Wednesday, May 20, 2026

நீரில் மிதத்தல் (அசுரத்தில், ஜலப்பிரதட்சணம்) - உட்பொருள்


தீச்சட்டி ஏந்துதல், பால்குடம் சுமத்தல், தீ மிதித்தல் வரிசையில் நீரில் மிதத்தலும் சேரும். இதனடிப்படை மெய்யியலாகும்.

🌷 கிணறு என்பது நமது மனமாகும்.

🌷 "கிணற்று நீரில் மிதந்து கொண்டிரு" என்பதை "கிணற்றின் ஆழத்திற்கு செல்லாதே" என்றும் கூறலாம்.

🌷 கிணற்றின் ஆழம் = மனதின் ஆழம் = எண்ணப்பதிவுகள் இருக்குமிடம்!

🌷 ஆழத்திற்கு செல்லாதே = எதையும் பதிவு செய்யாதே!

🌷 அன்றாட வாழ்வில், நமக்கு கிடைக்கும் பல நுகர்வுகள் பதிவுகளாக நம் ஆழ்மனதில் பதியும். அப்படி பதியவிடாமல், வருவதை வரவிட்டு, போவதை போகவிடுவதே, கிணற்று நீரில் மிதப்பதின் உட்பொருளாகும்!

சரி. யார் அவ்வாறு வாழ்வர்? மெய்யறிவாளர்!! வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பர்.

oOo

சோழவந்தான் சட்டக்கூட உறுப்பினரின் வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கிடு. இந்த கிணத்து தண்ணில மிதக்கிறேன்.

அவரது உண்மையான வேண்டுதல்: அம்மா தாயே! யோசேப்பு விசயை மட்டும் முதலமைச்சராக்கி விடு. அப்புறம் நான் ஒரு பார்வையாளான, நீ காட்டுற காட்சிய பாத்துகிட்டு மட்டுமிருக்கேன்!!

இதுதான் தனது உண்மையான வேண்டுதலென்பது அவருக்கு தெரிந்திருந்தால்... 😂😂🤣!!

oOo

இன்றைய சூழலில் அரசியலிலிருப்போர் மெய்யறிவுத் தேடலில் ஈடுபடமுடியுமா? ஆனால், மெய்யறிவாளரே ஆட்சியாளராக திகழ்ந்த பெருமை, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும், சாக்கடைகளும் நஞ்சுகளும் வந்து கலப்பதற்கு முன்னரிருந்த தமிழ்த் திருநாட்டிற்கு உண்டு!! 😍

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment