Wednesday, June 22, 2016

கலீலியோ தான் கண்டுபிடித்தானாம்!! 👎🏼👎🏼👎🏼


(தினமலர் - சென்னை - 22/06/2016)

முதல் பத்தியை இவ்வாறு படிக்கவும்: "சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சூரியன் உட்பட அண்டத்தில் உள்ள அனைத்தும், பூமியை மையமாகக் கொண்டே சுற்றுகின்றன என்ற கருத்தைத்தான், *ப ர ங் கி* உலகம் ஏற்றுக் கொண்டிருந்தது."

பரங்கி என்ற வார்த்தையை உரிமையுடன் விட்டுவிடுவார்கள்! ஏனெனில், இன்றும் நம்மை ஆள்வது பரங்கிகள் தானே!! பரங்கிதாசிமகன்கள் அங்கிருந்து "ஆடுறா ராமா" என்றால் இங்கே நாம் ஆடவேண்டும்!!! 😤

பரங்கி நாடுகளுக்கிடையே சண்டை நடந்தாலும், அது உலகப் போராக சித்தரிக்கப்படும். பரங்கிகள் "நீ சூப்பர்மேனைப் போல் இரு" என்றால் நாமும் "என் ரோல் மாடல் சூப்பர்மேன்" என்று ஆமென் போடவேண்டும். பரங்கிகள் நமது சமய நூல்களைப் படித்துவிட்டு "நீ நீயாக இரு" என்றால் நாமும் புல்லரித்து T-சர்ட்டில் "Just Being Myself" என்று பதிப்பித்து போட்டுத் திரியவேண்டும். 😠

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வேளையிலும் திருந்தாத ஓநாய்கள் இவர்கள்!! 😡

👊🏼 ஞாயிறு என்ற தமிழ் வார்த்தையின் பொருள் "நடுவில் தொங்குவது / இருப்பது" (ஞா + இறு). இந்த வார்த்தை சிலப்பதிகாரத்தில் வருகிறது ("ஞாயிறு போற்றுதும்... ") எனில் அன்றே அல்லது அதற்கு முன்னரே இதை நம்மவர்கள் கண்டுபிடித்து விட்டனர் என்பது தெளிவு.

👊🏼 இங்ஙனமே, எப்போது கோயில்களில் நவக்கிரக அமைப்பை ஏற்படுத்தினர் என்று ஆராய்ந்தாலும், அது இந்தப் பரங்கிகளுக்கு முன்னரே என்று தான் விடை கிடைக்கும்.

👊🏼 மேலும், "ஜோதிடத்தின் தந்தை" என அழைக்கப்படும் பராசர மகரிஷியின் காலம் எதுவென்று ஆராய்ந்தாலும் அதுவும் இந்தப் பரங்கிகளுக்கு முன்னரே என்று தான் விடை கிடைக்கும்.

எவ்வளவு திமிர் இருந்தால், முழு பூசணிக்காயை அப்படியே சோற்றில் வைத்து விட்டு, "தேவாலயம் தடை விதித்தது" என்ற சென்டிமென்ட் அஜினமோட்டோவை வேறு கலந்து கொடுப்பார்கள்!! 😠😠

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் சில வேதியல் பொருட்களை தடை செய்து இன்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அறிவுக்கு கேடு விளைவிக்கும் இது போன்ற புருடாக்களை எப்போது தடை செய்து அரசாணை வெளியிடப் போகிறார்கள்? பரங்கிதாசிமகன்கள் ஒப்புதல் அளித்த பின்னரா? 😏

posted from Bloggeroid

No comments:

Post a Comment