Friday, October 30, 2026

பூச்சாண்டி & அம்மணம் - சிறு விளக்கம் 🙏🏽

"பூச்சாண்டி" & "அம்மணம்" ஆகிய சொற்களை பற்றி ஒருவருக்கு அடியேன் கொடுத்த விளக்கம்:


🌷 பூச்சாண்டி - பூச்சு+ஆண்டி - பூசிய ஆண்டி - திருநீறு பூசிய ஆண்டி.

🌷 திருநீறு - எல்லாம் எரிந்த பிறகு மீதமிருக்கும் சாம்பல். இது போன்று, நமக்கு தோன்றும் எண்ணங்கள், அமைந்திருக்கும் உடல், காணும் காட்சிகள் ஆகியவற்றை ஒதுக்கிய பிறகு மீதமிருக்கும் தன்மையுணர்வு. இதுவே உள்ளபொருளாகும்.

🌷 ஆண்டி - அனைத்தையும் துறந்தவர்.

🌷 திருநீறு பூசிய ஆண்டி - மெய்யறிவாளர்.

பூச்சாண்டி
எருமை மாடு
கழுதை
தாயிலி (மருவு: தாயோலி)
தறுதலை
காலிப்பயல்
தண்டம்
கொள்ளிக்கண்ணன்
...

இவையெல்லாம் மெய்யறிவாளரை வைவதற்காக அம்மன் & மாயோன் வழிபாட்டினர் பயன்படுத்திய சில சொற்றொடர்களாகும்! 😔

தெலுங்கு நாய்'க்க மன்னர் காலூன்றும் வரை மெய்யறிவு அடைதலை வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருந்த தமிழர், அதன் பிறகு, திட்டமிடப்பட்டு, அதற்கு எதிராக திசைத்திருப்பப்பட்டனர். அப்போது தோன்றிய சில சொற்றொடர்கள்:

🔸 ஆமை புகுந்த வீடு அவ்வளவுதான் (ஆமை - புலனடக்கம்)
🔸 நீர் நிலையில் காசை வீசு (நீர் நிலை - படைப்பு, காசு - மெய்யறிவு)
🔸 எருமையின் மீது மழை பெய்தது போல (எருமை - மெய்யறிவாளர், மழை - அவருக்கு ஏற்படும் நுகர்வுகள்)
🔸 சொந்தக் காசில் சூனியம் (சூனியம் - வீடுபேறு)
...

பொழுது இப்படியே போய்விடாது. பொய்த்தேடல் முடிவுக்கு வராமல் போகாது.

oOo

அடுத்தது, அம்மணம்.

🔸 அம்மணம் - அம்+மணம் - அழகிய மணம்.

🔸 இதற்கு இணையான சொல்: திருமணம் - திரு+மணம் - மேன்மையான மணம்.

🔸 அம்மணத்திலிருந்து பிறப்பது அம்மணி - அழகிய பெண்மணி.

1. மணம் = இணைவது / கூடுவது

அம்மணம் - அழகிய மணம் - அழகிய இணைவு - உள்ளபொருள்+மனம் - மனமானது உள்ளபொருளில் கரைந்து தனித்தன்மையை இழப்பது.

2. மணம் = நாற்றம் (Fragrance)

அம்மணம் - அழகிய நாற்றம் - உள்ளபொருளை பற்றிய மேன்மையான சிந்தனை.

oOo

கூடுதல் செய்தி:

🔸 அம்மணக்குண்டி - அழகிய மணங்கவழும் குண்டி - ஆடை இல்லாமலிருத்தலை / விலகியிருத்தலை குத்திக்காட்டாமல், கிண்டல் செய்யாமல், நேர்மறையாக எடுத்துச் சொல்லுதல்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment