியத் தேவையான அம்பு - சரியான அறிவு.

*மங்கலான வெளிச்சத்தில், சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் கயிறு பாம்பு போல தோற்றமளிக்கும். நமக்கு பயத்தைக் கொடுக்கும். சரியான வெளிச்சத்தைப் பாய்ச்சியவுடன் கயிறு என்ற உண்மைத் தெரியவரும். நமது பயமும் போய்விடும். இவ்வாறே இந்த உலகம் உன்மையென்றும், நாம் இவ்வுடல் என்றும், நாம் தேடும் நிம்மதி இவ்வுலகில் உள்ள பொருட்களில் உள்ளதென்றும் புறத்தே தேடித்தேடி அல்லல் படுகிறோம். "நாம் இவ்வுடல் அல்ல" என்ற சரியான வெளிச்சம் பட்டவுடன் நம் தேடுதல் நின்று போகிறது. அகத்தே திரும்பி, "நாம் இது வரை தேடியது நம்மையே" என்றுணர்ந்து  தேடுதலும் நின்று போகிறது. தேடுபவனும் அழிந்து போகிறான். இதுவே ஞானம், முக்தி, சமாதி எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. அந்த சரியான வெளிச்சம் - சரியான அம்பு - ஒரு வார்த்தையாக, வாக்கியமாக, காட்சியாக, நினைவாக, எண்ணமாக, சிந்தனையாக என எது வேண்டுமானாலும் இருக்கலாம்.*

இந்த அம்பு உயிரற்றது (ஜடம்; வார்த்தை, வாக்கியம், ... உயிரற்றவைத் தானே). ஆகையால், இது பெருமாளின் அம்சம் எனக் கணக்கிட்டுள்ளனர் (சிவன் - உயிர், பெருமாள் - உயிரற்றது). இதே கணக்கை வைத்து, "அர்ஜுனன் தெளிவு பெற்றது ஸ்ரீகிருஷ்ணரால் அல்ல. அவரின் வார்த்தைகளால் தான். ஆகையால், பகவத் கீதையைப் போற்றினால் போதும். ஸ்ரீகிருஷ்ணரை வணங்கத் தேவையில்லை." என்றால் ஏற்றுக் கொள்வார்களா? 😁

"நீங்க கேக்குற கேள்வியெல்லாம் சரிதான்னா, ஏன் திருவதிகை திரிபுரம் எரிப்பு திருவிழாவில் திருசரநாராயணப் பெருமாளிடம் திருவீரட்டானேஸ்வரர் சரம் (அம்பு) வாங்குகிறார்?" என்று கேள்வி எழலாம். 🤔

*இதற்கு ஒரே பதில்: தலையெழுத்து!!* சமூக ஒற்றுமைக்காக, சைவ-வைணவ ஒற்றுமைக்காக நம் பெரியோர் தலையெழுத்தே என்று தங்களை தாழ்த்திக் கொண்டிருப்பார்கள். 😞

நம் நாட்டுக்கு, சமயத்துக்கு, மொழிக்கு, கலாச்சாரத்துக்கு, வாழ்க்கைக்கு, செல்வங்களுக்கு "எவ்வளவோ நல்லது" செய்த ஆரியர்களை, சமண பெளத்தர்களை, முகம்மதியர்களை, பரங்கி மதத்தவர்களை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். வைணவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோமா? என்ன, மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் கொஞ்சம் குறைவாக "நல்லது" செய்திருக்கிறார்கள். பரவாயில்லை. 😂😝

🌸🏵🌹💮🌺🌷🌼

*அடுத்து, வக்ராசுரனை வதைத்த களைப்பு போக போக சயனத்தில் இருக்கிறாராம் ஸ்ரீ நரசிம்ஹர்!* 😂

இதைப் படித்துவிட்டு பள்ளிகொண்ட பெருமாளும், அவரது படுக்கையான ஆதிசேஷனும், ஸ்ரீகிருஷ்ணரும்,  ஸ்ரீநப்பின்னை பிராட்டியாரும் ஸ்ரீபோக நரசிம்ஹரிடம் வந்து, "எங்க வம்புக்கு ஏன் வருகிறீர்?" என்று சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்!! 😂😂

🔥 *முதலில் பள்ளிகொண்ட பெருமாள். இந்த வடிவம் சிவலிங்கத்துக்கு சமம்.* சிவலிங்கம் ("சிவநிலையிலுள்ள ஒரு மகானின் சமாதியின் அடையாளம்" என்கிற பொருளுக்கு அடுத்தபடியாக) மொத்த அண்டத்தைக் குறிக்கும். அண்டம் என்பது உயிர்கள் மற்றும் உயிரற்றவைகளின் கலவை. இதை வைணவத்தில் தனித்தனியாகக் காண்பித்துள்ளனர். *ஆதிசேஷன் (5 தலைகள் - ஐம்பூதங்கள்) உயிரற்றப் பகுதியைக் குறிக்கும். பெருமாள் உயிர்ப் பகுதியைக் குறிப்பார்.*

🔥 *அடுத்து, ஸ்ரீநரசிம்ஹர். இந்த வடிவம், ஞானமடைதலின் கடைசி நிலையான சரணாகதியின் போது உள்ளிருந்து வெளிப்படும் இறை சக்தியைக் குறிக்கும். சடாரென்று வெளிப்பட்டு நம் தனித்துவத்தை (அகந்தையை - வக்ராசுரனை) கபளீகரம் செய்துவிடும்.* ஆகையால், சிங்கமுகம் (மேற்கொண்டு இவரைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/Sbx4S7jWGhN).

🔥 *இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் நப்பின்னை பிராட்டியார். ஸ்ரீகிருஷ்ண வடிவம் அஞ்ஞான இருள் விலகிய ஞானியைக் (சிவனை) குறிக்கும். ஞானமடைந்த பின், பூத உடல் இறக்கும் வரை, அவ்வுடலின் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் இன்ப துன்பங்களை (நப்பின்னையை) ⭐ஆனந்தமாக⭐ அனுபவித்துக் கொண்டிருப்பார் அந்த ஸ்ரீகிருஷ்ணர். புலன் அனுபவம் = நப்பின்னை பிராட்டியார்.* (மேற்கொண்டு பிராட்டியைப் பற்றி அறிய https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/akrUTZKEUMo)

ஆக, மூன்று பேர் செய்யக் கூடிய வேலைகளை ஸ்ரீநரசிம்ஹரே செய்து விட்டு ஜாலியாக போக சயனத்தில் படுத்திருந்தால், வேலை பறி போனவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்!! 😂😂😂

🌸🏵🌹💮🌺🌷🌼

*இனி, திருவதிகை வீரட்டானம் என்னும் பழம் பெரும் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.*

🔥 அப்பர் பெருமான் ஆட்கொள்ளப்பட்டத் தலம் என்ற ஒரு சிறப்பு போதுமே இத்தலத்தின் சிறப்பை அறிய. 😅

🔥 நால்வராலும் பாடல் பெற்றத் தலம் என்பதை படிக்கும் போதே உற்சாகம் பொங்கும். 😍

🔥 வீரட்டானம் எனில் வீரச் செயல் நிகழ்ந்த இடம். இது போன்று 8 தலங்கள் உண்டு. *இங்கு சமாதியாகியிருக்கும் மகான்கள் செயற்கரிய செயல் ஏதேனும் செய்திருப்பர் அல்லது மிகப் பெரும் உண்மை(களை)யை உணர்ந்து வெளிப்படுத்தியிருப்பர்.* உதாரணத்திற்காக இந்தத் தலத்தையே எடுத்துக் கொள்வோம். *புகழ் பெற்ற நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உருவாக்கியது இங்கு சமாதியில் உறையும் மகான் (சிவன்) தான்.* 🌸🙏

🔥 *மேலும், இப்பெருமான் "ஒரு புன்சிரிப்பினாலேயே முப்புரத்தையும் எரித்தார்" என்கிறது தல புராணம் (அதாவது, ஒரு கணப்பொழுதில் ஞானமடைந்திருக்கிறார்).* "இது எப்படி செயற்கரிய செயலாகும்?" என்று கேட்கலாம். தொன்று தொட்டு வரும் "நான் இன்னார்" என்ற எண்ணத்தை சுட்டெரிப்பது அவ்வளவு சுலபமல்ல. இதற்காக புத்த பிரான் மாட்டுச்சாணியை உண்டு பார்த்திருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு சுகாதாரப் பணியாளர் ஒருவரின் இல்லத்துக் கழிவறையை தன் கைகளால் சுத்தம் செய்து, தனது தலைமுடியால் துடைத்துப் பார்த்திருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. இம்மகான்களின் போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும் திருவதிகை மகானின் முப்புர எரிப்பு ஏன் செயற்கரிய செயலாகக் கருதப்படுகிறதென்று. திருவதிகை மகானை உயர்த்திக் காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்திக் காட்டவில்லை. *இம்மகான்கள் போராடியது நாம் போராடாமல் இருக்கவே.* திருவதிகை மகான் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு, இறுதியில் "அட, இவ்வளவு தானா?" என புன்முறுவலுடன் ஞானத்தை அடைந்திருக்கலாம். அல்லது, செய்ய வேண்டிய தவங்களை முற்பிறவியில் முடித்துவிட்டு இப்பிறவியில் ஒரு நொடியில் சிவநிலையை அடைந்திருக்கலாம். இதற்கு உதாரணமாக பகவான் ஸ்ரீரமணரின் பதிலை மேற்கோள் காட்டலாம். பகவான் 16 வயதில் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், எந்த தவமும் செய்யாமல் ஞானமடைந்தவர். பின்னாளில் பக்தர்கள் இதுபற்றி கேட்ட போது, "நீங்கள் குறிப்பிடும் தவ முயற்சிகளை முற்பிறவிகளிலே முடித்துவிட்டேன்" என்று பதிலளித்தார்.

*திருவதிகை சிவன் ஒரு புன்சிரிப்பினால் முப்புரத்தை எரித்ததோடு நிற்காமல், மற்றவர்களும் அங்ஙனமே சிவ நிலையை கணப்பொழுதில் அடைந்திட வழிவகுத்து விட்டேச்சென்றார் - சிதறு தேங்காய் உடைத்தல் எனும் சடங்கின் வழியாக.* 👍

*ஆம், சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் இத்தலத்திலிருந்தே பிறந்துள்ளது.* தேங்காய் உடைத்தல் நமது கர்வத்தை (அகந்தை - அகங்காரம் - உள்+உடல்) அழித்தலுக்குச் சமம். தேங்காய்க்கு உள்ளிருக்கும் வெளியும், வெளியே இருக்கும் வெளியும் ஒன்று தான். தேங்காயை உடைக்க (நமது தனியிருப்பை அழிக்க), இரண்டும் வேறில்லை என்ற உண்மை புலப்படும். ஞானம் ஒன்றும் புதிதாக அடையப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே நம்மிடம் இருப்பது தான். அதை உணராமல் தடுப்பது நம் அகங்காரம் தான். அதை அழித்தால் போதும். 👏

🌸🏵🌹💮🌺🌷🌼

*வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது*
*உன் அருள் வெளிவிட்டு எனைக்கா அருணாசலா*
-- பகவான் ஸ்ரீரமணர் 🌼🙏

🔯 ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய 🔯

*தென்னாடுடைய சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி*

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(இணைப்பு: தினமலர் - ஆன்மிக மலர் - சென்னை - 11/02/2017)

🌸🙏🌼🙏🌼🙏🌸

No comments:

Post a Comment