ஒரு விலையுயர்ந்த பொருளை ஓரிடத்தில் புதைத்து வைக்கிறோம். அவ்விடத்தை மறவாமலிருக்க, அடையாளமாக ஒரு பொருளை நட்டு வைக்கிறோம். காலப்போக்கில், புதைத்து வைக்கப்பட்ட பொருளை மறந்துவிடுகிறோம். அடையாளத்தை மட்டும் இறுகப் பிடித்துக் கொள்கிறோம். அணைக்கட்டு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அவ்விடம் நீரில் மூழ்கிவிடுமென தெரிந்ததும், அடையாளத்தை மட்டும் அகற்றி, வேறொர் இடத்தில் நட்டு வைத்து, அடையாளத்தை காப்பாற்றுகிறோம். ஆனால், புதையலை இழக்கிறோம்! புதையலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!
இதுதான் இன்றைய திருவெண்பாக்கம் கோவிலின் (பூண்டி, திருவள்ளூர்) வரலாறாகும்.
oOo
திரு ஆளுடைய தோழருக்கு (அசுரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார்) ஊன்றுகோல் வழங்கிய பெருமானின் திருவிடம் (அசுரத்தில், சமாதி) நீர்தேக்கத்திற்குள் உள்ளது. ஆனால், அவரது திருவிட அடையாளம் (அசுரத்தில், சிவலிங்கம்) சென்னை புரசையிலுள்ள திரு கங்கைமுடியரின் திருக்கோவிலில் உள்ளது.
நீர்த்தேக்கத்திற்குள் புதைந்த திருக்கோவிலிலிருந்து அகற்றப்பட்ட மற்ற
சிலைகள், நெடுங்கற்கள் & கல்வெட்டுள்ள கற்கள் ஆகியவற்றை கொண்டு, நீர் தேக்கத்தின் கரையிலுள்ள தற்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது. நீருக்குள்ளிருக்கும் பெருமானின் நினைவாக புதிய உடையவரும் நிறுவப்பட்டுள்ளது.
அசுரர்-அரவம் (#) கூட்டணியால், "திருக்கோவில் என்பது ஒரு பெருமானின் திருவிடம்" என்ற அறிவு நம்மிடமிருந்து நீங்கியது. விளைவு: அசலை விடுத்து, நகலை வணங்கிக் கொண்டிருக்கிறோம்! அசலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!
(# - அரவம் - நச்சுப்பாம்பு - கொல்டியாள்)
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ
-- நம்பி திருச்சொல் 7.89.3 🌺🙏🏽🙇🏽♂️
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment