Monday, July 8, 2019

சிவ தத்துவத்தை கடைசியில் போட்ட நாமப் பேர்வழிகள்!! 😠😠



(இடுகைக்குள் நுழையும் முன்... சைவத்தையும் அத்வைதத்தையும் மட்டம் தட்டியே பிழைப்பு நடத்தும் நாமப்பேர்வழிகளைத் தான் எதிர்க்கிறேன். அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏼🙏🏼 அல்ல.)

💮🌸🌹🌼🏵️

இவர்களது சரக்கை உயர்த்தி பேச இவர்களுக்கு உரிமையுள்ளது. மற்றவருடையதை தாழ்த்திக் காட்ட இவர்களுக்கு என்ன உரிமையுள்ளது? பரம்பொருளைப் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்கள். 1300 வருட பித்தலாட்டங்களினால் இவர்கள் சம்பாதித்தது என்ன? #நாமம் என்றால் ஏமாற்று வேலை என்ற பேறு மட்டுமே!!

திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடிகளிலிருந்து தலை தப்பிக்கவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு கூடாரத்துக்குள் புகுந்து கொண்ட வட பாரத பௌத்த கூட்டத்தின் ஒரு பகுதியே பின்னாளில் நாமப்பேர்வழிகளாக மாறினர். பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படை கொள்கை "உயிரை விட உயிரற்றது மேலானது" என்பதாகும். இதனால் தான் இந்த வழிபாடு பண்படாதவர்களின் கையில் இருந்தது. மயானக் கொள்ளை போன்ற அச்சமூட்டும் கொடூர விழாக்களும் அவர்களிடமிருந்தன. இவர்களின் கூடாரத்திற்குள் நுழைந்து தலை தப்பிய பின், தங்களது பித்தலாட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.

👊🏼 பெண் தத்துவத்தை (மாறுவதை, அழிவதை) ஆணாக்கினார்கள் (மாறாது, அழியாது என்றார்கள்). ஆண் தத்துவத்தை பெண்ணாக்கினார்கள். (இது இவர்களது ஆணாதிக்க புத்தியின் முதல் வெளிப்பாடு)

👊🏼 சைவத்தில் பெண் தத்துவத்திற்கு ஆணுக்கு சமமான இடத்தைக் கொடுத்திருப்பார்கள். இவர்கள் பெண்ணை ஆண் தத்துவத்தின் காலடியில் வைத்திருப்பார்கள். (இவர்களது ஆணாதிக்க புத்தியின் அடுத்த வெளிப்பாடு. இதற்கு "அறிவியல்" விளக்கம் வேறு (1)).

👊🏼 #லிங்கம் எனில் அடையாளம். #சிவலிங்கம் எனில் சிவனின் அடையாளம். #சிவன் என்பவர் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை என்பது இரண்டற்ற நிலை. #சிவம் என்பது பரம்பொருள். மெய்யறிவாளர்கள் சமாதியடைந்த பிறகு, அவர்களது சமாதியிடங்கள் தொலைந்து போகாமல் இருக்க, அடையாளத்திற்காக வைக்கப்பட்டவைதான் சிவலிங்கங்கள். இதனால் தான், வெடிகுண்டு மதத்தினரின் படையெடுப்புகளிலிருந்து தப்பிய பழம்பெரும் திருத்தலங்களின் சிவலிங்க மூலவர்கள் விதவிதமாக இருக்கக் காணலாம். உண்மை இவ்வாறிருக்க, சமண-பௌத்த மொட்டைகளின் கை ஓங்கியிருந்த காலத்தில், தமிழர்களின் சமயமாகிய சைவத்தை இழிவுபடுத்துவதற்காக லிங்கத்தை ஆண்குறியோடு சமன்படுத்தி ஒரு பிட்டை வெளியிட்டார்கள்!! 😠 இந்த மொட்டைகளிலிருந்து வந்த ஒரு பிரிவினர் தாம் நாமப்பேர்வழிகள். இவர்களது தலபுருடாக்களிலும் ஆண்குறி பிட்டை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். பொய்யைச் சொல்லி சொல்லி, இவர்களது வழி வந்த ராமானுஜரே அது உண்மையென்று நம்பிவிட்டார். விளைவு... இவர்களது "புனிதச் சின்னம்" உருவானது. 🤢 ஆம், #ராமானுஜர் பெண்குறியை வைணவச் சின்னமாக அறிவித்தார். 🤮 சிவலிங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இவர்கள் போட்ட விதையை, பெண்குறியாக இவர்களே அறுவடை செய்திருக்கிறார்கள். 🤗 #பெருமாள் #பாதம் என்று ஊரை ஏமாற்றி, அந்த பெருமாளுக்கும் பெண்குறியை போட்டு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 🤭

👊🏼 உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்று கடையை விரித்தவர்கள், அவ்வப்போது பறந்து வந்த அழுகின தக்காளி, பிய்ந்த செருப்புகளுக்கு ஏற்ப தங்களது சரக்கை மாற்றிக்கொண்டே வந்தனர். பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள்-தாயார்(கள்), பெருமாள்-தாயார்-அனுமன், பெருமாள்-தாயார்-அனுமன்-சிவலிங்கம்- மற்றும் பலர். இப்படி சிவலிங்கத்தை இறக்கி வைப்பதன் மூலம் சிவதத்துவத்தை மட்டம் தட்டுகிறார்களாம்! 😏 #சிவம் எனில் எதிலிருந்து அனைத்தும் தோன்றி, நிலைபெற்று, இயங்கி, ஒடுங்குகிறதோ அதுவே சிவம். #பெருமாள் இதற்கும் மேலானவராம்!! 🥴 ஆரம்பத்தில், பெருமாளின் பெயர் மால், மாயோன். மால் எனில் மயக்கம்/குழப்பம். மாயோன் எனில் மயங்க வைப்பவன். உடலல்லாத நம்மை உடலாகக் கருத வைப்பதே உலக தோற்ற-இயக்க-ஒழிவின் ஆரம்பம். இந்த மதி மயக்கும் ஆற்றலைத் தான் #திருமால் என்றனர். உலகின் பேரியக்கத்திற்கு இவ்வாற்றல் தான் அடிப்படை என்பதால் திரு எனும் மரியாதையைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ சிவத்தின் பொருளும் பெருமாளின் பொருளும் ஒன்றே. இதனால் தான் அவர்கள், சிறிதும் ஓசையில்லாமல், "திருமால்" என்பதலிருந்து "பெருமாள்" (பெரும் ஆள் / பெருமைக்குரிய ஆள்) என்பதற்கு மாறினார்கள். இந்த "Course Correction" 😜 வெற்றி பெற்றுவிட்டதால், இப்போது அடுத்த இலக்குக்கு தாவ முயல்கின்றனர்: பெருமாள் சிவத்திற்கும் மேல்!! அதாவது, சிவத்தின் நகல் சிவத்தை விட சிறந்ததாம்!!! 🤣🤣 இவர்களால் தான், "பேன பெருமாளாக்குவானுங்க. பெருமாள பேனாக்குவானுங்க." என்ற சொலவடை உருவானது. யாரும் "பேன சிவனாக்குவானுங்க" என்று சொல்லவில்லை. 😛 இவர்களது பித்தலாட்டம் அப்படி!! 👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

👊🏼 இவ்வளவு வேலை செய்தும் ஏதும் சரியாக "போனி"யாகவில்லை (2). ஏனெனில், சேர்த்துக் கொண்ட கூட்டம் அப்படி. பண்படாதவர்களை எவ்வாறு தத்துவங்களால் கவர முடியும்? இப்படிப்பட்டவர்களை புலன்களை வைத்துத்தான் கவர முடியும் - பெரிய உருவச்சிலைகள், பெரிய நாமம், பெரிய லட்டு / தோசை / இட்லி, மார்கழியில் பெருமாளுக்கு வெந்நீர் குளியல் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களேயா" என்ற பிட்டிற்கு சமம். இவ்விரு கூட்டங்களின் தில்லாலங்கடிகளில் அவ்வளவு ஒற்றுமைகளைக் காணலாம்!!)...

ஒரு தெய்வ உருவத்தை பின்புறம் தள்ளியதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் 😲 என்று சிலருக்கு தோன்றலாம்.  அவர்களுக்காக...

👻 சமீப காலமாக இந்து சமய அடையாளங்கள் அனைத்தையும் கவர்வதாக நினைத்துக் கொண்டு தனது அடையாளங்களை இழந்து கொண்டிருக்கும் எம்.எல்.எம் மதம், ஒரு வேளை இந்த ஓவியத்தை போன்று ஒரு ஓவியத்தை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் இஸ்ரவேல் அத்வைதி யேசு மற்றும் அவரது மனைவி மேரி மேக்தலின் அமர்ந்திருப்பது போன்றும், இவர்களை சுற்றி அவர்களது இன குருமார்களும், தொழிலதிபர்களும், நாடாள்பவர்களும் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும் வெளியிடுகிறார்கள் என்று  வைத்துக் கொள்வோம். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்ளுவோம்?

👺 அடுத்து, வெடிகுண்டு மதத்தினர். வெட்டு, குத்து, சீவு, பிடுங்கு, வெடிகுண்டு என்றே 1300 வருடங்களாக வயிற்றைக் கழுவியவர்கள், இப்போது தான் எம்.எல்.எம் மதத்தினர் போன்று தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு வேளை, இவர்களும் ஒரு ஓவியத்தை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அரியணையில் ஒரு வெள்ளை சுவர், அதை சுற்றிலும் அவர்களது இன குருமார்கள், தொழிலதிபர்கள், நாடாள்பவர்கள் நிற்பது போன்றும், பின் வரிசைகளில் நமது தெய்வங்கள் நிற்பது போன்றும், வரைந்து வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதை ஏற்றுக் கொள்ளுவோமா?

ஏற்றுக்கொள்ள மாட்டோம். வெகுண்டு எழுவோம். அவ்வாறே தான் இணைப்பு படத்தையும் ஏற்றுக்கொள்ளாமல், வெகுண்டு எழ வேண்டும். #எம்மதமும் #சம்மதம் என்பது எவ்வாறு ஒரு மாபெரும் ஏமாற்று வேலையோ, அவ்வாறே சைவ-வைணவ இணைப்பும்!!! 🤬😡😠

💮🌸🌹🌼🏵️

27-06-1946 அன்று பகவான் ஸ்ரீரமணர் தனது அன்பர்களுடன் பேசியதிலிருந்து... ("அனுதினமும் பகவானுடன்", தேவராஜ முதலியார், ஸ்ரீரமணாச்சரமம்)

💥 நாலாயிர பிரபந்தத்தில் அருமையான அத்வைதப் பாடல்கள் உள்ளன. ஆனால், எல்லாவற்றிற்கும் வைணவர்கள் வேண்டுமென்றே துவைதப் பொருள் காட்டியிருப்பார்கள்.

💥 ஆரம்பத்தில் (பகவான் திருவருணை வந்த புதிதில்; இன்னமும் புகழ் பெறாத காலத்தில்), வடகலை வைணவர்கள் வந்து அவர்களது U நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். பின்னர், தென்கலை வைணவர்கள் வந்து அவர்களது Y நாமத்தைப் போட்டுவிட்டுப் போவார்கள். அவரவர் விரும்பியதை செய்ய விட்டு அமைதியாக இருப்பேன் (இங்ஙனமே தான் நம்மாழ்வாரையும் காப்புரிமை கொண்டாடுகிறார்களோ? யாரும் அறியாவண்ணம், அவ்வளவாக புகழ் பெறாத போது, முதலில் சென்று காப்புரிமை போட்டு விடுவது இவர்களது தொழில் உத்திகளில் ஒன்றோ?)

💥 (நம்மாழ்வாரின் "யானே என்னை அறியகிலாதே" என்ற பாடலைப் பற்றி விளக்குகிறார்) இது சுத்த அத்வைதத்தைப் பாடலாகும். ஆனால், வைணவ உரையாசிரியர்கள் திரித்து துவைதப் பொருள் கூறியிருப்பார்கள். இவர்களுக்கு தாங்களும் அப்படியே இருக்கவேண்டுமாம். பெருமாளும் அப்படியே இருக்கவேண்டுமாம். என்றென்றும் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கவேண்டுமாம். இது எப்படி சாத்தியம்? பெருமாள் கேட்கிறாரா? எல்லோரும் கைங்கர்யம் செய்வதானால் வைகுண்டத்தில் நிற்க கூட இடம் இருக்காதே? 😁

💥 திருவாய்மொழியின் 8வது பதிகத்தின் 3வது பாடலைப் பற்றியும், திருவாசகத்தின் பாடலொன்றோடு அது ஒத்துப் போவதைப் பற்றியும் பேசுகிறார்.

💮🌸🌹🌼🏵️

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீர் ஆகிலும் ஏழைகாள்
யாதோர் தேவர் எனப்படுவார்க்கு எல்லாம்
மாதேவன் அல்லால் தேவர் மற்று இல்லையே

-- #அப்பர் #தேவாரம் 🌺🙏🏼

மரணபய மிக்குள அம்மக்கள் அரணாக
மரணபவ மில்லா மகேசன் - சரணமே
சார்வர் தம் சார்வொடு தாம் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவாதவர் நித்தர்

-- #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼, உள்ளது நாற்பது

💮🌸🌹🌼🏵️

குறிப்புகள்:

1. பெண்களின் கைகளில் சுக்கிரன் உள்ளதாம். 😛 ஆண்களின் கால்களில் சனி உள்ளதாம். 😝 சனியை சுக்கிரன் இதப்படுத்தினால் செல்வம் பெருகுமாம். 😜 இந்த உத்தியை கையாண்டு தான் மகாலட்சுமி தாயார் செல்வங்களுக்கு அதிபதியாக உள்ளாராம். 🤣

உடலில் கால்களை சனி ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சனி வேலைக்காரனையும், குப்பையான அசுத்தமான இடங்களையும் குறிக்கும். இது ஆணுக்கு மட்டுமல்ல. பெண்ணின் கால்களுக்கும் பொருந்தும். அடுத்து, பெண்களின் கைகளில் சுக்கிரன் ஆட்சி செய்வதாக ஏன் சொன்னார்கள் என்றால் சுக்கிரன் அழகையும், நளினத்தையும் குறிக்கும். ஆண்களின் கைகளை விட பெண்களின் கைகள் பொதுவாக அழகானவை & நளினமானவை. ஆக, பெண் ஆணின் கால்களை பிடித்து விட வேண்டும். இதை நேரடியாக சொன்னால் பூரிக்கட்டை பறந்து வரும். 🤕😁 எனவே, சுக்கிரன், சனி என்று பிட் தயாரித்திருக்கிறார்கள். எப்படி பட்ட நப்பாசை!! 🥴

ஆண் என்ற ஒரே காரணத்திற்காக இவன் ஊரை மேய்ந்து விட்டு வருவானாம். மீதமுள்ள அனைத்தையும் பராமரித்து விட்டு, பெண்ணானவள் தன்னையும் பராமரித்துக் கொண்டு, "ஆம்படையான்" திரும்பியவுடன் அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து, அவன் உண்ட களைப்பு போக சயனித்திருக்கும் போது, அவனது கால்களை சற்று பிடித்து விட வேண்டுமாம். இப்படி பிடித்து விட்டால், அவன் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு நகைகளை (செல்வம்) வாங்கி கொடுப்பானாம். இதற்கு வெடிகுண்டு மதமே மேல் என்று சொல்லாம். 😏

வெடிகுண்டு மதமாவது பெண்ணடிமைத்தனம் மற்றும் அடுத்த மதத்தினரிடமிருந்து பறித்து வாழ்தல் என்ற இரு "உயரிய" கொள்கைகளை வெளிப்படையாகக் கொண்டவை!! 😁 இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம். ஆனால், இந்த நாமப்பேர்வழிகளிடம் ஏமாந்துவிடுவவோம்.

வெடிகுண்டு மதத்திற்கும் நாம மதத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டும் அருகருகே உருவானவை (7ஆம் நூற்றாண்டு). எம்.எல்.எம். மதத்தின் டுபாக்கூர் கையேடு கூட 633க்கு பின்னர் தான் உருவானது என்று வெளிப்படையாக அண்மையில் செய்தி  வெளியிட்டிருந்தார்கள். ஆக, 7ஆம் நூற்றாண்டு உலகின் மற்றுமொரு கெட்ட காலத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. 😒

2. #பவானி என்பதே #போனி என்று மருவியுள்ளது. நாளின் முதல் விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் பவானி அம்மனுக்கு காணிக்கையாக்கும் வழக்கம் ஈரோடு பகுதியில் உருவானது. ஒரு விற்பனையாவது செய்து விட வேண்டும் என்ற வேகத்தில் "பவானிக்கு குடு/பண்ணு" என்று கூவுவர். நாளடைவில் இது மருவி "போனி பண்ணு" என்றாகிவிட்டது.

Tuesday, July 2, 2019

அத்திவரதர் நீருக்குள் ஏன் வைக்கப்படுகிறார்? 40 வருடங்களுக்கு ஒரு முறை ஏன் வெளிக்கொணரப்படுகிறார்?

https://tamil.news18.com/news/spiritual/athi-varadar-festival-at-kanchipuram-varadaraja-perumal-temple-begins-on-july-1st-vin-173515.html

மேலுள்ள கட்டுரையை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஒரு சிரிப்புக் காட்சி:

அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாகோ... ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாகோ... என்னடி கலர்கலரா ரீல் உடரே?

😝😂😂🤣

சைவ-வைணவ பகைமையின் போது பகைவர்களிடமிருந்து (1) காப்பதற்காக குழி தோண்டி அத்திவரதரை புதைத்தார்களாம்! அவ்வாறே, மொகலாயரிடமிருந்தும் பரங்கியரிடமிருந்தும் காப்பாற்றினார்களாம்!!

இந்த அத்தி மரத்தாலான ஆதிமூலவரை மணவாள மாமுனிகள் வரை வணங்கியிருக்கிறார்கள். இவர் காலம் 1446 வரை. இதற்குள் மெய்-பொய் சண்டையெல்லாம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டது. பொய் நன்றாக வேரூன்றிவிட்டது. காரணம் தமிழர்களின் நேரடி ஆட்சி சோழர்களோடு முடிந்துவிட்டது (குறிப்பாக, முதலாம் இராஜேந்திர சோழரின் மகன்களின் வீரமரணத்தோடு). விஜயநகர காலத்திலிருந்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் அனைவரும் வைணவர்களே.

காட்டுமிராண்டி மாலிக்காபூரும் 1312க்குள் சீரழித்து விட்டு திரும்பிவிட்டான். விஜயநகரம் தோன்றிய பின் இங்கு எஞ்சியிருந்த காட்டுமிராண்டிகளும் விரட்டப்பட்டுவிட்டனர். மீதமிருப்பது உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் மட்டும் தான். அவர்களும் இந்த சிலையை நாடு கடத்த முயற்சித்திருப்பரா என்பது ஐயமே.

பின்னர் ஏன் இந்த சிலை வழிபாட்டிலிருந்து விளக்கப்பட்டது?

கருவறையில் எப்போதும் நிலவும் வெப்பத்தாலோ, பல நூறு வருட தொடர் வழிபாட்டின் காரணமாகவோ, வழிபாடு செய்து வைப்போரின் கவனக்குறைவாலோ சிலையில் பழுது ஏற்பட்டிருக்கிறது. மேற்கொண்டு வழிபாட்டில் வைத்திருக்க அவர்களது வழிபாட்டு நூல்கள் இடம் கொடுத்திருக்காது. ஆகையால், குளத்திற்குள் விட்டுவிட்டார்கள். நிலத்தை விட நீருக்குள் மரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருக்கும். ஐரோப்பிய நகரிங்களில் சில நீரோட்டத்திலேயே, மரத்தால் அடித்தளமிட்டு கட்டப்பட்டவை. 200-300 ஆண்டுகளாகியும் இன்றும் அடித்தள மரங்கள் வலுவாகவுள்ளன.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிலையை வெளிக்கொணரக் காரணம் - குளத்து நீர்!! மேற்சொன்ன ஐரோப்பிய நகரங்கள் ஓடும் நீரில் கட்டப்பட்டவை. நீரிலுள்ள உயிர்வளி குறைய வாய்ப்பில்லை. சேறும் சேர வாய்ப்பில்லை. ஆனால், குளத்து நீரில் உயிர்வளி குறைவாகவும், சேறு மிகுதியாகவும் இருக்கும். ஆகையால், இத்தனை வருடங்களுக்கு ஒரு முறை எனக் கணக்கு வைத்து சுத்தம் செய்துவிடுகிறார்கள்.

திருத்தலங்கள் என்பது வடக்கிருக்க (தவமியற்ற) வேண்டிய புனிதமான பகுதிகள். ஆனால், இன்று வடக்கிருத்தலை தவிர மற்றனைத்தும் அங்கு நடைபெறுகின்றன. வடக்கிருத்தல் என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நம்மை வைத்திருக்கிறார்கள். சிலைகள் உணர்த்தும் பேருண்மைகளை உணராது, மூலவர்கள் அடையாளபடுத்தும் மகான்களை வணங்காது சிலை வணங்கிகளாகவே நம்மை வைத்திருக்கிறார்கள். திருத்தலங்கள் இன்று சுற்றுலாத் தலங்களாகவும், பொருளாதாரத் தலங்களாகவும் தான் உள்ளன. மக்களை மாக்கள் ஆக்கியதன் விளைவு, ஏதாவது படம் காட்டித்தான் மக்களைக் கவர வேண்டியுள்ளது.

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- அத்வைதம் மிளிரும் நம்மாழ்வாரின் 🌺🙏🏼 பாடல்

💮🏵️🌼🌻🌸

குறிப்புகள்:

1. திருடனுக்கும் காவல்காரன் பகைவன் தான். பொய்க்கும் உண்மை பகை தான். இன்று நமது அடையாளங்களை எம்.எல்.எம் மதம் திருடுவதைக் கண்டு எவ்வாறு கோபப்படுகிறமோ, அவ்வாறே அன்று சைவத்திலிருந்து வைணவர்கள் திருடுவதைக் கண்டு நம் தமிழ் முன்னோர்கள் பொங்கி எழுந்திருப்பார்கள். இந்த தலத்தில் கூட ஆதி சங்கரரின் கனகதாரா தோத்திர வரலாறு, சீர்காழி கோயிலமைப்பு, தில்லைக் கோயிலுள்ள காலக் கணக்கு, சிதம்பர மறைபொருள் என பல விடயங்கள் "பயன்படுத்த"ப்பட்டுள்ளன. 😏

Friday, June 14, 2019

வளர்த்த மகளை மணந்தவன் முதல் வளர்ப்பு மகளை அடைய முயற்சித்தவன் வரை!!

தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத பரங்கியர், குறிப்பாக அவர்களது எம்.எல்.எம் தொழிற்பிரிவினர் (மதத்தினர்), மலஹாசனை அடுத்து களமிறக்கி இருக்கும் அடுத்த கருங்காலி தான் இந்த இயக்குனர். இந்த மண்ணில் இருந்து கொண்டே கருங்காலித்தனம் செய்வாராம். ஏன் செய்யமாட்டார்? 4 படங்களை மட்டுமே இயக்கியவருக்கு, பின்புலம் ஏதுமில்லாதவருக்கு, ரஜினியின் சந்தை மதிப்பை சரித்தவருக்கு ரூ. 75 கோடி தூக்கிக் கொடுத்தால் ஏன் செய்யமாட்டார்? அன்று இதே கருங்காலித்தனம் செய்தவர்களுக்கு தந்தை, பேரறிஞர், தமிழினத் தலைவர் என்று பட்டங்களும், சில நூறு கோடி முதல் சில லட்சம் கோடிகள் வரை பணமும் சேர்ந்தன. இன்றோ, வெறும் 75 கோடிகள் தான்! என்ன செய்வது... விலைவாசி அவ்வளவு உயர்ந்து விட்டது! தொழிற்போட்டியும் பெருகி விட்டது!! 😛

இந்த உலகக்கொல்லிகளான பரங்கியர்களுக்கு எப்பாடுபட்டாது தங்களது கலாச்சாரம், மொழி, மதம், இனம், வரலாறு என எல்லாம் நம்மை விட மேம்பட்டது என்றும், நம்முடையது அனைத்தும் தாழ்ந்தது, இழிவானது என்றும் காட்ட வேண்டிய கட்டாயம். அப்போது தானே நமது அடிமை மனப்பான்மை தொடரும். அவர்களும் உலகின் தேவர்களாக வலம் வரலாம். 😍 ஆனால், என்ன செய்தாலும், எவ்வளவு போராடினாலும் உண்மை வெளிவந்து விடுகிறது (எ.கா.: பேட்டை தாதா போன்றவனை, மன்னர் புருஷோத்தமனிடம் தோற்றவனை உலகையே வென்ற மாவீரனாக இட்டுக்கட்டினார்கள். 50 வருடங்களில் உண்மை வெளிவந்துவிட்டது. 😘). ஆகையால், உத்தியை சற்று மாற்றி, நமது மாமன்னர்களின் புகழுக்கு களங்கம் சேர்க்கிறார்கள். திருமலைப் பெருமாள் மீதும், ஆண்டாள் தாயார் மீதும் சேறு தெளித்ததும் இந்த வகையில் தான்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல இந்த கருங்காலிகளால் வளர்பவர்கள் இவர்களாலேயே அழிவார்கள். கடந்த 1800 வருட வரலாற்றை சற்று புரட்டினாலே போதும், இந்த கருங்காலிகள் இனி வரும் காலங்களில் என்ன செய்வார்கள் என்பதை கணக்கிட்டு விடலாம்.

👊🏼 சமண, பெளத்த மொட்டைகளின் வருகையின் போது

- மச்சான், டிரஸ்ஸே போடத் தேவயில்லியாம்.

- என்ன மாமு சொல்ற? நெசமாவா?

- ஆமாம் மச்சான். பொட்டு துணி தேவையில்லையாம்.

- நல்லா விசாரிச்சியா, மாமு.

- விசாரிச்சுட்டேன். சேரும் போது, ஒரு மயிருபுடுங்கி நம்ம மயிர புடுங்கி விடுவானாம். 12 வருசம் கழிச்சு நாமளே புடுங்கிக்கணுமாம். அப்புறம், நாமளும் மயிறு புடுங்கிங்களாயிடுவோமாம். மத்தவங்க மயிர நாம புடுங்களாமாம்.

- அட, ஐடியா நல்லாயிருக்கே. இன்னும் ஒரு டீடெய்லு வேணும், மாமு. துணி போடத் தேவையில்லன்றது நமக்கு மட்டும் தானா. பொட்டச்சிங்களுக்குமா?

- அத கேக்கலிய, மச்சான்

- அதயும் விசாரிச்சுரு, மாமு. நம்மாளுங்களோட போய் குஜ்ஜாலா சேந்துடலாம்.

👊🏼 வெடிகுண்டு மதத்தினரின் வருகையின் போது

- ஹுசூர், உனக்கு இன்னா வேணும்? அட்டூழியம் (போர்) முடிஞ்ச கையோட, அங்கேயே நீ குஜால்ஸ் பண்ணனும். அவ்ளோ தானே. அந்த வலியிலேயும் பாத்தவுடன சும்மா கும்முனு மூடு ஏர்ற மாதிரி ஃபிகருங்க யார்யார் வூட்டுல இருக்குன்னு நா சொல்றேன், ஹுசூர். ஒரு கண்டிசன். இந்த ஏரியாவ ஏங்கிட்ட குடுத்துடு. பிச்சக்காரன் மொதக் கொண்டு அல்லார் கிட்டேயும் மாமுல கரீட்டா கறந்துடுவேன். நீ பாத்து இன்னா கட்டிங் குடுப்பியோ குடு.

👊🏼 எம்.எல்.எம் பிரதிநிதிகளின் வருகையின் போது

- "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்னு சீன் போடனும். அத பாத்து அல்லாரும் மெர்சலாயிடனும். அவ்ளோதானே. பிச்சு ஒதற்றேன் பாரு. ஆமா, நீ போட்டிருக்கிய பாவாட அத எப்ப நா போடுவேன்? 😜

👊🏼 பரங்கியரின் உள்ளூர் கருங்காலி பிரிவு ஆரம்பித்த போது

- "கடவுள கண்டுபுடிச்சவன் டங்காமாரி,
கடவுள பரப்பினவன் பேமானி,
கும்புடுறவன் கஸ்மாலம்"ன்னு கூவுனா போதுமா, நைனா? "சொவத்த பாத்து பஸ்கி எடுக்குறவன் கலீஜு. எச்சில் பிஸ்கோத்து சாப்புடுறவன் டுபாக்கூர்."ன்னு கூட சேர்த்துக்கவா, நைனா?

- அடப்பாவி, படியளக்கறவங்களே அவங்கதான்டா. பேஜார் பண்ணிடாதடா, மவனே. தலைமுறை தலைமுறையா, கோடி கோடியா சம்பாதிக்கற வாய்ப்புடா. கெடுத்துடாதடா.

😝😂😂🤣

மொட்டை, பாய், பாவாடை, சாக்கடையை பார்த்தாகிவிட்டது. இனி, டேப்பர் கட், கம்பளம், தாவணி, கூவம் என்று எது வந்தாலும் இவர்கள் என்ன செய்வார்கள் என்று ஊகித்துவிடலாம்.

👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

எந்த அமைப்பும் என்றுமே முக்கோணம் தான். வீடு, நிறுவனம், சங்கம், கட்சி, அரசு என எல்லா அமைப்புகளும் முக்கோணம் தான். இந்த கருங்காலி அமைப்புகளும் முக்கோணங்கள் தாம். அறிவு, திறமை, படிப்பு, உருவம், நிறம், பணம், பலம் என எதை வைத்தாவது மக்கள் தங்களை தனித்தும் உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே செய்வர். தங்கள் நிலையிலிருந்தோ அல்லது அதற்கு மேலிருந்தோ தங்களது வாரிசுகள் பயணிக்க வேண்டும் என்றே எண்ணுவர். மேலே சென்றவர் என்றுமே மேலேயே இருக்க விரும்புவர். இவையெல்லாம் மனிதர்களின் இயற்கை. ஓட்டுவங்கி அரசியலால் இன்று உயர்ந்திருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

👊🏼👊🏼👊🏼👊🏼👊🏼

ஒரு தக்காளி பழத்தை விற்கும் போது கூட அதன் நிறம், வடிவம், எடை, சுவை என தரம் பிரித்து அதிக விலைக்கு விற்பர். ஆனால், மனிதர்கள் என்று வரும் போது மட்டும் எல்லாம் தலைகீழாக இருக்கும். 90 மதிப்பெண்கள் பெறுவோர் வெளியே. 35 மதிப்பெண்கள் பெறுவோர் உள்ளே. கேட்டால் சமூக நீதி என்று கதை விடுவர். இவர்களுக்கு மாலிக்காஃபூர்கள் (வளர்த்த மகளை மணந்தவன் முதல் வளர்ப்பு மகளை அடைய முயற்சித்தவன் வரை) என்றால் நமக்கு ஒரு கம்பண்ணா கூடவா வராமல் போய் விடுவார்!! 💪🏼💪🏼

Friday, May 31, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் – ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம் - பகுதி #2


திருக்கடவூரில் மார்கண்டேய மகரிஷி மெய்யறிவு பெற்ற நிகழ்வை காலசம்ஹார மூர்த்தி என்று உருவகப்படுத்தினர். இதிலிருந்து நரசிம்மமூர்த்தியை அஹோபில வைணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். திருவரங்க தலவரலாற்றில் வரும் "பெருமாளிடமிருந்து புறப்பட்ட பெண் சக்தியும்" இதுவே தான் நரசிம்மருக்கு பின்னர் இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கும். இல்லையெனில், பத்து அவதாரங்களில் நரசிம்மருக்கு பதிலாக இந்தப் பெண் சக்தி இடம் பெற்றிருக்கும்.


🔷 காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டிருப்பார். நரசிம்மர் தூணைப் பிளந்து வெளிவந்திருப்பார். தூண் - தாணு - லிங்கம் - சிவம். வைணவம் சைவத்திற்கு மேல் என்று காட்டுவதற்காக "தூணிலிருந்து" என்று எழுதாமல், "தூணைப் பிளந்து" என்று எழுதியுள்ளார்கள். உயிரற்றது (தோன்றி மறைவது) உயிரைப் (என்றுமுளது) பிளந்து கொண்டு வருமாம்!! 😁


🔷 முன்னதில் உயிர் பயம் (எமதர்மன்) அழிக்கப்பட்டிருக்கும். பின்னதில் ஆணவம் (இரணியகசிபு) அழிக்கப்பட்டிருக்கும்.


🔷 முன்னதில் மார்க்கண்டேயர். பின்னதில் பிரகலாதன். இருவருமே சீவனைக் குறிப்பர். மார்க்கண்டேயர் உண்மையில் இருந்தவர். பிரகலாதன் என்பது உருவகம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

  

மெய்யறிவு கிடைக்கப் பெறுவது என்னவோ ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தான். அந்த ஒரு விநாடிக்குள் நடக்கும் அனைத்தையும் சேர்த்து காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார் என்று சொல்லிவிட்டார் மார்க்கண்டேய மகரிஷி. பின்னர் வந்த நம் தமிழ் பெரியவர்கள், இந்நிகழ்வை நன்கு துல்லியமாக ஆராய்ந்து, கிடைத்த முடிவுகளை நம் முன்னோர்கள் உருவாக்கிய முருக தத்துவத்தின் தோற்றத்தோடு இணைத்து, தகப்பன் சுவாமி என்று பெயரிட்டு, "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்ற பழமொழிப் பரிசையும் பெற்றார்கள்.


