Saturday, August 17, 2019

ஆகஸ்ட் 15 காமெடி டைம்!!! 😄

ஆகஸ்ட் 15 காமெடியே இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தவை தான் இந்த காமெடி பீஸுகள்!! 😛




👊🏽 கர்த்தரால் இந்திய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக

-- Sub Manual 33:13


"யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்று தான் Sub Manual-ல் இருக்கிறதேயன்றி, "விசய் யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்றில்லை. 😁


மேலும், இஸ்ரவேல் அத்வைதி யேசுவை ஆசீர்வதித்ததே இந்த பூமி தான். 💪🏽 தனக்கு மெய்யறிவைக் கொடுத்த, அதாவது தனக்கு ஆசிரியர் போன்ற, பூமியை மாணவன் எவ்வாறு ஆசீர்வதிக்கமுடியும்? நன்றி மட்டுமே கூறமுடியும்.


👊🏽 பாரதம் என்றாலே அறிவு மற்றும் கோயில்கள் தாம். இந்தியா கேட், குதுப்மினார், தாஜ்மஹால் என்று மட்டும் காட்டினால் இந்து சமய திருத்தலங்கள் இல்லையென்றாகி விடுமா? குதுப்மினாரும், தாஜ்மஹாலும் இந்துக் கோயில்கள் தாம்!!


👊🏽 "இந்திய தேசமே பயப்படாதே" - அதாவது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை! 😝 இப்படியே போனால் இவ்வளவு வருடங்களும் செய்த தில்லாலங்கடி வேலைகளும் & கருங்காலித்தனமும் வீணாகிவிடுமே என்று இவர்களுக்குத் தான் பயம்.


👊🏽 அது என்ன "களிகூறு"? 🤔 "பெலனில்லை" போல கோலமாவு எஃபக்டுக்காகவா? 🥴 இல்லை, சீரழிப்பது என்பது குறிக்கோளான பின், மனிதர்களோடு மட்டும் ஏன் நிற்கவேண்டும்? அன்னைத் தமிழையும் சேர்த்து சீரழிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? 😏


👊🏽 "கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்" - அவர் எங்கே பெரிய காரியம் செய்ய முயற்சித்தார்? அவரது சிந்தனை அவரது இனத்தின் அடிமை மனப்பான்மையை ஒழிப்பதில் தான் இருந்தது. வேற்று இனப் பெண் ஒருவர் தனது குழந்தையைக் குணப்படுத்த மன்றாடியும், உடனிருந்த மாணவர்கள் எடுத்துச் சொல்லியும், அத்வைதி யேசு கேட்கவில்லையே. இறுதியில், ஒன்றும் நடக்காமல், காஷ்மீரம் திரும்பி சமாதியாகிவிட்டார்.


பெரிய காரியம் செய்தது எல்லாம் இவர்கள் தாம். உலகின் வரலாறுகளை திரித்து, பண்பட்ட கலாச்சாரங்களை அழித்து, தேசவிரோதிகளை உருவாக்கி... எல்லாம் எதற்காக? அன்று யேசுவுக்கு கிடைத்த ரொட்டியும் & ஒயினும் போன்று, இன்று தேவையான வசதிகள் இவர்களுக்கு கிடைக்கவே!! ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽

Robin Hood (2018)




Didn't expect this US$100m movie to do so badly. It collected only US$84m worldwide!!! Reviews vehemently branded it as very poor. Within 30 min of watching this movie, I got the first clue. Then, after about 2/3rds, I got the full answer. Please go through these dialogue pieces, discover the main reason and amuse yourself:


Friar Tuck: Sir, it’s been a bit since your last confession. Would you care to unburden yourself to your friar?


Sheriff of Nottingham: My conscience is clear. Is yours?


Friar Tuck: Try as I might, mine’s always a bit of a muddle.


Sheriff of Nottingham: Well, be that as it may, keep your ears open in your little booth. Any talk of the thief, bring it to me.


Friar Tuck: But, sir, with respect, the Seal of the Confessional is sacred.


Sheriff of Nottingham: Nothing’s sacred till I’ve caught that thief and drowned him in a cage.


💥💥💥


Arch Deacon: There’s been whispers of revolt. Unchecked, those whispers will build into a roar. 


Sheriff of Nottingham: It’s treason. It’s punishable by death.


Friar Tuck: Treason’s a very strong word, sir. Isn’t the Christian thing to turn the other cheek?


Sheriff of Nottingham: How do you love a God that gives you that face?


[Deacon and Nottingham laugh]


Arch Deacon: Sheriff! Given our shared interest in the outcome of the war, it’s essential this thief is caught and his rhetoric suffocated. 


Sheriff of Nottingham: I’ll restore the order. You keep the faith, Your Grace.


Arch Deacon: Sheriff, the church can make a man, or break him. For your allegiance, we offer you the world. But in failure, we can also take it away. Remember that. Hm? Let’s make the cardinal feel welcome, sheriff.


💥💥💥


[Sheriff grabs hold of Tuck]


Sheriff of Nottingham: If you ever defy me again in front of the church…


Friar Tuck: I‘m sorry, sir. I was only speaking for the Gospels.


Sheriff of Nottingham: Oh, the Gospels. Well, never, never forget, Tuck, God’s up there. I’m down here.


💥💥💥


A Muslim guides a Christian!

A Darkman guides a Whiteman!!

The Church is evil & manipulates kingdoms!!!


What was Leonardo DiCaprio thinking? 🤔 That he can show the present Lords of The Universe (Whites) in poor light? 😒 That he can the reveal the true face of a US$150+b notorious business conglomerate? 🤨


😜😝😂😂🤣

Thursday, August 15, 2019

ஆகஸ்ட் 15 & மூவர்ணக் கொடி - உலக மகா ஏமாற்றுவேலை!! 😠😠

👊🏽 ஆகஸ்ட் 15 - மோகன்தாஸ், ஜவஹர்லால் காஜி போன்ற உள்ளூர் கருங்காலிகளிடம், துண்டாக்கப் பட்ட நாட்டைக் கொடுத்து விட்டு, உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் வெளியேறிய நாள்!! 


👊🏽 மூவர்ணக் கொடி - காவி நிறம் இந்து சமயத்தையும், வெள்ளை நிறம் எம்.எல்.எம் மதத்தையும், பச்சை நிறம் காட்டுமிராண்டி மதத்தையும், நீல நிற சக்கிரம் புத்த மதத்தையும் குறிக்கும். அதாவது, பாரதத்தை சீரழித்தவர்களுக்கு 2/3 பங்கு இடம்!! 😡


💪🏽 நம் நாட்டின் தேசத்தந்தை என அழைப்பட வேண்டியவர் - நேதாஜி!! 🙏🏼



💪🏽 நம் நாட்டின் தேசியக் கொடியாக இருக்க வேண்டியது - முழுதும் காவி நிறமும், அதன் நடுவில் திருநெல்லையப்பர் கோவிலுள்ள வெள்ளை நிற மாக்காளையும் தான்!! (கருப்புக்காளையை விட வெள்ளை நிறக் காளை காண்பதற்கு அழகு என்பதால். மற்றபடி, பொருள் ஒன்றே.)



இந்து என்ற சொல்லிற்கு இன்றைய பொருள் இழித்தவாயன். ஆனால், இதன் பழமையான பொருள்: இன்னொரு உயிருக்கு தீங்கு ஏதேனும் ஏற்பட்டால், அது தனக்கு ஏற்பட்டதாகக் கருதி, அதைக் களைய முற்படுபவன்!


இறைத் தத்துவத்தை விளக்க நம் முன்னோர்கள் வடித்த வடிவங்களில் தலைசிறந்தது ஆடல்வல்லான் 🌺🙏🏼 எனில், உடலெடுக்கும் ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் எங்ஙனம் வாழ வேண்டுமென்பதைக் குறிக்க அவர்கள் வடித்த காளை (நந்தி / சிவன்காளை) வடிவம் தான் மற்றனைத்திலும் தலைசிறந்ததாகும்! 👌🏽


எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதி, எல்லாம் வல்ல இறைவனை தனது தலைவனாகக் கொண்டு, ஒவ்வொரு செயலும் இறைபணி எனக் கருதி வாழும் மக்கள் வாழும் நாடு எப்படிப் பட்டதாக இருக்கும்?


😍🤩😌

Saturday, August 10, 2019

இந்தியர்களில் பெரும்பாலானோர் ஏன் சிறு புத்தியுடையவர்களாகவே இருக்கின்றனர்?

10 நாட்களுக்கு முன்பு, பாலியில் (Bali, Indonesia), ஒரு விடுதியில் தங்கியிருந்த நம் நாட்டுக் குடும்பம் ஒன்று, தங்களது அறையிலிருந்து பல பொருட்களை திருட முயற்சித்ததைப் பற்றி படித்திருப்பீர்கள். இச்செய்தியும், காணொளியும் வைரலானது (வைரலாக்கப்பட்டது)! இதை வைத்து உலகளவில் ("மேற்கத்திய" உலகளவில்) நமக்கு தலைகுனிவு ஏற்படுத்தப்பட்டது!!

பல இடங்களில் தினந்தோறும் நிகழும் ஒரு சராசரி நிகழ்வு தானிது. கேபிள் டிவிக்காரன் சந்தாவை ஏற்றிவிட்டான் என்பதற்காக, பக்கத்து வீட்டிலிருந்து (அவர்களுக்குத் தெரியாமல்) T இணைப்புப் போட்டுக் கொண்ட ஒரு அமெரிக்கனை எனக்குத் தெரியும். திமிர் பிடித்த ஆங்கிலேயர்கள் எப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்கள் என்பதை அக்கால இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் இருந்தவர்களைக் கேட்டால் தெரியும். பல நாட்டுப் பணியாளர்களுடன் சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த ஒருவர், "உலகளவில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும், பாரத அளவில் பீகாரிகளும் மோசமானவர்கள்" என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒரு குடும்பம் தப்பு செய்ததை வைத்து மொத்த நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படுத்தக் காரணம்?

சந்திராயன் 2 & அடுத்து மனிதர்களைக் கொண்டு செல்லும் நம் ISROவின் திட்டம்!!

சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்ட பின், மீம்ஸ் போர்வையில் நம்மை கிண்டலடித்தனர். எந்தவிதத்திலும் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைத்து விடக்கூடாது என்பதே குறிக்கோள். இந்நிலையில் பாலியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவும், அவர்களது பணி சுலபமாகிவிட்டது.

இந்த சோரம் போன ஊடக ஆராய்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். எவ்வளவு பணமிருந்தாலும், படித்திருந்தாலும், பட்டறிவு இருந்தாலும் நம்மவர்களில் பெரும்பாலானோர் ஏன் குறுகிய / சிறு புத்தியுடையவர்களாகவே இருக்கின்றனர்?

எனக்கு 2 காரணங்கள் தோன்றுகின்றன.

திருவண்ணாமலை மலைவலம் செல்லும் போது கவனித்திருப்பீர்கள். செங்கம் பாதை பிரிவிலிருந்து, சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு, நடைபாதையோரம் சில நூறு பிச்சைக்காரர்கள் அமர்ந்து/வாழ்ந்து கொண்டிருப்பார்கள் (இவர்கள் அனைவரையும் சிவனடியார்கள் என்றழைப்பது சரியல்ல). சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் கூட, யார் எந்த உணவைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வர். அடுத்த வேளை வரை அவ்வுணவு நன்றாக இருக்குமா? தமக்கு தேவைப்படுமா? வேறு யாரும் உணவு தருவரா? போன்ற எந்த சிந்தனையும் இல்லாமல் வருவதை, கிடைப்பதை வாங்கி வைத்துக்கொள்வர். ஏனெனில், அதற்கு முன்னர், பல காலம், விழா நாட்கள் தவிர ஏனைய நாட்களில் யாரும் வரமாட்டார்கள், எதுவும் கிடைக்காது என்ற பட்டறிவு அவர்களிடம் இருந்ததால். இன்று, நிலைமையே வேறு! குறைந்தது மதிய உணவாவது கிடைத்துவிடுகிறது. சில அன்பர்கள், சில முதியவர்களுக்கு வருடம் முழுக்க உணவு கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விளைவு? தள்ளுமுள்ளு இல்லை. தேவையில்லாமல் வாங்கிப் பதுக்குவதில்லை. சிலர், சுமாரான உணவு என்று தெரிந்ததால் பெற்றுக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அதாவது, #பிச்சைக்காரத்தனம் என்ற சொல் எதை வைத்து உருவானதோ அது இவர்களிடம் இன்று இல்லை!!

