Friday, May 31, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் – ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம் - பகுதி #2


திருக்கடவூரில் மார்கண்டேய மகரிஷி மெய்யறிவு பெற்ற நிகழ்வை காலசம்ஹார மூர்த்தி என்று உருவகப்படுத்தினர். இதிலிருந்து நரசிம்மமூர்த்தியை அஹோபில வைணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். திருவரங்க தலவரலாற்றில் வரும் "பெருமாளிடமிருந்து புறப்பட்ட பெண் சக்தியும்" இதுவே தான் நரசிம்மருக்கு பின்னர் இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கும். இல்லையெனில், பத்து அவதாரங்களில் நரசிம்மருக்கு பதிலாக இந்தப் பெண் சக்தி இடம் பெற்றிருக்கும்.


🔷 காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டிருப்பார். நரசிம்மர் தூணைப் பிளந்து வெளிவந்திருப்பார். தூண் - தாணு - லிங்கம் - சிவம். வைணவம் சைவத்திற்கு மேல் என்று காட்டுவதற்காக "தூணிலிருந்து" என்று எழுதாமல், "தூணைப் பிளந்து" என்று எழுதியுள்ளார்கள். உயிரற்றது (தோன்றி மறைவது) உயிரைப் (என்றுமுளது) பிளந்து கொண்டு வருமாம்!! 😁


🔷 முன்னதில் உயிர் பயம் (எமதர்மன்) அழிக்கப்பட்டிருக்கும். பின்னதில் ஆணவம் (இரணியகசிபு) அழிக்கப்பட்டிருக்கும்.


🔷 முன்னதில் மார்க்கண்டேயர். பின்னதில் பிரகலாதன். இருவருமே சீவனைக் குறிப்பர். மார்க்கண்டேயர் உண்மையில் இருந்தவர். பிரகலாதன் என்பது உருவகம் மட்டுமே என்று நினைக்கிறேன்.

  

மெய்யறிவு கிடைக்கப் பெறுவது என்னவோ ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தான். அந்த ஒரு விநாடிக்குள் நடக்கும் அனைத்தையும் சேர்த்து காலசம்ஹார மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார் என்று சொல்லிவிட்டார் மார்க்கண்டேய மகரிஷி. பின்னர் வந்த நம் தமிழ் பெரியவர்கள், இந்நிகழ்வை நன்கு துல்லியமாக ஆராய்ந்து, கிடைத்த முடிவுகளை நம் முன்னோர்கள் உருவாக்கிய முருக தத்துவத்தின் தோற்றத்தோடு இணைத்து, தகப்பன் சுவாமி என்று பெயரிட்டு, "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்ற பழமொழிப் பரிசையும் பெற்றார்கள்.


ஒரு வேளை இந்த ஆய்வுகள் முன்னமே நடந்திருந்தால், இரணிய வதத்திற்குப் பிறகு பிரகலாதன் துதி பாடி இருக்க மாட்டார். நரசிம்மருக்கு அறிவுரை கூறி இருப்பார்!! 🤭


இந்த தகவல்கள் எல்லாம் காஞ்சிபுரம், சிருங்கேரி போன்ற பாரம்பரியம் மிக்க அத்வைத மடங்களுக்கு உறுதியாக தெரிந்திருக்கும். ஆனாலும், அவர்களது இணைய தளங்களில் "நரசிம்மர் பத்மபாதருக்குள் நுழைந்து..." என்ற அத்வைதத்துக்கு புறம்பான செய்தியே உள்ளது. 😔

No comments:

Post a Comment