ஒரு வேளை இந்த ஆய்வுகள் முன்னமே நடந்திருந்தால், இரணிய வதத்திற்குப் பிறகு பிரகலாதன் துதி பாடி இருக்க மாட்டார். நரசிம்மருக்கு அறிவுரை கூறி இருப்பார்!! 🤭


இந்த தகவல்கள் எல்லாம் காஞ்சிபுரம், சிருங்கேரி போன்ற பாரம்பரியம் மிக்க அத்வைத மடங்களுக்கு உறுதியாக தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்களது இணைய தளங்களில் "நரசிம்மர் பத்மபாதருக்குள் நுழைந்து..." என்ற அத்வைதத்துக்கு புறம்பான செய்தியே உள்ளது. 😔

Tuesday, May 28, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் - ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம்

சென்ற வைகாசி வளர்பிறை பதினான்மையன்று (சதுர்த்தசி) சிங்கப்பெருமாளின் பிறந்த தினம் வைணவர்களால் கொண்டாடப்பட்டது. (பெரும்பாலும் சுவாதி நாள்மீனும் உடன் வரும்). அச்சமயம் சில இடுகைகளும், சில காணொளிகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அதிலொரு இடுகையில் சிங்கப்பெருமாளைப் புகழ்ந்து (அல்லது வேண்டி) #ஆதிசங்கரர் பாடிய #கராவலம்ப #தோத்திரம் (கை தூக்கி விடு / கை கொடு என்று வேண்டுதல்) பிறந்த வரலாற்றை எழுதியிருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

... ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த  காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு #கபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது வரலாறு. ...

👊🏼 தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் -  இவர்களாகவே ஆதிசங்கரரை சிங்கப்பெருமாளின் பத்திமன் என்று எழுதிக்கொண்டுவிட்டார்கள்!! 😃 பத்திமையும் மெய்யறிவும் வேறுவேறல்ல என்று இலக்கணம் எழுதியவர், வாழ்நாள் முழுவதும் "உருவமற்ற, செயலற்ற, குணங்களற்ற பரம்பொருள் ஒன்றே" என்ற பேருண்மையை நிலைநாட்டப் போராடியவர் ஒர் உருவத்திடம் பத்திமை கொண்டாராம்! விட்டால், அடுத்த பதிப்பில், சங்கரர் நாமத்தை போட்டுக் கொண்டுப் பாடினார் என்றும் எழுதுவார்கள்!! 😂

👊🏼 நரசிம்மர் பத்மபாதருக்குள் ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார் - அவென்ஜர்ஸ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவரை வைத்து எழுதியிருப்பார்கள் போலிருக்கிறது!! 😁 ஏற்கனவே ஒவ்வொரு சீவனுள்ளும் பரம்பொருள் உள்ளது (இந்த கண்ணோட்டம், மெய்யறிவு கிடைத்த பின், பரம்பொருளினுள் தான் அனைத்தும் உள்ளது என்ற மாறும்). இன்னொரு முறை பரம்பொருள் எப்படி நுழையும்? இப்படி நுழைய முடியும் என்று எடுத்துக் கொண்டால், ஏன் பத்மபாதருக்குள் நுழையவேண்டும்? கபாலிகனுக்குள் நுழைந்து அவனை சரி செய்திருக்கலாமே! 😎

(ஆவேசித்தல் - ஆ+வேசம் - ஆ+வேடம் - ஒரு சீவனின் உரு கொள்ளுதல்)

நாம் உயிரினும் மேலாக கருதும் ஒரு நபருக்கு கடுந்துன்பம் நேரப்போவதை உணர்ந்தால் / கண்டால், பாய்ந்தோடிச் சென்று எப்பாடுபட்டாவது அவரைக் காப்போம். துன்பத்தை போக்கிய பின்னரும், நாம் நமதியல்பு நிலைக்கு திரும்ப சற்று நேரமாகும். அச்சமயம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை இளைப்பாற வைக்க முயற்சிப்பார்கள். இது போன்றொரு நிகழ்வு தான் பத்மபாதருக்கு நடந்திருக்கும். தனது மெய்யாசிரியருக்கு நேரவிருக்கும் இன்னலை உணர்ந்தவுடன் / கண்டவுடன் பாய்ந்தோடிச் சென்று கபாலிகனைக் கொன்றிருக்க வேண்டும். கொன்ற பின்னரும், தனதியல்பு நிலைக்குத் திரும்பாமல் இருந்தவரை, தவம் கலைந்து எழுந்த ஆதிசங்கரரும், மற்ற மாணவர்களும் இளைப்பாற செய்திருக்க வேண்டும்.

ஆதிசங்கரர் செயற்கரிய செயல்களை செய்தவர் என்பதாலும், அவர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டபடியாலும் நிகழ்வுகள் கற்பனைகளோடு கலந்துவிட்டன. "பத்மபாதர் சிங்கமாக உருமாறினார்" என்ற ஆரம்ப நிலை 🤒 முதல், "பரம்பொருள் நரசிம்மமாக பத்மபாதருக்குள் நுழைந்து" என்று அவென்ஜர்ஸ் நிலை 🥴 வரை பல படிகளைத் தாண்டி விட்டது.  இவற்றுடன், ஒரு கூட்டத்தின் "தனது பத்திமனான" என்ற கைங்கர்யம் வேறு சேர்ந்துவிட்டது. 🤪

💥💥💥💥💥

ஆன்மாவின் போதமருளும் ஆசானாம் சங்கரன்
அவ்வான்மாவுக்கு அன்னியனாவனோ - அவ்வான்மாவாக
என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும்
அன்னவனன்றி மற்றார்

ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய #ஆத்மபோதம் என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை பகவான் ஸ்ரீரமணருக்கு அனுப்பியிருந்தார் ஒரு முகம்மதிய பத்திமர். அதைக் கண்ணுற்ற பகவான், ஓர் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, ஒரு புதிய தமிழ் மொழிபெயர்ப்பை எழுதினார். அந்த மொழி பெயர்ப்பின் மங்கல செய்யுளே மேலுள்ள பாடல்.

