Thursday, November 17, 2016

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉

மாமேதை சுஸ்ருதரின் முன்னோரான மகரிஷி விஸ்வாமித்திரரும் தமிழகத்தில் (வேதாரண்யம்). 🌸🙏 எனில், சுஸ்ருதர் யாராக இருக்கக்கூடும்? 😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132) சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)*

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132)

1 comment: