Wednesday, May 17, 2017

பா.ஜ.க.வின் வா(இ)ந்தி திணிப்பிற்கு மமதாவின் பதிலடி!! 👍

நேற்று நள்ளிரவில் வங்கத்திலிருந்து வந்த அந்த நல்ல செய்தி இதுதான்.

மேற்கு வங்க அரசு அந்த மாநிலத்திலுள்ள எல்லா பள்ளிகளிலும் வங்காள மொழியை கட்டாயமொழியாக அறிவித்திருக்கிறது. சிபிஎஸ்இ உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் இது அமல்படுத்தப்படும். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதை அறிவித்தார்.

வாழ்த்துகள் சகோதரி மமதா அவர்களே!

என்ன காரணம்? தேசபக்தி மிக்க டைம்ஸ் ஆப் இந்தியாவே சொல்கிறது, கேளுங்கள்:

The move by the Mamata Banerjee-led government follows the Centre's move to make Hindi compulsory for all CBSE and ICSE students from Class I to X. "India is a large nation and our strength is unity in diversity," Partha said. "We have received complaints that Bengali is not provided as an option in several schools," he added.

(கமென்ட்டில் முழு செய்தி)

இதே காரணங்களுக்காக அண்மையில் இது போன்ற சட்டத்தை கேரளமும் நிறைவேற்றியது - அதுவும் அவசரச் சட்டமாக - என்பதை நாம் அறிவோம்.

தமது மாநிலத்தின் ஆட்சிமொழியை தமது மாநில எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதை உறுதிசெய்வதற்காகவே பல போராட்டங்களை மாநிலங்கள் நடத்தவேண்டியிருக்கின்றன. தமிழ்நாட்டில் பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, 2006 இல் கலைஞர் அரசு இதற்காக தமிழ் கற்றல் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியவில்லை.  மீண்டும் சற்று வேருக்குத் திரும்பியிருக்கும் திமுக இப்போது இது குறித்து பேசத்தொடங்கவேண்டும்.

தொடக்கத்தில் மொழி விவகாரத்தில் சுணக்கம் காட்டிய மற்ற மாநிலங்கள் இப்போது விழித்துக்கொண்டன. தொடக்கத்தில் வீரம் காட்டிய தமிழகம் வழிவகை இல்லாமல் திகைத்துக்கொண்டிருக்கிறது!

இந்தக் குரல், மலையாளத்தையே வங்கமொழியையோ கன்னடமொழியையோ தத்தம் மாநிலங்களில் உறுதிப்படுத்துவதற்கான குரல், அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமைக் குரல். அவரவர் நிலத்தில் அவரவர் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி. இது ஒரு ஜனநாயகக் கோரிக்கை.

இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் போல ஆட்டம்போடும் பாஜகவின் மொழித்திணிப்புக்கு நான்கு புறங்களிலிருந்தும் இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் மொழியுரிமைக்காக போராடும் பலருடைய கூட்டுமுயற்சியும் இவற்றுக்கு பின்னால் இருக்கிறது என்பதை கடந்த ஆண்டில் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் நடந்த மொழியுரிமையாளர்களின் தீவிரமான முயற்சிகளை நன்கு அறிந்தவனாக, அவற்றில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்றவனாக. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

ஒற்றை மனிதனாக  என் இனிய நண்பர் கோர்கோ சாட்டக்ஜி  Garga Chatterjee தொடர்ச்சியாக ஆங்கிலத்திலும் வங்க மொழியும் இதற்காக தொடர்ந்து எழுதிவந்தவர். இன்றைய வங்காள அரசியலை, வங்க மாநில உரிமை அரசியலை, தில்லியின் ஏகாதிப்பத்தியத்துக்கு எதிரான கொல்கத்தாவின் குமுறலை மிகச்சிறப்பாக வெளியுலகத்துக்கு அறிவித்துவருபவர் அவர். அவரது எழுத்துக்களும் முயற்சிகளும் வங்க அரசியலின் மீது தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

2015 சென்னை மொழியுரிமை மாநாட்டில் பங்குபெற்றவர் கோர்கோ. அவர் தொடர்ந்து மமதாவின் மாநில உரிமைக்குரல் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார். அவரைப் போன்றவர்கள் தான் இந்த முயற்சிகளுக்கெல்லாம் வித்தாக அமைந்தவர்கள். அவரைப் போல பலரும் கிளியர் அமைப்பின் செயல்பாடுகளில் பங்குகொண்டு வங்கமொழிக்காகவும் நம் அனைவரின் மொழிக்காகவும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

வங்காள மொழித்தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்.

Courtesy

Aazhi Senthil Nathan

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1523104141053804&id=100000626997769)

No comments:

Post a Comment