Monday, November 19, 2018

இணையத்தில் தமிழ் வளர்க்க உதவும் கூகுளின் 4 அருமையான உள்ளீட்டு சாதனங்கள்!!

கடந்த சில வருடங்களில் கூகுள் அதன் #உள்ளீட்டு சாதனங்களை மிகவும் செம்மையாக்கி உள்ளது! 👌 புதிய உள்ளீட்டு முறைகளையும் உருவாக்கியுள்ளது. ஆனால், இவை யாவும் பெரும்பான்மையான மக்களைச் சென்றடையவில்லை என்றே கருதுகிறேன். இன்றும் பலர் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழை தப்பும் தவறுமாக எழுதுகின்றனர். தமிழில் எழுதுவோரும் பிழைகளை சரி செய்ய முயல்வதில்லை (தமிழில் #உள்ளீடு செய்வது சிரமம் என்று அவர்கள் கருதுவதால்). இத்தகையோருக்கு உதவுவதற்காக இந்த பதிவு.

🔷 தங்களது கைபேசியின் முதன்மை மொழியாக #தமிழ் இருப்பது நல்லது.

🔷 தங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் கீழ்காணும் 2 செயலிகள் தாம்:


இச்செயலிகளை பதிவிறக்கம் செய்த பின், அதன் அமைப்புகளுக்குச் சென்று (Settings - Language & Input) தேவையான மாற்றங்களை செய்து கொள்ளவும்.

இனி, தங்களால் 4 வழிகளில் தமிழை உள்ளிட முடியும். இவற்றைப் பற்றி பார்ப்போம்:

1. தட்டச்சு - இது அனைவரும் அறிந்த முறை. எனவே மற்றவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

2. விரலை நகர்த்தி உள்ளிடுதல் (Swiping) - தட்டச்சை விட சுலபமானது என்றாலும் இம்முறையிலும் தட்டச்சு முறையைப் போன்று நேரம் மற்றும் மிகுந்த பொறுமை தேவைப்படும். மேலும், ஒவ்வொரு சொல்லின் உயிர் & மெய் எழுத்துக்கள் வேகமாக நினைவிலிருந்து வெளிவரவேண்டும் (வேலை - வ+ஏ+ல+ஐ). ஆனால், ஆரம்ப நிலை தமிழ் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். 👍 (செயல் விளக்கம்)

3. கையெழுத்து உள்ளீடு (Handwriting Input) - இனி வரும் காலங்களில் இம்முறையே அதிகம் பயன்படுத்தப்படும் என்று உறுதியாகக் கூறலாம். அவ்வளவு எளிமையானது. குழந்தைகள் முதல் கை நடுக்கமுள்ள பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எழுத்தாணி (Stylus) இல்லாமல், வெறும் விரலை நகர்த்தியே எழுதலாம். ஆனால், குறியீடுகளை உள்ளிடுவது கடினம். குறியீடுகளுக்கு மேற்சொன்ன விசைப்பலகையை பயன்படுத்தவும். (செயல் விளக்கம்)

4. குரல் உள்ளீடு (Voice Input) - முதன்முதலாக இம்முறையை பயன்படுத்தியவுடன் பெரும்பாலானோருக்கு தோன்றும் உணர்வு - ஆச்சர்யம்!! முகமலர்வு, புன்முறுவல், பெருமிதம் போன்ற உணர்வுகளும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். 😊 இம்முறையினால் சமூக வலைதளங்கள் இன்னமும் பல மடங்கு வளரும். எதிர்காலத்தில் கருவிகள் பெரும்பாலும் இம்முறையில் தான் இயக்கப்பெறும்.

மேற்சொன்ன அனைத்து முறைகளையும் இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். ஆனால், தமிழ் குரல் உள்ளீட்டிற்கு, தற்போதைக்கு, இணையம் தேவை. அமைதியான சுற்றுபுறச் சூழல் மற்றும் சரியான உச்சரிப்பு இருக்கும் போது 100% சரியாக வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். இம்முறையிலும் அனைத்து குறியீடுகளை உள்ளிடுவது கடினம். (செயல் விளக்கம்)

