Thursday, November 10, 2016

வீரமாமுனிவன் எனும் தைரியநாதன் எனும் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி

#வீரமாமுனிவனின் இயற்பெயர் "#கான்ச்டன்டைன் #சோசப்பு #பெச்கி" (#Constantine #Joseph #Peski). இவன் ஒரு பரங்கி. இத்தாலி நாட்டுக்காரன். (இத்தாலியிலிருந்து வந்த இதர வகையறாக்களைக் கொண்டே இவனைக் கணக்கிடலாம். 😉)

பரங்கிகள் ஒரு நாட்டிற்கு செல்கிறார்கள் என்றால் அதற்கு 3 காரணங்கள் தாம் இருக்கமுடியும்: வியாபாரம், உளவு பார்த்தல் மற்றும் நாட்டை சீர் குலைத்தல் (மதமாற்றத்தை வியாபாரம் & சீர் குலைத்தல் என்று இரு பிரிவுகளிலும் சேர்க்கலாம்). 😝

இவன் மதமாற்றத்திற்காக வந்தவன். அதற்குத் தமிழ் தேவையாய் இருந்தமையால், அதைக் கற்றுக் கொண்டான். இவன் "தமிழ் வளர்த்தானாம்". விட்டால், பின் லேடன் குண்டு தொழில் செய்ததை "குடிசைத் தொழில் வளர்த்தவர்" என்றும், தீவிரவாதிகளை உருவாக்கியதை "பிற்படுத்தப்பட்டோர் நலன் பேணியவர்" என்றும் கூட சொல்வார்கள். 🤔

இவனது தோற்றம் இணைப்பு படத்தில் இருப்பது போன்றிருந்தது இல்லை. அன்று இங்கு நிலவிய சமூக சூழ்நிலைக்கேற்ப, மேலங்கி இல்லாமல், நிறைய நகைகளை மாட்டிக் கொண்டு, தலைப்பாகை, பீதாம்பரம் சகிதம் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வலம் வந்தவன்.

மக்களைக் கூட்டி, நம் தெய்வ சிலைகளை வைத்துக் கொண்டு, அவைகளைப் பற்றி அவதூறு பேசி, போட்டு உடைத்தவன். ஒரு முறை அவன் "தொழில்" செய்து கொண்டிருந்த இடத்திலிருந்த ஒரு பண்டிதர் சிலைகளைப் பற்றியும், அவை வெளிப்படுத்தும் பேருண்மைகளைப் பற்றியும், அவைகளை கும்பிடுதல் என்றால் என்ன என்றெல்லாம் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை கேட்டும், திருந்தாமல் தனது இனத்தொழிலில் மீண்டும் ஈடுபட்டுள்ளான் (திருந்தவா வந்தான்? ஊழியம் செய்யவல்லவா வந்தான் 😁).

இவனுக்கு இன்று "தமிழ் வளர்த்த..." என்று பட்டம். இவனுக்கு விளம்பரம் கொடுத்து செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறது தமிழக அரசு! 😠

இவனை நினைவில் வைத்திருந்த அரசு, தமிழனுக்கு உலக அளவில் தனி அடையாளம் கொடுத்த பேரரசர் முதலாம் இராஜராஜனின் பிறந்தநாள் (ஐப்பசி சதயம்) நினைவில் இல்லாமல் போனது ஏன்? 😡

No comments:

Post a Comment