Friday, May 5, 2017

போலியே இல்லாத பேஜார்... 😝

*நல்லாக் கேட்டுக்குங்க,*

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அப்புறம்?*

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*சரி, அப்புறம்?*

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓ அப்புறம்?*

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அதுவும் சரிதான், அப்புறம்?*

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?*

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓஓஓஓஓ அப்புறம்?*

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

*ஐயையோ அப்புறம்?*

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

*ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?*

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற *பெருமாள் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,* அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு *சந்தோஷமா* வாழ்க்கையை அனுபவிங்க.

படித்ததில் பிடித்தது...😜

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

ஏனுங்க, "நீதிபதிங்கறவர் 30 வருசம் பொய் சொன்னவருன்னு" நடிகவேள் ஐயா சொல்லிக் கொடுத்துட்டுப் போனாருங்க. இந்த அட்வகேட் ஜெனரல்ன்றவர் எவ்வளோ வருசம் பொய் சொல்லியிருப்பாருங்க? மனுசன் என்னம்மா பொளக்குறாரு! 😯 நம்ம உசிரு, ஒடம்பு, ஒடம எல்லாம் அரசுக்கு சொந்தங்களாம்!! 😱 அரசுக்கு ஒளிவு மறவு இல்லாம எல்லாம் தெரியணுங்களாம். நான் கேக்கிறேன், நமக்காக அரசுங்குளா? இல்ல அரசாங்கத்துக்காக நாமங்களா? நாம தானே ஓட்டுப் போட்டு இந்த கருமாந்தரங்கள அனுப்பிவச்சோம். நம்ம வரிப் பணத்துல தானே இவங்க டீ ஆத்துறாங்க. நாம எஜமானருங்களா? இல்ல, இந்த எச்சக்கலங்க எஜமானருங்களா? 😠

கொஞ்ச நாளக்கு முன்னாலே டீ ஆத்துறவரு வெளிநாடா சுத்திகிட்டிருந்தாருல்ல. மனுசன் நாட்டுக்காக சுத்தறாரா இல்ல, தனக்காக சுத்தறாரா, யாருக்காவது டீ ஆத்திக் கொடுக்கப் போனரான்னு தெரிஞ்சுக்க ஒருத்தரு தகவல் அறியும் உரிமை சட்டம் வழியா மனு கொடுத்தாருங்க. இந்த ஒட்டுண்ணி ஜென்மங்க, அதெல்லாம் தேவ ரகசியம், நாட்டுப் பாதுகாப்புன்னு சொல்லி எந்தத் தகவலும் கொடுக்க மறுத்துட்டாங்க. நம்ம வரிப் பணத்துல அதிகபட்சம் 5 வருசம் டீ ஆத்துற இந்த ஒட்டுண்ணிகளுக்கே தங்களோட சமாச்சாரங்கள காப்பாத்திக்கனும்ன்னு அக்கறை இருக்கும் போது, இவங்களுக்குப் படி அளக்கற எஜமானருங்க நமக்கு எவ்வளோ இருக்கும்? 😎 இவுங்க மறச்சு வெச்சுப்பாங்களாம். நாம ஓபனா இருக்கனுமாம். தனக்கு கல்யாணம் ஆனதையே மறச்சவருக்கு, யாரும் எதையும் மறைக்கக் கூடாதாம். "யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ள வை."-ங்கற பழமொழிக்கு இனிமே சரியான உதாரணம் இவனுங்க தான். நம்ம ஊர் அரசியல்வியாதிங்க தோத்துட்டாங்க, போங்க. 😜

இருக்கறுதுலேயே பாதுகாப்பானதுன்னு நெனக்கிற பான் கார்டுலயும் டூப்ளிகேட் இருக்குதாம். தனியார வெச்சு "தயார்" பண்ணுற ஆதாரு ரொம்ப பர்ஃபெக்ட்டாம். வின்னர் பட காமெடி தோத்தது போங்க! 😁 ஸ்ரீராமருக்கும், கொரங்குக்கும் ஆதார் கொடுக்கறப்போ கண்டீப்பா அது பர்ஃபெக்ட்டு தான்! 😂

*ஆமா, AG ஐயா, நீங்க கோர்ட்டுல உடான்ஸ் உடறுதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒங்க டீ ஆத்துறவரு ஊருலேயே நிலேஷ் மிஸ்திரின்னு ஒருத்தர கைது செஞ்சீங்களே. அவரு சுமார் 100 பேருக்கு மேல போலி ஆதார் அட்டய தயார் பண்ணியிருக்காராமே? ஒங்களுக்குத் தெரியாதுங்களா?* 😛😜😝 டிஜிட்டல் இந்தியாவுல இது மாதிரி தகவல் கொஞ்சம் மெதுவாத்தான் ஒங்கள மாதிரி பெரியவங்களுக்கு வந்து சேரும்ன்னு நெனக்கிறேன்.

🌸🏵🌹💮🌺🌷🌼

அடுத்த சுதந்திரப் போராட்டம் இந்த கிராதக அரசாங்கத்தை எதிர்த்து தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 03/05/2017)

No comments:

Post a Comment