Monday, June 14, 2021

வைகாசி - பூசம் (14/06/2021) - தெய்வச் சேக்கிழார் திருநாள் 🌺🙏🏽🙇🏽‍♂️



சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்து, தனது திறமையாலும், மதிநுட்பத்தாலும் பேரரசர் இரண்டாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர். வடக்கிலிருந்து வந்த இருள் மதமான சமணத்தின் பக்கம் சாய ஆரம்பித்த பேரரசரை தடுத்து நிறுத்த, தனது பதவியினைத் துறந்து, பெரிய புராணம் என்னும் ஓர் ஒப்பற்ற தமிழ் பொக்கிசத்தை இயற்றி, அன்னைத் தமிழையும், தமிழர் சமயத்தையும் & பண்பாட்டையும் மீண்டும் காப்பாற்றினார். (முதலில் காப்பாற்றியவர் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️)

🌸🌼🌻🏵️💮


சேக்கிழார் வாழ்ந்த வீடு. தற்போது அவரது திருக்கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்


திருக்கோயிலின் நுழைவாயில்


நுழைவாயிலுக்கு எதிர்புறமுள்ள திரு கந்தழீசுவரர் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️. சேக்கிழார் வணங்கிய பெருமான். இவர், குன்றத்தூர் மலைக்கோயில் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமானின் மெய்யாசிரியர் ஆவார்.


குடந்தை திருநாகேச்சுர திருத்தல இறைவன்பால் சேக்கிழார் கொண்ட அன்பின் காரணமாக குன்றத்தூரில் அவர் கட்டிய திரு நாகநாதர் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️


மூலவர் திரு நாகநாதர் 🌺🙏🏽🙇🏽‍♂️


இந்த மூலவர் மீது சென்ற நூற்றாண்டில் சிறு சிதைவு ஏற்பட்டது. அவரை நீக்கி விட்டு புதிய மூலவரை நிறுவினர். ஆனால், அதன் பிறகு, ஓர் அன்பரின் கனவில் தோன்றிய இறைவன், பழைய மூலவரே தனக்கு பொருத்தமானது என்று தெரிவித்தார். உடனடியாக, பழைய மூலவரை மீண்டும் நிறுவினர். புதிய மூலவரை கருவறையின் நேர் பின்புறம் "திரு அண்ணாமலையார்" என்ற பெயரில் நிறுவினர். 🌺🙏🏽🙇🏽‍♂️


சேக்கிழாரின் மேற்பார்வையில், பேரரசர் இரண்டாம் ராஜராஜ சோழர் கட்டிய கலைப் பொக்கிசமான தாராசுரம் திரு ஐராவதேசுவரர் திருக்கோயில்


தில்லைக் கூத்தப் பெருமானே (திருமூலர் 🌺🙏🏽🙇🏽‍♂️) சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்த பெரிய புராணத்தின் முதல் பாடல்:

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகுஇல் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


ஒல்லையவர் புராணக்கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடிபோற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

🌷 "தமிழைக் கற்க வேண்டுமா? பெரிய புராணத்தை முறையாகப் படி!" என்று ஒரு சைவப் பெரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment