Thursday, December 18, 2025

திருக்கச்சி ஒருமாவன் (அசுரத்தில், ஏகாம்பரநாதர்) திருக்கோவிலின் முதல் திருச்சுற்றிலிருக்கும் நிலாத்துண்டப் பெருமாள்!


இன்று முதலெழுத்து திருடிக் கொண்டிருக்கும் கொல்டியாள்களின் கொடுங்கோல் முன்னோருடன் வந்த நாம நஞ்சு, நம் திருக்கோவில்களுக்குள் நுழைந்து, இன்று வரை தங்கியிருப்பது கொடுமையெனில், நஞ்சாக காண வேண்டிய அதை, திருநெறியின் ஒரு கூறாக காணுவது கொடுமையிலும் கொடுமையாகும்!! 😔

oOo

🌷 பெருமாள் + தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரைக் கொடி

இது, திருவானைக்கா திருக்கோவிலிருந்து சுடப்பட்டதாகும். அங்கு குடி கொண்டிருக்கும் திரு நாவல் மாமுனிவர் (அசுரத்தில், ஜம்பு மகரிஷி), "நாம் நுகரும் யாவும் நமக்குள்ளிருந்து வெளிப்படுகிறது" என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினார். அதை, ஒரு நாவல் மரம் அவரது வயிற்றில் தோன்றி, வாய் வழியாக வளர்வதாக பதிவு செய்திருப்பர். அதை சற்று மாற்றி, பெருமாளின் வயிற்றிலிருந்து வளரும் தொப்புள் கொடியாக காண்பித்துள்ளனர்.

🌷 தொப்புள் கொடியில் மலர்மகள்

🔸 மலர்மகள் - மெய்யறிவு
🔸 தொப்புள் கொடி - மனம், உடல், காட்சிகள்... நாம் நுகரும் யாவும். மனம் தோன்றினால் யாவும் தோன்றும். மனமழிந்தால் யாவும் அழியும். மனமே அனைத்திற்கும் அடிப்படையாகிறது. எனவே, இங்கு, தொப்புள் கொடி என்பது மனதை குறிக்கும்.

🔸 தொப்புள் கொடியில் மலர்மகள் = மனதில் மெய்யறிவு.

மெய்யறிவு கிடைத்துவிட்டால், படைப்பை பற்றிய நமது கண்ணோட்டம் மாறிவிடும். பிறகு, எதனாலும் பாதிப்படைய மாட்டோம். படைப்பினால் பாதிப்படைய வேண்டுமென்பது இயற்கை (அசுரத்தில், விதி). ஆனால், மெய்யறிவு கிடைத்துவிட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதையே, "இவ்வரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு" என்று பதிவு செய்துள்ளனர்.

ஓர் இறைவடிவத்தை காண்பதால் எந்த "விதியும்" மாறிவிடாது. அது உணர்த்தும் செய்தியை புரிந்து கொண்டால் மட்டுமே "விதி" மாறும்.

🌷 தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்

நாம மதத்தை பொறுத்தவரையில், தாய் என்பது உள்ளபொருளையும், சேய் என்பது மனதையும் குறிக்கும்.

(ஓர் அசுரத்தாய் (வெள்ளையினம்) ஓர் அழகிய தமிழினக் குழந்தையை (கருப்பினம்) தூக்கி வைத்திருக்கிறார். இது, பாலைவன மதங்களிடமிருந்து சுடப்பட்டதாகும். இதிலும் தங்களது இனவெறியை நாமாசுரர் புகுத்தியிருப்பர்.)

மெய்யறிவு பெற்ற பிறகு, மனமானது, மெல்ல மெல்ல, மாறும் வையகத்தை விரும்பாமல், மாறாத உள்ளபொருளை விரும்பத் தொடங்கும். இதுவே, "தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்" என்ற சொற்றொடரின் உட்பொருளாகும்.

oOo

எல்லா விளக்கமும் ஏரண (பீட்டரில், இலாஜிக்) அடிப்படையில் பொருந்தும் போது, ஏன் நாம மதத்தை விளாசுகிறேனென்ற கேள்வியெழலாம். அதற்கான பதில்:

மாப்பிள்ளை அவருதான். ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!

😁

அதாவது, இப்பதிவில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள் நாம மதத்தை சேர்ந்தவைதாம். ஆனால், விளக்கம் திருநெறியினை சேர்ந்ததாகும்!

நாம மதத்தை வைத்து விளக்கவேண்டுமானால்:

ஒரு வாழப்பழம் இங்கிருக்கு. இன்னொரு வாழப்பழம் எங்க?

அதாங்க இது!

என்ற வகை ஏமாற்று வேலையாக இருக்கும். 😆

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment