Tuesday, November 27, 2018

ஜி யு போப் தமிழுக்கு தொண்டு செய்தானாம்!!!


எப்பொழுதெல்லாம் அடி, உதை அதிகமாக விழுகின்றதோ அப்பொழுதெல்லாம் மதச்சார்பின்மை, சிக்-குலரிஸம் போன்ற பதாகைகளை தூக்கிப் பிடித்துக் கொள்வர் சர்ச்சியர்கள். அதிலொரு பதாகை தான் இது.

நாவலரை #ஜி #யு #போப் என்ற ஒரு வெள்ளை நரியோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கும், இந்த நரி, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது தனது இனம் தெரிந்து கொள்ளத் தான் என்று வெளிப்படையாகவே ஊளையிட்ட பிறகும், இது ஏதோ தமிழுக்கும் சைவத்திற்கும் நாவலரைப் போன்று அருந்தொண்டு புரிந்தது போன்று இன்று வரை படம் காட்டுகிறார்கள். இது செம்பொருளை (மெய்பொருள் / பரம்பொருள்) வேறு அறிந்ததாம். இதற்குத் தெரிந்ததெல்லாம் எந்த கருவூலத்தில் எவ்வளவு பொருள் இருக்கிறதென்பதும், எந்த அறிஞரிடம் என்ன அறிவு இருக்கிறதென்பதும் தான் (அதுவும் திருடுவதற்கும், பிடுங்கிச் செல்வதற்கும் தான்).

பதாகை தூக்கிப் பிடிக்கும் போதும் கருங்காலித்தனத்தை கைவிடவில்லை. நாவலர் தான் பரலோக சாம்ராஜ்ஜியம், பரிசுத்த ஆவி, கிருபை போன்ற சொற்களை உருவாக்கினாராம். அதாவது, இவர்களது சுவிசேஷம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக காரணம் இந்த சொற்கள் தானாம்! இவற்றை #நாவலர் தான் உருவாக்கியதால், அவர் தான் இவர்களது நிலைக்கு காரணமாம். சோத்துல செங்கல்!!!!

சில காலத்திற்கு முன்பு, மிஷ-நரிகள், "நாவலர் ஒன்றும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு முன்னரே ஒரு தேவன் (தேவன் - வெள்ளையன்; பெயர் நினைவில்லை) வேலைகளை ஆரம்பித்துவிட்டான்." என்று பிட் போட்டுப் பார்த்தார்கள். இதற்குக் காரணம் நிற வெறி! சர்ச்சிய மதத்தின் தேவர்களாகிய வெள்ளையர்கள் எப்படி ஒரு கருப்பரிடம் உதவி பெறுவது? வெட்கக்கேடு! ஆகையால், பிட் தயாரித்து வரலாற்றை மாற்ற முற்பட்டார்கள். இன்று கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியதால், நாவலரை முன் நிறுத்திவிட்டார்கள். வெள்ளை தேவர்கள் காப்பாற்றப் படவேண்டும். மதமானாலும் சரி, போபால் விஷவாயு கசிவானாலும் சரி, குரங்கணில்முட்டம் தீ விபத்தானாலும் சரி, வெள்ளையன் காப்பாற்றப்பட வேண்டும்!

நாவலர் ஒன்றும் புதிய மதத்தை உருவாக்கவில்லை. வெள்ளையர்கள் கொடுத்ததை தமிழில் மொழிப்பெயர்த்துக் கொடுத்தார். மூலத்தில் "பிம்பிளிக்கா பிலாபி" என்றிருந்தால் அவர் என்ன செய்யமுடியும்? மொழி பெயர்க்கும் போது, அவருக்குத் தோன்றியிருக்கும் ஐயங்களை வெள்ளையர் தாம் களைந்திருக்க வேண்டும். அந்த மடையர்கள் என்ன உளறி வைத்தார்களோ? இன்று தான் இவர்களது மதம் நமது அடையாளங்களை அடைய, உரிமை கொண்டாட துடிக்கிறது. ஆனால், அன்று தனி அடையாளங்களையே விரும்பியது. ஆகவே, நாவலரும் மற்ற மதங்களில் இல்லாத சில சொற்களைக் கொடுத்து அந்த புண்ணாக்குகளை தேர்ந்தெடுக்கச் சொல்லிப் பயன்படுத்தியிருப்பார். அடுத்து, நாவலர் மொழிப் பெயர்த்துக் கொடுத்ததை இவர்கள் திருத்தக்கூடாது என்று விதி ஒன்றுமில்லையே. இத்தனை வருடங்களில் மாற்றிக் கொண்டிருக்கலாமே. சமீப காலமாக தமிழில் உயர் மற்றும் முனைவர் கல்வி கற்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் மதத்தினர் தானே.

இறுதியாக, "மதவெறி கொண்ட யானைகள் மனிதனாக மாறட்டும்" என்று பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார்கள். ஒருவேளை, தங்களுக்குத் தாங்களே அறிவுரை கூறிக் கொண்டிருப்பார்களோ? ஏனெனில், நமது சைவம் சமயம் எனப்படும். மற்ற அனைத்தும் மதம் எனப்படும். சமயம் x மதம். பக்குவம் x வெறி. "பக்குவ வெறி கொண்ட..." என்று வேண்டுமானால் நம்மை அவர்கள் புகழ்ந்து கொள்ளலாம்!

🔷🔶🔷🔶🔷🔶

சமீபத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் முகநூலில் பதிப்பித்த ஒரு இடுகையை சிறிதும் மாற்றாமல் கீழே கொடுத்துள்ளேன். அதில், #அருள் என்னும் புனிதச் சொல்லிற்கு #இஸ்ரேலிய அறிஞர்கள் கொடுத்திருக்கும் துல்லியமான மற்றும் அருமையான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

🔷🔶🔷🔶🔷🔶

ஒவ்வொரு எழுத்திலும் நஞ்சு தோய்த்து வேலை செய்வது என்பதில் கை தேர்ந்தவர்கள் மிசிநரிகள். ஒவ்வொரு முறை நம்மவர்கள் ஜியு போப்பின் திருவாசக மொழி பெயர்ப்பை பாராட்டும் போது எனக்கு உடல் அருவெருப்பால் கூசும். ஜி.யு. போப் மிகத் தெளிவாகவே சைவத்தின் மீது தனக்கு மிகக் கீழ்மையான பரிவே (scanty sympathy) உண்டு என்றும் தான் இந்த மொழி பெயர்ப்பை செய்வதே ஆங்கிலம் படித்த நம்மவர்கள் அவர்களின் மத இலக்கியங்களை படிக்க வகை செய்ய என்று சொன்ன பின்னரும் ஏதோ ஜியு போப் இல்லை என்றால் தமிழும் இல்லை சைவமும் இல்லை என்பது போல போப் சொல்லாதவற்றை எல்லாம் சொல்லி அந்த ஆளைக் குறித்து புளகாங்கிதம் அடையும் அடிமையின் மோகம் என்னை கூசி குறுக வைக்கும் ஒன்று.

நான் மிகவும் மதிக்கும் ஒரு பிரபல சைவ சித்தாந்தி குறித்த ஒரு ஆவணப்படத்தில் அவர் வீட்டில் சைவம் குறித்து ஜி.யு.போப் சிலாகித்து சொன்னது போல ஒரு மேற்கோளை வைத்திருக்கிறார். அதை காட்டிய போது என் மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகியது. நம்மவர்கள் ரொம்பவே நல்லவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என நம்பிவிடுகிறார்கள்.

யூதர்களுக்கு கிறிஸ்தவ மதமாற்ற திரிபுகள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகள் பரிச்சயம் உண்டு. எனவே அவர்களால் மிகச் சரியாக கிறிஸ்தவ மொழிமாற்ற தகிடுதத்தங்களை கண்டு பிடித்து விட முடியும். நாம் பல நேரங்களில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிற விஷயங்களில் மதமாற்ற விஷம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை அவர்களால் சட்டென கண்டடைந்து விட முடிகிறது.

ஜி.யு.போப் அருள் என்பதை grace என மொழி பெயர்ப்பு செய்கிறார். நமக்கு இது ஒரு விஷயமாக அல்லது ஒரு திட்டமிட்ட திரிபாக தோன்றுவதில்லை. நாமுமே பல நேரங்களில் இதை அடியொற்றி அருளை grace என மொழி பெயர்க்கிறோம். டேவிட் சூல்மனும் டான் காண்டெல்மனும் யூதர்கள். ஜெருசலேம் பல்கலைக்கழகத்தினர். சைவ திருமுறைகளின் மொழி பெயர்ப்புகளில் அருள் என்பது grace என மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். இனி அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

There is an unfortunate tendency to translate this critical term [அருள்], in nearly every context, as ‘grace,’ with its heavy Christian connotations. Arul can, it is true, correspond in Śaiva texts to Sanskrit anugraha, the god’s compassionate giving to his servants. More often, however, it approximates a notion of coming into being or freely becoming present, close, alive…Arul, for the Siddhantins, is śakti - an active and female aspect of Śiva. Not ‘grace’ but ‘emergent presence. It, or she, is dynamic and oriented toward freedom…an experiential process of full, unconstricted potentiality.

என் வருத்தமெல்லாம் நம் ஆதீனங்களிடம்தான். போப் மொழி மாற்றத்தில் மத மாற்ற தகிடுதத்தம் செய்கிறார் என்பதை சொல்ல நமக்கு ஒரு டேவிட் சூல்மன் தேவையில்லை. ஆனால் நேருவிய-திராவிடிய பண்பாட்டு அறிவின்மையின் விளைவாக ஒரு டேவிட் சூல்மன் இதை சொல்ல தேவைப்படுகிறார்.

ஜி.யு. போப் செய்த மொழி பெயர்ப்பு ஒரு மதமாற்ற உக்தி. அது உண்மையில் திருவாசகத்தின் தமிழின் மகோன்னதத்தை ஆன்மிக அனுபவம் சார்ந்த ஒரு மகத்தான இலக்கியத்தை ஒரு நம்பிக்கை சார்ந்த ஓரிறை மத கோட்பாட்டுக்குள் குறுக்கும் ஒரு உக்தி எனவே வெறும் கீழ்மையான திரிபு அன்றி வேறில்லை. இந்நிலையில் நம் ஆதீனங்கள் போப்பின் மொழி பெயர்ப்பை சித்தாந்த நிலைபாட்டிலிருந்து அக்கு வேறு ஆணி வேறாக கழற்றிக்காட்டி அதன் பொய்மையையும் சிறுமையையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் நம் நேருவிய தலைமுறைகள் (நம் பெற்றோர், நாம் , நம் இளைஞர்கள்) எந்த பாரம்பரிய உரையையும் பொருளையும் தெரிந்து கொள்ளாமல் ’திருவாசகத்துக்கு நான் ஜி.யு.போப் உரையை வைத்திருக்கிறேன்’ என பெருமை பேசி திரிவதுதான்.

எனவே இதை நம் சைவ ஆதீன கர்த்தர்களிடமும் சித்தாந்த அறிஞர்களிடமும் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன். போப்பின் மொழி பெயர்ப்பு தமிழை சிறுமைப்படுத்துவது; சைவத்துக்கு புறம்பானது; கீழ்மையான மதமாற்ற நோக்கம் கொண்டது என அவர்கள் அனைவரும் இணைந்து அதிகார பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

🔷🔶🔷🔶🔷🔶

நமது #அருள் என்னும் சொல்லை வடமொழியின் #அனுக்கிரஹம் என்ற சொல்லோடு சமன்படுத்தியிருக்கிறார்கள். இது சரியே. ஆனால், அனுக்கிரஹத்திற்கு பொருள் கூறும் போது "இறைவனின் கருணை கலந்த கொடை" (Compassionate giving) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். இது தவறு. இது மீண்டும் #Grace என்ற சொல்லிற்கு சமமாக்கியது போலாகும்.

💠 அனு + கிரஹம் = அருகில் + இடம் = அருகிலுள்ள இடம்
💠 அனு + கிர + ஹ = அருகில் + உணர் + இறைவன் = இறையை அருகிலிருந்து உணர்தல்

இப்படி பொருள் கொண்டால் மட்டுமே இரண்டு சொற்களும் சமமாகும்.

அடுத்து, அருளை #சக்தி என்ற வடமொழி சொல்லோடு சமன்படுத்தி, அதற்கு "இறையுணர்வு தோன்றும் / வெளிப்படும் இடம்" (Emergent Presence) என்று பொருள் கூறியிருக்கிறார்கள். அருமை! இதைத் தான் #சந்நிதானம் என்று அழைக்கிறோம். சக்தி என்ற சொல்லின் சரியான பொருள் கலந்திருத்தல். இறை உருவிற்கு போடப்பட்ட மாலையின் நிலை போன்று என்று கூறலாம். மிக மிக மிக மிக அருகில் என்றும் கூறலாம்.

இறுதியாக, அருள் = அ + ரு + ள் = அருகில் + உட்கொண்டு செல்லுதல் + இடத்திலிருந்து = வெளியிலிருந்து என்னை உனதருகே கொண்டு செல்

(அ-வுக்கு பதிலாக இ எனில் மறுத்தல் / மறைத்தல் = இறைவன் மறுத்துவிட்டார் / மறைந்துவிட்டார். அ-வுக்கு பதிலாக ம எனில் நின்று / தங்கிப் போதல் = வெளி உலகிலேயே தங்கிவிடல்.)

ஆக, அருள், அனுக்கிரஹம், சக்தி, சந்நிதானம் எல்லாம் ஒரு பொருளையேத் தருகின்றன - இறைவனுக்கு மிக மிக அருகில். பிறவியெடுக்கும் ஒரு சீவன் அடையக்கூடிய மிக உயர்ந்த நிலையும் இது தான். இதை உணர்ந்த விதத்தில் ஏற்பட்ட தகராறு தான் இன்று பூமியிலுள்ள பல்வேறு மதங்கள்.

அடுத்த முறை, "இறைவா, எனக்கு உன் அருள் தா" என்று வேண்டும் போது, "இறைவா, உனக்கருகில் என்னை வைத்துக் கொள்" அல்லது "இறைவா, உனக்கருகில் நானிருக்க இடம் கொடு" என்று வேண்டுகிறோம் என்பதை உணர வேண்டும். அந்த இடமும் வேறெங்கோ இல்லை. நம்முள் தான் உள்ளது. அந்த இறைவனும் வேறு யாருமல்லர். நாமே தான் (நமது இயல்பு)!

தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனும் 
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்

- #அப்பர் #தேவாரம்

🙏 🙏 🙏 🙏 🙏 🙏

posted from Bloggeroid

No comments:

Post a Comment