Saturday, June 4, 2016

பால் காவடி! பன்னீர் காவடி!! பரங்கி காவடி!!!



இந்த விபரசீட்டுகள் சென்னையில் இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் இவ்வருடம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டவை. 20 சீட்டுகளில் 4 மட்டும் இந்தியர்கள்! மீதம் 16-ல்பரங்கிகள்!!

இப்படி தான் பரங்கி நாடுகளில் செய்வரா? நம் நாட்டில் அறிஞர்களே இல்லையா? பரங்கிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் நம்மிடமிருந்து சுடப்பட்டவையே. பரங்கிகள் இந்த பூமியில் தோன்றியிருக்காவிட்டால் இப்புவி இன்று எவ்வளவோ சிறப்பாகவேயிருக்கும். ஆனால், இந்தியர்கள் தோன்றியிருக்காவிட்டால், இப்புவியில் இன்னமும் காட்டுமிராண்டிகள் தான் உலவிக் கொண்டிருப்பர்!!

அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் ஆராய்ந்து "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உச்சம் தொட்ட நாம் எங்கே? "தான் வாழப் பிறரைக் கெடு" என்ற கொள்கையுடைய பரங்கிகள் எங்கே?

எதற்கு இன்னமும் இந்த மூளைச்சலவை வேலை? எப்போது இந்தக் கருங்காலித்தனம் வேரறுக்கப்படும்? 😡

posted from Bloggeroid

No comments:

Post a Comment