(இந்தச் செய்யுளில் ஆதிசங்கரர் யார் என்பதை மிகத்தெளிவாக காண்பிக்கிறார் பகவான்)

🌸🏵️🌹🌻🌷🌼💮

#சிங்கப்பெருமாள் என்பவர் யார் அல்லது எது என்று தெரிந்து கொண்டால் எல்லா குழப்பங்களும் தீரும்:

சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே #காலசம்ஹார #மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். #காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! 

(உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", #பகவான் #ஸ்ரீரமணர் 😀)

Friday, May 24, 2019

Talk #196 (from #Talks #with #Maharishi)

Devotee: Seeking the ‘I’ there is nothing to be seen.


Maharishi: Because you are accustomed to identify yourself with the body and sight with the eyes, therefore, you say you do not see anything. What is there to be seen? Who is to see? How to see? There is only one consciousness which, manifesting as ‘I-thought’, identifies itself with the body, projects itself through the eyes and sees the objects around. The individual is limited in the waking state and expects to see something different. The evidence of his senses will be the seal of authority. But he will not admit that the seer, the seen and the sight are all manifestations of the same consciousness - namely, ‘I-I’. Contemplation helps one to overcome the illusion that the Self must be visual. In truth, there is nothing visual. How do you feel the ‘I’ now? Do you hold a mirror before you to know your own being? The awareness is the ‘I’. Realise it and that is the truth.


D.: On enquiry into the origin of thoughts there is a perception of ‘I’. But it does not satisfy me.


M.: Quite right. The perception of ‘I’ is associated with a form, maybe the body. There should be nothing associated with the pure Self. The Self is the unassociated, pure Reality, in whose light, the body, the ego, etc. shine. On stilling all thoughts the pure consciousness remains over.


Just on waking from sleep and before becoming aware of the world there is that pure ‘I-I’. Hold to it without sleeping or without allowing thoughts to possess you. If that is held firm it does not matter even though the world is seen. The seer remains unaffected by the phenomena.

🌺 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசலரமணாய 🌺


🏵️ திருச்சிற்றம்பலம் 🏵️


🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼

Sunday, May 12, 2019

வெங்காயம் சுக்கானால்... 😍

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

-- #காளமேகப் #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் - வெறும் காயம் - வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் - காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன - உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல்  - சீரகம் - சீரான அகம் - அலைபாயாத மனம் - சஞ்சலமற்ற அறிவு - நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்...

🔶 வேண்டேன் பெருங்காயம் - பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே - வேரகம் - #திருவேரகம் - #சுவாமிமலை. செட்டியார் - (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் - #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்? 😔

🌱🌿🌳🌴

இந்த பாடல் எனக்கு கிடைக்கும் போதே நாமப்பேர்வழிகளின் கைங்கரியத்துடன் தான் கிடைத்தது. சீரகம் என்றால் ஸ்ரீ + அகமாம்! 😝 ஏரகம் என்றால் வைகுண்டமாம!! 😂 (கணவனும் மனைவியும் தனிதனிக் குடித்தனம் போலிருக்கிறது!! 😁) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கூட்டம் சைவத்திலிருந்தோ, அத்வைதத்திலிருந்தோ கதைகளை சுட்டு வைணவ காப்புரிமை (நாமம்) போட்டுவிடும் என்பதை நன்கு அறிவேன். இது தான் முதல் முறை ஒரு சைவப் பாடலை சுடுவதைப் பார்க்கிறேன். அன்னை தமிழை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்பதாலா? "யாரும் சரியாக கவனிக்காத போது", "அனைவரின் கவனமும் வேறு திசையில் இருக்கும்போது", "இன்னும் புகழ் பெறாத மகான்"... எல்லாம் இவர்களது தொழிலின் உட்கூறுகள்!! அந்த கொங்கணவச் சித்தரும் (திருமலை பெருமாள் 🌺🙏🏼), சட்டை முனி சித்தரும் (திருவரங்கப் பெருமாள் 🌺🙏🏼) தான் இவர்களை திருத்த வேண்டும்.

💥💥💥💥💥

இப்படியே போனால் இவர்களது பாதையில் தொடர்ந்து வரும் பரங்கி மதத்தினர் இன்னும் சில தலைமுறைகளில் இப்பாடலை தமதாக்கி, சீரகம் எனில் உள்ளூர் கிளை என்றும், ஏரகம் எனில் இத்தாலியிலுள்ள தலைமை அலுவலகம் என்றும் கதை விட வாய்ப்புள்ளது!! 🤣🤣

💥💥💥💥💥

இன்று வரை வெட்டு, குத்து, குண்டு என்று தொழிலை ஓட்டும் வெடிகுண்டு மதத்தினர் ஒரு வேளை நாம பேர்வழிகளின் வழியில் பயணிக்க நேர்ந்தால்... சீரகம் எனில் உள்ளூர் தீவிரவாத பயிற்சி கூடத்திலுள்ள சுவர் என்றும், ஏரகம் எனில் கருப்புத்துணி மூடிய கட்டிடம் என்றும் கதை விடுவார்கள் என்று உறுதியாக கற்பனை செய்து கொள்ளலாம்!! 🤣🤣🤣