Sunday, November 20, 2016

தி.மு. 700 முதல் இன்று வரை தமிழ் எழுத்துக்கள்

இணைப்புகளைக் காணுங்கள், வாசியுங்கள், புன்சிரிப்போடு நகருங்கள். சிந்தித்தீர்களயேனால்? 😕

பரங்கிக் கூட்டம் உலக வரலாற்றை 2000 முதல் 4000 வருடத்திற்குள் கொண்டு வர எல்லா தகிடுதத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறது.

வடக்கத்திய கூட்டம் அவர்கள் பங்கிற்கு ஆதிச்சநல்லூர் அறிக்கை வெளிவராமலும், கீழடி அகழாய்வு மேற்கொண்டு நடக்காமலும் பார்த்துக் கொள்கிறது. (இதில் பரங்கியின் பங்கும் இருக்கும். இவர்களது சொந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கும்.)

💥 தமிழின் வரி வடிவம் வேண்டுமானால் தி.மு. 700-ல் ஆரம்பித்திருக்கலாம். இதுவும் அறுதியிட்டுக் கூறிட இயலாது. ஒலி வடிவம் எப்போது தோன்றிற்றாம்?

💥 முதல் சங்கம் எப்போது நடந்ததாம்?

💥 அகத்தியம், தொல்காப்பியம் எப்போது எழுதப்பட்டதாம்?

💥 திருமூலர் 3000 வருடங்களாக திருமந்திரத்தை எழுதினார் என்பது நாம வேலையா?

💥 தி.மு.700ல் தோன்றிய மொழி 700 வருடங்களுக்குள் அனைத்துக் கட்டமைப்புகளையும் பெற்று திருக்குறள், சிலப்பதிகாரம் என பொக்கிஷங்களை உருவாக்கக் கூடியதாக வளர்ந்துவிட்டதா?

💥 மகாபாரதத்தில் வரும் மயசபையைக் கட்டியது மயன் என்னும் தமிழர். ஆரியர்கள் குறிப்பிடும் விஸ்வகர்மாவும் இவரே. எனில், 5000 வருடங்களுக்கு முன்னர் மயன் எப்படி தொழில் செய்திருப்பார்?

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். ஓரிடத்தில் "திரைகடலோடி திரவியம் தேடினோம்" என்று படிப்போம். இன்னொரிடத்தில் "பரங்கி பொறுக்கி  வாஸ்கோட காமா இந்தியாவை கண்டுபிடித்தான்" என்றும் படிப்போம். இரண்டையும் இணைத்துப் பார்க்காமல் போய்விடுவோம். எல்லாம் மெக்காலே கல்வி முறையால் விளைந்த விளைவுகள். இணைப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மொழியியலாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? 😑

(இணைப்பு: தினமலர் - சென்னை - 20/11/2016)

No comments:

Post a Comment