இதே போன்று, நாளை என்பது உறுதியாக வேண்டும். இதற்கு, நிலையான, வலுவான, நியாயமான & நேர்மையான அரசுகள் தொடர்ந்து அமையவேண்டும். அப்படி அமைந்தால், நம்மவர்களிடமுள்ள பிச்சைக்காரத்தனம் காணாமல் போகும். தேவையில்லாமல் பொருள் சேர்க்கமாட்டார்கள். இருந்தும் இல்லாதவர் போல் வாழமாட்டார்கள். தேவையானதை சம்பாதித்து, தாராளமாக செலவும் செய்வார்கள்.

அடுத்து, #ஒட்டுண்ணிகள்.

உடல் பிடிக்காத சிறு குழந்தைகளை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால். அவர்கள் முதலில் கொடுக்கும் மருந்து வயிற்றிலுள்ள ஒட்டுண்ணி குடற்புழுக்களை அழிப்பதற்காகத் தானிருக்கும். அந்த புழுக்கள் வயிற்றில் இருக்கும் வரை குழந்தை பெருகாது. இது போன்றது தான் நமது நிலையும். சொந்த குடும்பத்திலிருநது ஆரம்பித்து சமூகம், மாநிலம், நாடு, பரங்கியர்கள் என பல நிலைகளில் ஒட்டுண்ணிகள் நம்மால் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நமக்காக மட்டும் சம்பாதிக்காமல் பலருக்கும் சேர்த்து சம்பாதிப்பதால், நமக்கு வருவதும், நம்மிடம் தங்குவதும் குறைந்துவிடுகிறது. அடையாள நாணய (டோக்கன் கரன்சி) முறை, அதிலும் இப்போதுள்ள மின்னனு முறை, உள்ள வரை மற்றும் கல்லெண்ணை (பெட்ரோல்) கிடைக்கும் வரை ஒட்டுண்ணிகள் பெருகிக் கொண்டேதானிருப்பர்!!

இயற்கை சார்ந்த, தற்சார்பு வாழ்க்கை ஒன்று தான் ஒட்டுண்ணிகளை ஒழிக்கும்!! (இந்த வரியை மட்டும் விரித்து ஒரு புத்தகமே எழுதலாம்)

☀️🌧️🌴🌳🌾

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரறுகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரஅணித்தாய்ச் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.

-- ஒளவையார் 🌺🙏🏼 (தனிப்பாடல்கள்)

பொருள்: இரண்டு ஏர்களாவது இருக்க வேண்டும். வீட்டிலேயே விதைகள் இருக்க வேண்டும். அருகிலேயே நீர்வளமுள்ள நிலமாக இருக்க வேண்டும். அந்நிலமும், சென்று வருவதற்கு ஏற்றவாறு ஊருக்கருகில் இருக்க வேண்டும். இத்துணையும் அமைந்து, சொற்படி நடக்கும் பண்ணையாட்களும் அமைந்தனரானால், என்றும் உழவே இனிய தொழிலாகும்.

(இன்றுள்ள அனைத்துத் தொல்லைகளும் அன்றும் இருந்தன போலும்!! 😏)

Monday, August 5, 2019

கிரிவலம் தெரியும். அது என்ன மரிவலம், நரிவலம்ன்னுட்டு? 🤔



மெழுகுவர்த்தி மட்டும் தான் புடிச்சுட்டு வரலாமா? இல்ல, மரியாள் விளக்கு, பிணக்குறியீடு விளக்கெல்லாம் கூட புடிச்சிகிட்டு வரலாமா? மெழுகுவர்த்தில கெமிக்கல் அதிகமாயிடுச்சு. அதான். 😁


"2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்ற ஒப்பாரி ட்ரூப் எல்லாம் உண்டா? போரடிக்கக் கூடாது, இல்லீங்களா? 😜


திருவண்ணாமலையில அடிக்கொரு லிங்கமாம். பர்வதமலையில சாணுக்கொரு லிங்கமாம். இங்க எப்புடி? அடிக்கொரு பாவாடையா? இல்ல, சாணுக்கொரு பாவாடையா? 😝


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


இவர்களை விட, இஸ்ரவேல் அத்வைதி யேசுவைத் தான் சொல்லவேண்டும்!!


பாரதம் வந்தோமா, அத்வைதம், பௌத்தம் கற்றோமா, ஒரு வழியை இறுகப் பிடித்தோமா, மெய்யறிவு பெற்றோமா, உடலை விட்டோமா என்றில்லாமல், தனது இனமக்களை உய்விக்கிறேன் பேர்வழியென்று, குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போன்று, மூடர்களிடம் போய் அத்வைதத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் கரடியாய் கத்தியும், சுற்றியிருந்த கூட்டம் கண்டது இவருக்கு கிடைத்த ரொட்டியையும், ஒயினையும் தான்:


இத பாரு மச்சான், இப்புடி புரியாதபடிக்கு பேசுனா, நமக்கு சாப்பாடு, ஒயினு, ஒத்தாசைக்கு 4 தடியனுங்க கெடப்பாங்க. ஜாலியா காலத்த ஓட்டிடலாம். என்ன சொல்ற?


இவர்களது மொத்த சித்தாந்தமும் இவ்வளவு தான்!! 🤑🤑🤑

Tuesday, July 30, 2019

அன்பளிப்பா? வைப்புநிதியா? 😃




மேலுள்ள படத்தில் வட்டமிட்டப் பகுதியை படித்ததும், கிராம / கீழ்தட்டு மக்களின் தொடர்பில்லாதவர்களுக்கு சிரிப்பு வரும்! சில்லறைத்தனம் என்று கூடத் தோன்றும்!! தொடர்புள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய செய்தியாகத் தோன்றாது. இன்னும் சொல்லப் போனால், இவர்களுக்கு இது நியாயமானதாகத் தோன்றும்.


தம்மால் முடிந்ததை, தாம் விரும்பியதை கொடுக்காமல், அன்பளிப்பை வட்டியில்லா வைப்பு நிதியாக அவர்கள் பார்ப்பது ஏன்?


நம் நாட்டின் மீது பன்னெடுங்காலமாக நடந்த படையெடுப்புகளே முதன்மையான காரணம். தமிழகத்தை பொருத்தவரை கடந்த 1000 வருடங்களாக (சுமார் 1060லிருந்து) தமிழரல்லாதோர் தான் ஆட்சி செய்துள்ளனர். அதிலும், காட்டுமிராண்டிகளும், பாவாடைகளும் ஆட்சி செய்தனர் என்று சொல்வதை விட கொள்ளையடித்தனர், சீரழித்தனர் என்று சொல்வதே சரி. இத்துடன், இன்று போல் அன்று வங்கியமைப்புகளும் இல்லை என்ற உண்மையையும் நினைவில் கொள்ளவேண்டும்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஒருவரால் பணத்தை சேர்த்து வைக்க முடியும்?


தனது சேமிப்பை தன்னிடத்திலேயே வைத்துக்கொள்ளாமல் பல ஊர்களிலுள்ள பலரிடம் பிரித்துக் கொடுத்துவிட்டால் ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்குமல்லவா?



(#மொய் என்ற சொல்லுக்கு கொடுத்தல் என்ற பொருளோடு, நெருங்குதல் என்ற பொருளும் உண்டு.)


🎁🎁🎁🎁🎁


குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.


-- திருக்குறள் #549


பொருள்:


குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காத்து, குற்றம் செய்தவர்களை தக்க தண்டனையின் மூலம் ஒழித்தல் அரசனது தொழிலாகும். அஃது அவனுக்குப் பழியன்று.


இன்று வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏼 இருந்திருப்பின், மேற்கண்ட குறளை, "குடிமக்களைப் பிறர் வருத்த விட்டு, தானும் வருத்தி, குற்றம் செய்தவர்களுக்கு தக்க பதவி/ஒப்பந்தம் அளித்துக் காப்பது அரசனது தொழிலாகும். அஃது அவனுக்கு இழுக்கன்று." என்ற பொருளில் அமைத்திருப்பார்!! 😁

Friday, July 26, 2019

அவெஞ்சர்ஸும் பரிசுத்த ஆண்டவரும்!!! 😁😁😁

👊🏼 #அவெஞ்சர்ஸ் #1 படத்தில் ஒரு காட்சி

ஆஸ்கார்ட் உலகத்திலிருந்து திடீரென தோன்றும் தார், லோகியை கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்கிறான். தாரை தடுக்க ஐயர்ன்மேன் செல்கிறான். இவனுக்கு உதவ கேப்டன் அமெரிக்கா புறப்பட தயாராகிறான். அவனிடம்...

நடாஷா: இவர்கள் எல்லாம் (தார் & லோகி) புராணக் கதைகளில் வருபவர்கள். அடிப்படையில் இவர்கள் கடவுளர்கள்.

கேப்டன்: மன்னிக்க வேண்டும், நடாஷா. என்னைப் பொறுத்தவரை ஒரு கடவுள் தான் இருக்கிறார்! அவர் இவர்களைப் போன்று உடையணியமாட்டார்!!

ஆக, கடவுளின் அளவுகோல் உடை மட்டுமே! 😜 ஒரு பெரிய வெள்ளை பாவாடையை யாரேனும் ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர் கடவுளாகிவிடுவார் போலிருக்கிறது!! 😝

👊🏼 அவெஞ்சர்ஸ் #2 படத்தில் ஒரு காட்சி

ஏற்கனவே இருக்கும் அனைத்து சூப்பர் ஹீரோக்களை விடவும் சிறந்த சூப்பர் ஹீரோ ஒருவனை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இப்படத்தில் ஒரு ஹீரோவை உருவாக்கியிருப்பார்கள். சுயஉணர்வு பெற்றவுடன் அவன்/அது பேசும் வசனங்களில் ஒன்று:

நான் அல்ட்ரான் இல்லை. நான் ஜார்விஸும் இல்லை. நான் நானே (I am [that] I am).

இந்த "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்பது எம்.எல்.எம். நிறுவனக் கையேட்டில் வரும் ஒரு சொற்றொடராகும். அவர்களது கையேட்டில் பரம்பொருளை மிகச்சரியாக விளக்கக் கூடிய சொற்றொடர் இது என்று #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 கூறியுள்ளார் (அதுவும், கேள்வி கேட்ட பரங்கியர்களுக்காக சொன்னார்). சில காலம், இந்த சொற்றொடரை முன்வைத்து தொழில் நடத்தினார்கள். "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்ற பெயரிலேயே நிறுவனக் கிளைகளை கூட ஆரம்பித்தார்கள். சரியாக 'போனி'யாகததால், மீண்டும் "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா!! 🥺😩🤧" என்ற அவர்களது வெற்றி சூத்திரத்திற்கே திரும்பிவிட்டனர்.

👊🏼 இனி "ஐ ஆம் தட் ஐ ஆம்" (பரம்பொருள்) அவெஞ்சர்ஸ் 2 & 3 மற்றும் கேப்டன் அமெரிக்கா 3 படங்களில் என்னென்ன செய்கிறது என்று பார்ப்போம்.

🍝 இது உருவாகும் போது, இது காட்டும் படத்தால் மற்ற சூப்பர் ஹீரோக்கள் "அல்லு விட்டுடுச்சு" 🥶 நிலையில் இருப்பர் - "பார்ட்டி, அத்தனையையும் மொத்தமாஅள்ளிகிட்டு பூடும் போலிருக்கே!" 😰 (பரம்பொருள் உருவாகுமா? அதை உருவாக்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. சாமி கண்ண குத்திடும்! 😆)
🍝 எந்த பொருளுக்குள்ளும் ஊடுருவி செல்லும்
🍝 வாண்டா மேக்ஸிமாவை காவல் காக்கும்
🍝 காவல் பணியின் போது கிளின்ட் பார்டனிடம் தோற்றுப் போகும். வாண்டாவும் பல தளங்களுக்கு கீழே தள்ளி விட்டு ஓடி விடுவாள்.
🍝 ஒரு சமயத்தில், வாண்டாவை டாவு அடிக்கும்.
🍝 வார் மெஷினைக் காப்பாற்ற முனையும் போது தவறு செய்துவிடும். இதன் தவறால் வார்மெஷினின் இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் போய்விடும்.
🍝 தேனோஸின் அடியாட்களிடம் தர்மஅடி வாங்கி குற்றுயிராக கிடக்கும். உதவிக்கு சிலர் வந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விடும்.
🍝 இறுதியில், தேனோஸால் இறந்துபோகும்.

(இது ஓவர் தொல்லை/குழப்பம் கொடுத்ததா என்று தெரியவில்லை, அவெஞ்சர்ஸ் 4ஆம் படத்தின் இறுதியில் அனைவரும் திரும்ப வந்தாலும், இதை திரும்பக் கொண்டு வரவில்லை.)

ஆக, இவர்களது பரம்பொருள் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; சிலரிடம் தோற்றுப் போகும்; சிலரை டாவடிக்கும்; தவறும் செய்யும்; அடியும் வாங்கும்; யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஏங்கும்; இறந்தும் போகும்!! மொத்தத்தில் பரங்கியன் அவனது மதத்திற்கு உருவம் கொடுத்தது போலிருக்கும்!!! 😂😂🤣🤣🤣

👊🏼 அவெஞ்சர்ஸ் #3 படத்தில் ஒரு காட்சி

டைட்டன் கோளில் சில அவெஞ்சர்ஸ் சில கார்டியன்ஸை முதன் முறையாக சந்திக்க நேரிடுகிறது. எச்சரிக்கை உணர்வின் மிகுதியால், ஒருவரையொருவர் நம்பாமல், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. நிலைமை கைகலப்பாக மாறுவதை உணர்ந்த மரு. ஸ்ட்ரேன்ஜ் எதிர்பக்க பீட்டர் க்விலைப் பார்த்து...

மரு. ஸ்ட்ரேன்ஜ்: எந்த தலைவனுக்கு கீழ் நீ வருகிறாய்?

பீட்டர் க்வில்: யாருக்கு கீழ் வருகிறேனா? இதற்கு நான் என்ன பதில் சொல்வது? யேசு என்றா?

😝😆😂😂

எம்.எல்.எம். நிறுவனத்தின் நச்சு பார்வை படாத நாடும் இல்லை & தொழில்களும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தை கோட்டை விட்ட பிறகு, ஹாலிவுட் திரைப்படங்களை அது கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. அறிவியல் புதினங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது ஒரு காட்சியிலாவது இஸ்ரவேல் அத்வைதியான யேசுவின் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது, உயிரற்றதை (பிணத்தை) கொண்டாடும் நிறுவன குறியீட்டை காண்பிக்க வேண்டும். இல்லையெனில்... 👻👹👺👽☠️

எதற்கு வம்பு என்று சேர்க்கப்பட்டது தான் முதல் படக்காட்சி. அது பெரும் வெற்றி பெறவே, 2வது படத்தில் "ஐ ஆம் தட் ஐ ஆம்"ஐ சேர்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததாலும், மேற்கொண்டு வளர்க்க முடியாததாலும், 3வது படத்தில் இஸ்ரவேல் அத்வைதியின் பெயர் மட்டும் வருவது போன்று ஒரு காட்சியை அமைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽

உடல் எனும் குறுக்கையில் மனம் எனும் யேசுவை அறைந்தால் (அழித்தால்) வெளிப்படுவது தூய அறிவு (இறைவன்). இதுவே உயிர்த்தெழுதல் (மெய்யறிவு பெறுதல்) எனப்படும்.

-- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