Monday, June 7, 2021

சிகிரியா - பேரரசர் இராவணேசுவரரின் கோட்டை

https://youtu.be/UGFyi5WHzwA

பேரரசர் இராவணேசுவரரின் சிகிரியா கோட்டை மற்றும் அதிலுள்ள 7 அடுக்கு பாதுகாப்பு வளையங்களில் 2 அடுக்குகளைப் பற்றி விளக்குகிறார்.

பார்த்து முடிக்கும் போது வியப்பும் மலைப்பும் மிஞ்சுவது உறுதி! உடன் பல கேள்விகளும் தோன்றும். குறிப்பாக, "எப்படி இவ்வாறெல்லாம் நம்மால் கட்ட முடிந்தது?" என்ற கேள்வி தோன்றும்.

இதற்கான எனது பதில்:

521 ஆண்டுகளுக்கு முன், வாஸ்கோடகாமா என்னும் "பரங்கிக்கடவுள்" நம்மை கண்டுபிடிக்காவிட்டால் நமக்கும் உலகைப் பற்றி தெரிந்திருக்காது! உலகத்திற்கும் நம்மைப்பற்றி தெரிந்திருக்காது!! நமக்கு நம்மைப் பற்றி கூட தெரிந்திருக்காது!!! 😛 அண்மையில் ஜாக்கி இடாகு (பிராண்ட்) உள்ளாடைகள் நம் நாட்டிற்குள் வந்துசேரும் வரை, நமக்கு உள்ளாடைகள் என்றால் என்னவென்றே தெரியாது!! 😀 ஆகையால், இவற்றையெல்லாம் பரங்கியரின் மேலான வழிகாட்டுதல் இல்லாமல் நம்மால் கட்டியிருக்க முடியாது. பின்னர், எவ்வாறு கட்டியிருப்போம்?

தலையில் ஒர் ஆப்பிள் விழுந்தவுடன் புவியீர்ப்பு விசையைப் பற்றி "உணர்ந்து கொண்ட" (😉) நியூட்டன், குளியல் தொட்டியில் இறங்கியவுடன் நீர் இடப்பெயர்ச்சி கோட்பாட்டைக் "கண்டுபிடித்த" (😏) ஆர்க்கிமிடிஸ் போன்ற மாமேதைகளை (🤭) உலகுக்களித்த வெள்ளையினத்தவர், அவர்களது திரைப்படங்களில் வருவது போன்று, நேரப்பயணம் மேற்கொண்டு, பேரரசர் காலத்திற்கு சென்று, ஐந்திரம் என்ற உலகின் முதல் அறிவியல் நூலை எழுதிய மாமுனி மயன் 🌺🙏🏽 போன்ற முட்டாள்களுக்கு வழிகாட்டிவிட்டு, தங்களது காலத்திற்கு திரும்பியிருப்பர். வேறு வழியேயில்லை! ஆமென்!! 😁

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽💪🏽💪🏽😌

(பி.கு.: ஆமென் எனும் சொல் ஆமாம், ஏற்கிறேன், உடன்படுகிறேன் ஆகிய தமிழ் சொற்களிலிருந்து வந்ததாகும்.)

No comments:

Post a Comment