Showing posts with label அவெஞ்சர்ஸ். Show all posts
Showing posts with label அவெஞ்சர்ஸ். Show all posts

Friday, July 26, 2019

அவெஞ்சர்ஸும் பரிசுத்த ஆண்டவரும்!!! 😁😁😁

👊🏼 #அவெஞ்சர்ஸ் #1 படத்தில் ஒரு காட்சி

ஆஸ்கார்ட் உலகத்திலிருந்து திடீரென தோன்றும் தார், லோகியை கழுத்தைப் பிடித்து இழுத்துச் செல்கிறான். தாரை தடுக்க ஐயர்ன்மேன் செல்கிறான். இவனுக்கு உதவ கேப்டன் அமெரிக்கா புறப்பட தயாராகிறான். அவனிடம்...

நடாஷா: இவர்கள் எல்லாம் (தார் & லோகி) புராணக் கதைகளில் வருபவர்கள். அடிப்படையில் இவர்கள் கடவுளர்கள்.

கேப்டன்: மன்னிக்க வேண்டும், நடாஷா. என்னைப் பொறுத்தவரை ஒரு கடவுள் தான் இருக்கிறார்! அவர் இவர்களைப் போன்று உடையணியமாட்டார்!!

ஆக, கடவுளின் அளவுகோல் உடை மட்டுமே! 😜 ஒரு பெரிய வெள்ளை பாவாடையை யாரேனும் ஒருவர் மாட்டிக்கொண்டால் அவர் கடவுளாகிவிடுவார் போலிருக்கிறது!! 😝

👊🏼 அவெஞ்சர்ஸ் #2 படத்தில் ஒரு காட்சி

ஏற்கனவே இருக்கும் அனைத்து சூப்பர் ஹீரோக்களை விடவும் சிறந்த சூப்பர் ஹீரோ ஒருவனை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இப்படத்தில் ஒரு ஹீரோவை உருவாக்கியிருப்பார்கள். சுயஉணர்வு பெற்றவுடன் அவன்/அது பேசும் வசனங்களில் ஒன்று:

நான் அல்ட்ரான் இல்லை. நான் ஜார்விஸும் இல்லை. நான் நானே (I am [that] I am).

இந்த "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்பது எம்.எல்.எம். நிறுவனக் கையேட்டில் வரும் ஒரு சொற்றொடராகும். அவர்களது கையேட்டில் பரம்பொருளை மிகச்சரியாக விளக்கக் கூடிய சொற்றொடர் இது என்று #பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 கூறியுள்ளார் (அதுவும், கேள்வி கேட்ட பரங்கியர்களுக்காக சொன்னார்). சில காலம், இந்த சொற்றொடரை முன்வைத்து தொழில் நடத்தினார்கள். "ஐ ஆம் தட் ஐ ஆம்" என்ற பெயரிலேயே நிறுவனக் கிளைகளை கூட ஆரம்பித்தார்கள். சரியாக 'போனி'யாகததால், மீண்டும் "2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா!! 🥺😩🤧" என்ற அவர்களது வெற்றி சூத்திரத்திற்கே திரும்பிவிட்டனர்.

👊🏼 இனி "ஐ ஆம் தட் ஐ ஆம்" (பரம்பொருள்) அவெஞ்சர்ஸ் 2 & 3 மற்றும் கேப்டன் அமெரிக்கா 3 படங்களில் என்னென்ன செய்கிறது என்று பார்ப்போம்.

🍝 இது உருவாகும் போது, இது காட்டும் படத்தால் மற்ற சூப்பர் ஹீரோக்கள் "அல்லு விட்டுடுச்சு" 🥶 நிலையில் இருப்பர் - "பார்ட்டி, அத்தனையையும் மொத்தமாஅள்ளிகிட்டு பூடும் போலிருக்கே!" 😰 (பரம்பொருள் உருவாகுமா? அதை உருவாக்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. சாமி கண்ண குத்திடும்! 😆)
🍝 எந்த பொருளுக்குள்ளும் ஊடுருவி செல்லும்
🍝 வாண்டா மேக்ஸிமாவை காவல் காக்கும்
🍝 காவல் பணியின் போது கிளின்ட் பார்டனிடம் தோற்றுப் போகும். வாண்டாவும் பல தளங்களுக்கு கீழே தள்ளி விட்டு ஓடி விடுவாள்.
🍝 ஒரு சமயத்தில், வாண்டாவை டாவு அடிக்கும்.
🍝 வார் மெஷினைக் காப்பாற்ற முனையும் போது தவறு செய்துவிடும். இதன் தவறால் வார்மெஷினின் இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் போய்விடும்.
🍝 தேனோஸின் அடியாட்களிடம் தர்மஅடி வாங்கி குற்றுயிராக கிடக்கும். உதவிக்கு சிலர் வந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விடும்.
🍝 இறுதியில், தேனோஸால் இறந்துபோகும்.

(இது ஓவர் தொல்லை/குழப்பம் கொடுத்ததா என்று தெரியவில்லை, அவெஞ்சர்ஸ் 4ஆம் படத்தின் இறுதியில் அனைவரும் திரும்ப வந்தாலும், இதை திரும்பக் கொண்டு வரவில்லை.)

ஆக, இவர்களது பரம்பொருள் சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்; சிலரிடம் தோற்றுப் போகும்; சிலரை டாவடிக்கும்; தவறும் செய்யும்; அடியும் வாங்கும்; யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஏங்கும்; இறந்தும் போகும்!! மொத்தத்தில் பரங்கியன் அவனது மதத்திற்கு உருவம் கொடுத்தது போலிருக்கும்!!! 😂😂🤣🤣🤣

👊🏼 அவெஞ்சர்ஸ் #3 படத்தில் ஒரு காட்சி

டைட்டன் கோளில் சில அவெஞ்சர்ஸ் சில கார்டியன்ஸை முதன் முறையாக சந்திக்க நேரிடுகிறது. எச்சரிக்கை உணர்வின் மிகுதியால், ஒருவரையொருவர் நம்பாமல், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. நிலைமை கைகலப்பாக மாறுவதை உணர்ந்த மரு. ஸ்ட்ரேன்ஜ் எதிர்பக்க பீட்டர் க்விலைப் பார்த்து...

மரு. ஸ்ட்ரேன்ஜ்: எந்த தலைவனுக்கு கீழ் நீ வருகிறாய்?

பீட்டர் க்வில்: யாருக்கு கீழ் வருகிறேனா? இதற்கு நான் என்ன பதில் சொல்வது? யேசு என்றா?

😝😆😂😂

எம்.எல்.எம். நிறுவனத்தின் நச்சு பார்வை படாத நாடும் இல்லை & தொழில்களும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தை கோட்டை விட்ட பிறகு, ஹாலிவுட் திரைப்படங்களை அது கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. அறிவியல் புதினங்களைக் கூட விட்டு வைப்பதில்லை. ஏதாவது ஒரு காட்சியிலாவது இஸ்ரவேல் அத்வைதியான யேசுவின் பெயர் உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது, உயிரற்றதை (பிணத்தை) கொண்டாடும் நிறுவன குறியீட்டை காண்பிக்க வேண்டும். இல்லையெனில்... 👻👹👺👽☠️

எதற்கு வம்பு என்று சேர்க்கப்பட்டது தான் முதல் படக்காட்சி. அது பெரும் வெற்றி பெறவே, 2வது படத்தில் "ஐ ஆம் தட் ஐ ஆம்"ஐ சேர்த்தார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததாலும், மேற்கொண்டு வளர்க்க முடியாததாலும், 3வது படத்தில் இஸ்ரவேல் அத்வைதியின் பெயர் மட்டும் வருவது போன்று ஒரு காட்சியை அமைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽

உடல் எனும் குறுக்கையில் மனம் எனும் யேசுவை அறைந்தால் (அழித்தால்) வெளிப்படுவது தூய அறிவு (இறைவன்). இதுவே உயிர்த்தெழுதல் (மெய்யறிவு பெறுதல்) எனப்படும்.

-- பகவான் ஸ்ரீரமணர் 🌺🙏🏼