Wednesday, November 16, 2016

உலகின் மூத்த மொழி தமிழே!!

*"உலக மொழிகளில் மூத்த #முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று  மொழியியல் அறிஞர் #நோவாம் #சோம்சுகி (#Noam #Chomsky) அறிவித்துள்ளார்.*

நோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே *#மொழிஞாயிறு ஞா. #தேவநேயப் #பாவாணர்* உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் *"தமிழே உலகின் மூத்தமொழி"* என்பது.

இதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-

1. மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் #தமிழ் தோன்றி இருத்தல்.

2. இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.

3. தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.

4. தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]

5. தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)

6. ஆரிய, சேமிய மொழிச்சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.

7. பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.

8. *தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.*

9. தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.

10. ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

11. சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.

12. பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றை கொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]

13. பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும், சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும், அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]

இப்படியான, பல்வேறு உறுதியான காரணங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல. உலகத்திற்கே மூத்தமொழி, முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது பாவாணர் மற்றும் பல மொழியியல் அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.

(மூலம்: வாட்ஸ் அப்)

No comments:

Post a Comment