Wednesday, May 27, 2026

கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதாம்! 😏


தேர்தலுக்கு முன்னால், கருங்காலி கட்டையை கையில் வைத்திருந்தால் அரசப்பதவி கிடைக்குமென்று கொம்பு சீவினர். இப்போது கருமை நிறப் பொட்டு வைத்தால் கண்ணூறு தாக்காதென்று கொம்பு சீவத் தொடங்கியுள்ளனர். 😏...

🌷 நெற்றியில் வெண்மையான திருநீறு இட்டால்: மாறாத உள்ளபொருளே மேலானது [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].
🌷 கருமை நிறப்பொருள்: மாற்றத்தை ஏற்படுத்தும் அன்னையே / பெருமாளே மேலானவர் [என்பது வைப்பவரின் கண்ணோட்டமாகும்].

🌷 நீறு: பற்றுகளை விட்டவர் / விட முயற்சிப்பவர்.
🌷 மை: பற்றுகளை விரும்புபவர்.

🌷 நீறு: எண்ணங்களற்று இருப்பவர் / இருக்க முயற்சிப்பவர்.
🌷 மை: எண்ணங்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பவர்.

🌷 நீறில்லா நெற்றி பாழ் - மெய்யறிவு பெறாதவரின் பிறப்பு வீணாகும்.
🌷 மை வைத்த நெற்றி பாழ் - பற்றுகளில் உழல்பவரின் பிறப்பு வீணாகும்.

அரகஜா என்ற அசுரப்பெயர் ஒரு கருமை நிறப்பொருளை குறிக்கிறது. எனவே, மேலே கருமைக்கு கண்ட யாவும் பொருந்தும். அவற்றை ஒதுக்கிவிட்டு, அதன் பெயரை மட்டும் ஆராய்ந்தால் கிடைப்பது: நல்லெண்ணங்களால் ஆனவர் / பிறந்தவர்!

ஆனால், 1.5ல தமிழரை கொன்று குவித்த சிங்களக் காட்டேறிகளுக்கு எதிராக கையெழுத்திட மறுத்தவருக்கு இது பொருந்துமா? 😡

oOo

இன்றைய நிலையில், நெற்றியில் கருமைப் பொருளை இடுவதற்கு, அதாவது, எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாக இருப்பதற்கு மிகவும் தகுதியானவர்: நம்ம ஜி! 😁

தோல்வியடைந்தாலும் புகழ் தேடுவார். வெற்றி பெற்றாலும் புகழ் தேடுவார். விலையேற்றத்திலும் புகழ் தேடுவார். விலை குறைப்பிலும் புகழ் தேடுவார். மொத்தத்தில், தற்புகழ்ச்சி எனும் எண்ணத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார். 😜

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment