Thursday, May 4, 2017

சீமைக்கருவேலம் பற்றி மறைந்த கலாம் ஐயா அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ்

​*சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டாம் என்று போடிநாயக்கனூரில் 4.3.17 அன்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் அளித்த பேட்டி:*

நண்பர்களே, 

#சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பில் பரப்பட்ட தகவல் காரணமாக, ஏதோ அது விஷ செடி, நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்,  அது தீங்கு   உடனே அழிக்காவிட்டால், இந்த நாடே நாசமாகிவிடும் என்று பரப்பப்பட்டு, அதை அப்படியே நம்பி, இந்த பொய்யான தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அதன் அறிவியல் உண்மைகளை ஆராயாமல்,  நீதிமன்றமும் தடை செய்து, அதை அழிக்க உத்திரவிட்டு, இன்றைக்கு ஒரு வாட்ஸ்அப் தகவல் எப்படி இன்றைக்கு மக்களை முட்டாளாக்கும் என்பது தெரியாமல், சில அறிவிலிகள் இதை செயல்படுத்த சிரமேற்கொண்டு அழைகிறார்கள். 

யாராவது பொய்யான தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தார்களா. 

இதன் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சியை புரிந்து கொண்டு இருக்கிறார்களா இல்லையா என்பது இந்த ஞான சூன்யங்களுக்கு புரியவில்லை. 

1.   இந்த #சீமைக்கருவேலம் மரங்களை வேரோடு அழித்தால் தான், கேஸ் கம்பெனிகளால் கிராமத்திற்குள் புகமுடியும், இந்தியா 70 சதவிகிதம் கிராமங்களால் ஆனது.  அங்கே புகாமல், இவர்களுக்கு லாபம் இல்லை. 

2.   ரூ 230 க்கு  வாங்கி உபயோகித்த கேஸ், இன்றைக்கு நேரடி மானியத்தை உங்களுக்கு கொடு்த்து விட்டு அதன் விலையை தள்ளுபடி போக ரூ 570. தள்ளுபடி இல்லாத விலை ரூ 800 க்கு  மேல் செல்ல வாய்ப்பு.  அப்படி என்றால் 60 கோடி மக்களை இந்த கேஸ் அடுப்பு சென்றால் தான் கேஸ் கம்பெனிகளுக்கு வருமானம். 

3.   வெறும் மரத்தை வெட்டி வித்தால் டன்க்கு ரூ 2500, கரியாக மாற்றி வித்தால் ரூ 12000- 14000, அதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 25000 - ரூ 75000, தேங்காய் ஒட்டில் இருந்து இதை ஆக்டிவேட்டு கார்பனாக மற்றி சார்க்கோல்லாக மாற்றி வித்தால் ரூ 1,50,000 - ரூ 1,75,000,  இதை 300 மெஸ்க்கு பவுடராக்கி கார்பன் ஆக மாற்றினால் இதைவிட இரண்டு, மூன்று மடங்கு விலை அதிகம்.  இது மருத்துவ குணத்திற்கும், தண்ணீர் சுத்திகரிப்பிற்கான தொழில் நுட்பத்திற்கும்,  மற்றும் இது போன்ற பல்வேறு மருத்து பொருள்களுக்கு உபயோகிக்கலாம், இதை ஏற்றுமதி பண்ணலாம்  - டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா என்று கேட்கிறானே அது போல. திரும்பவும் அது உங்களிடம் வரும் வெளிநாட்டில் இருந்து.  

இதை இந்த தமிழக அரசு செய்யுமா,  சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க புறப்பட்டிருக்கும் நண்பர்களுக்கு இது தெரியுமா, இல்லை வெட்டியவர்கள் யாரும் இதை செய்து அந்த கிராமத்தில் தொழிற்சாலையை ஏற்படுத்தி மதிப்பு கூட்டி வேலை வாய்ப்பை, பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடு பட்டிருக்கிறார்களால இல்லை. 

சீமைக்கருவேலை மரத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லும் எந்த காரணமும் அறிவியல் முறைப்படி நீரூபிக்க பட விலலை, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

4.   சீமைக்கருவேல இலைகளுக்கு ஒரு தனி குணம் இருக்கிறது, அது Anti microbial and Anto bacterial property இருக்கிறது இதன் காரணமாக பேக்ட்ரீயா, மைக்ரோப்ஸ் வராமல் இருக்கிறது. அதன் மூலம் உணவுப்பொருள்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பிரிசெர்வேட்டிவாக, ராசாயண பொருள்களுக்கு பதில் இதை உபயோகித்தால் அதன் மூலம் ஏற்றுமதி வருமானம், பொருளாதாரம் பெருகும், வேலை வாய்ப்பு கிடைக்கும். 

5.  சீமைக்கருவேலை மரத்தின் இலைகள் மூலம் ஒளிரக்கூடிய பெயிண்ட் உற்பத்தி செய்ய முடியும். 

மேற்கண்ட இரண்டு ஆராய்ச்சியும்,  டாக்டர் அப்துல் கலாம் இன்னோவேஷன் ஈகோ சிஸ்டம் ஆராய்ச்சி விருதின் மூலம், என்பதை, சிவகாசி மெப்கோ கல்லூரி ஆராய்ச்சி மாணவி நீரூபித்து இருக்கிறார்.

6.  சீமைக்கருவேலை மரங்களின் காய்களில் இருந்து விலங்குகளுக்கு சத்தான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். 

7.    சீமைக்கருவேலை மரத்தில் இருந்து பிர்க்கெட் போட்டு, அதை எரி பொருளாக மாற்றும் தொழில் நுட்பம், அதன் மூலம் இன்றைக்கு அதன் எரிசக்தி திறன் அதிகரித்து மின்சாரம் உற்பத்தி பண்ணும் திறன் உள்ள இந்த சீமைக்கருவேல மரங்களை அதிகமான குஜராத்தி கம்பெனிகள், வட இந்திய கம்பெனிகள், இதை மதிப்பு கூட்டி, மின்சாரம் தயாரிப்பதற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 

8.   தமிழ்நாட்டில் சும்மார் 12,620 பஞ்சாயத்துகள் உள்ளன. அப்படியென்றால் சீமைக்கருவேலை மரத்தை வெட்டி அதன் மூலம்  கமார் 12,620 மெகா வாட் மின்சாரத்தை நம்மால் எளிதில் மின் உற்பத்தி செய்ய இயலும். இதன் மூலம் நம் மாநிலத்திற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதோடு மட்டும் அல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்க முடியும். 

இதன் உற்பத்தி செலவு ரூ 2.50 முதல் ரூ 4.20 - மின்சாரத்தை விற்பனை விலை ரூ 6 முதல் ரூ 10 வரை அரசிற்கும் தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 

ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் எரி பொருள் 1000 கிலோ. 

ஒரு நாளுக்கான உறபத்தி செலவு ரூ 60,000 

ஒரு நாளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 18000 யூனிட்கள்

 

மின்சார விற்பனை விலை ரூ.7 விதம் ஒரு நாளிற்கு ரூ.126000 வருமானம். 

ஒரு நாளில் கிடைக்கும் நிகர லாபம் ஒரு நாளிற்கு ரூ. 66000

ஒரு வருடத்திற்கு கிடைக்கும் லாபம் (330 நாள்) ரூ. 2,17,80,000

முதலீட்டை திரும்ப பெரும் கால அளவு  20 மாதம்

இதை தான் 2016ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் அறிக்கையிலேயே அப்துல் கலாம் இலட்சிய இந்திய கட்சி இதனை செய்வோம் என்று தெளிவாக தமிழ்நாடு தொலைநோக்கு பார்வை திட்டம் 2026ல் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம்.  ஆனால் நாங்கள் கண்டிப்பாக இதை செய்வோம். 

இந்தனையும் செய்ய வேண்டுமென்றால் அதற்கு அறிவார்ந்த அரசு வேண்டும். அதன் மூலம், சீமைக்கருவேலம் பல் வேறு பயன்பாட்டிற்கு வரும்.  இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு பெருகும். 

இதை இங்கு வந்து உங்களிடம் பணம் கொடுத்து வாங்கி, தொழிற்சாலை போட்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதை விட எளிய வழி, இது விஷ செடி என்று வாட்ஸ் ஆப்பில் பரப்பி விட்டுவிட்டால், இங்கு இருக்கும் சமூக போராளிகள், சுற்றுச்சூழல் போராளிகள்.  அதை எளிதில் பரப்பிவிட்டு இலவசமாக வெட்டி அனுப்பி விடுவார்கள், அதை வியாபரம் செய்யபவர்கள், மதிப்பு கூட்டி விற்பவர்கள் எளிதாக லாபம் பார்த்து சென்று விடுவார்கள். மக்கள் பணியாற்றியது போன்று இலவச விளம்பரம் கிடைக்கும். 

ஆனால் இதை உண்மை என்று நம்பி பாவம் இளைஞர்களும், மாணவர்களும் இதன் உண்மை நிலையை ஆராயாமல் சமூக பணி என்று நினைத்து வெட்டி போட்டுவிட்டு போகிறானே, அவனது வேலை வாய்ப்பிற்கு உத்திரவாதம் கொடுக்குமா இந்த தமிழக அரசு. 

சிந்திக்காமல் எதை வேண்டுமானலும் சொல்லலாம் என்று பல பேர் கிளம்பி விடுவார்கள். அந்த அறிவிலிகளை பற்றி கவலை இல்லை. 

சீமைகருவேலை மரத்தை  வெட்டுகிறேன் பேர்வழி என்று நாட்டு கருவேலை மரங்களையும் வெட்டுகிறார்கள். 

சரி இதை வெட்டி என்ன செய்கிறார்கள், மீண்டும் எரிக்கிறார்கள், இல்லை விற்கிறார்கள். 

வெட்டும் செலவுக்கும் விற்பனைக்கூட கட்டுவதில்லை இல்லை மக்கள் புலம்புகிறார்கள். ஏனென்றால், அவர்களது சொந்த காட்டில், நிலத்தில் விளைந்திருக்கும் சீமைக்கருவேலை மரத்தை வெட்டு,இல்லை என்றால் அரசு வெட்டி அதன் கூலியை உங்களிடம் வசூலிப்போம் என்று மிரட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது, இதை விட ஒரு முட்டாள் தனம் வேறு எதுவும் உண்டா?

இது இன்றைக்கு ஒரு டன் ரூ 2300 முதல் ரூ 3000 விற்ற சீமை கருவேல மரங்களை இன்றைக்கு ரூ 1000 த்திற்கும் கீழே கொண்டு வந்தது தான் மிச்சம். 

சீமைக்கருவேலை மரங்கள், ஏழைகளின் வாழ்வதாரத்திற்கு ஒரு உத்திரவாதம்.  

எரிபொருளுக்கு அடிப்படை ஆதாரம்.  இதை வேறோடு பிடுங்கி அழித்து விட்டு, வீட்டு எரிபொருளுக்கும்,  சிறு குறும் தொழிற்சாலைகளுக்கும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது தான்.  

இன்றைக்கு உயர்நீதிமன்றம் தலையிட்டு இதை அறிவியல் பூர்வமாக ஆராய உத்திர விட்டதை வரவேற்கிறேன். 

அறிவியல் ஆராய்ச்சி முடிவு வரட்டும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தெளிவு பிறக்கட்டும். 

*"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்*

*அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு."*

-- வெ. பொன்ராஜ்.

(மூலம்: வாட்ஸ்அப்)

No comments:

Post a Comment