மேலே பட்டியலிட்ட முறைகளில், கையெழுத்து மற்றும் குரல் உள்ளீட்டு முறைகளுக்காக கூகுள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். "இனி நம் தமிழன்னை இணையத்தில் வாழ்வார்" என்று சொன்னால் எவ்விதத்திலும் மிகையாகாது. இதை சாத்தியப்படுத்திய கூகுள் நிறுவனத்திற்கு நாம் என்றென்றும் நன்றி கூறவேண்டும். 👏👌👍🙏

கருவிகள் எவ்வளவு மேம்பட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நாம் மேம்படாவிட்டால், நமது சிந்தனை மேம்படாவிட்டால், எவ்வித மாற்றமும் ஏற்படாது. சூழ்நிலைக்கேற்ற சரியான சொற்களை பயன்படுத்த முயலவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் சொல்லாராய்ச்சியில் ஈடுபடவேண்டும். இதனால் நமது சிந்தனை வளம் பெறும். நமது அன்னையும் நலம் பெறுவார். 🙏

💮💮💮

குறிப்புகள்:

1. இணைப்பு காணொளிகளில் நான் பயன்படுத்தியுள்ள வாசகம் #பகவான் #ஸ்ரீரமணர் அருளியது. உலக வாழ்க்கையிலிருந்து முழுதும் விடுபட முடியாத ஆன்மிக அன்பர்களுக்காக பகவான் அருளிய அருமருந்து. 🌸🙏

2. இந்த இடுகையை பெரும்பாலும் கையெழுத்து உள்ளீட்டு முறையைக் கொண்டும், சிறிதளவு குரல் உள்ளீட்டு முறையைக் கொண்டும், குறியீடுகளை GBoard கொண்டும் உருவாக்கியுள்ளேன்.

🌼🏵🌷🌻🌺🌹🌼

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்.

இப்பாடலில் இடம் பெற்றிருக்க வேண்டிய 2 முக்கிய உண்மைகள்:

💥 "மொழிகளில் பரத்தை" என்னும் பட்டம் பெற்றுள்ள ஆங்கிலமும் 😝 மேம்பட்டது தமிழர்களால் - தமிழால் - தான்!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளது. ஆங்கிலத்திலுள்ள சுமார் 13,000 சொற்கள் தமிழிலிருந்து சென்றவை (WW #Skeat, The #Etymological #Dictionary of #English Language).

1706-ல் தரங்கம்பாடியில் டேனிஷ் பரங்கி மதத்தினர் வந்திறங்கினர் (பரங்கி இனம் ஓர் இடத்திற்குச் செல்கிறது என்றால் அது திருடவும், ஏமாற்றவும், கொள்ளையடிக்கவும், ஸ்லீப்பர் செல்களை உருவாக்கவும் தான்). அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களையும், சித்த மருத்துவர்களையும் பணியில் அமர்த்திக் கொண்டனர். ஆயிரக்கணக்கான ஒலைச்சுவடிகளை சேகரித்து, கப்பல் கப்பலாக அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைத்தனர். இதன் பின்னரே அவர்களது மருத்துவம், அழி(றி)வியல் எல்லாம் வளர ஆரம்பித்தது. (முனைவர். ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு)

💥 #ஆரியம் செம்மையானதும் நம்மால் தான்!!

ஆரிய இலக்கண நூலான #பாணிணீயம் அரங்கேற்றப்பட்டது நமது #திருவொற்றியூர் #ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் தான் (முனைவர் மா.கி. ரமணன், ஓங்கு புகழ் ஒற்றியூர்). #சமற்கிருதம் எனில் "சமன் செய்யப்பட்ட / சரி செய்யப்பட்ட மொழி" என்று பொருள். ஆனால், நம் தமிழ் நிறைமொழியும் இறைமொழியுமாகும். 'அ' என்ற உயிரெழுத்திற்கு சிவன் என்றொரு பொருளும் உண்டு. எதிலிருந்து அனைத்தும் தோன்றி நிலைபெறுகிறதோ அதுவே சிவம் எனப்படும். இந்தப் பொருளை அனைத்திற்கும் முதலான 'அ' என்ற உயிரெழுத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் என்றால் தமிழின் அடிப்படையெது? கலாம் என்றால் கலகம் என்று பொருள் கண்டுபிடிக்க உதவும் பகுத்தறிவா? ✊👊👊👊

posted from Bloggeroid

No comments:

Post a Comment