Saturday, November 22, 2025

சுயம்பு, சந்திரன், சயரோகம், கலைகள் - உட்பொருள்

🌷 சுயம்பு - தான்தோன்றி
🌷 சந்திரன் - மனம்
🌷 சயரோகம் - நிலையற்றத் தன்மை
🌷 கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்தல் - ஒரு மனதுடன் தன்மையுணர்வில் நிலைத்திருத்தல். அதாவது, வடக்கிருத்தல்.

எல்லாவற்றையும் இணைத்தால்: அங்கிருக்கும் பெருமான், யாருடைய வழிகாட்டுதலுமின்றி, தானாகவே முயன்று, வடக்கிருந்து, மெய்யறிவு பெற்றவர்.

🌷 வெள்ளை நிற இறைச்சின்னம் - கிடைத்தற்கரிய / மாறுபட்ட ஒரு பொருள் கிடைத்தால், அதை அப்பகுதியிலுள்ள பெருமானுக்கு, அல்லது உயிர்ப்புள்ள திருக்கோவிலுக்கு, அல்லது மன்னருக்கு காணிக்கையாக்குவது என்பது தொல் தமிழரின் பண்பாடாகும். அதே பொருளை வைத்து படங்காட்டி, கல்லாக் கட்டுவதென்பது அசுரரின் பண்பாடாகும்! 👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, November 19, 2025

இறைவனும் இறைவியும் கைகோர்த்தபடி அருளும் கோவில் - உட்பொருள்


🌷 அன்னை - மனம்
🌷 இறைவன் - தன்மையுணர்வு (உள்ளபொருள்)
🌷 கைகோர்த்தல் - மனதை முழுவதுமாக தன்மையுணர்வில் கரைத்து விடுதல்

திருமணஞ்சேரி கருவறையிலுள்ள இறைச்சின்னத்தின் கீழிருக்கும் திரு அருள்வள்ளற் பெருமான் (அசுரத்தில், உத்வாகநாதர்), தனது மனதை முழுவதுமாக கரைத்துவிட்டார் என்பதையே "அங்கு இறைவனும் அன்னையும் கைகோர்த்தபடி உள்ளனர்" என்று பதிவு செய்துள்ளனர்.

இப்படி வெளிப்படையாக சொன்னால் என்னவாகும்? எல்லோருக்கும் தெளிவு கிடைத்து, பழையபடி, மெய்யறிவுத் தேடலில் ஈடுபடுவர். பிறகு, படங்காட்டும் தொழில் படுத்துவிடும்! 😏

oOo

பெரும்பாலான இறைத் திருமணங்கள் பின்வரும் இரு வகைகளுக்குள் அடங்கும்:

🌷 திருச்செந்தூர் முருகன்-தெய்வானை திருமணம் - மெய்யறிவு அடைதலை குறிக்கும். (தெய்வானை - மெய்யறிவு)

🌷 திருத்தணி முருகன்-வள்ளி திருமணம் - ஏற்கனவே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு நல்வழி காட்டுவதற்காக, தனது மனதை சற்றே இயங்கவிடுதலை குறிக்கும். (வள்ளி - மனம்)

இன்னொரு வகை "திருமணமும்" உண்டு:

|/ பெருமாள்-மலர்மகள் திருமணம் - மெய்யறிவு பெற்ற ஒரு பெருமான், தன்னிலையிலிருந்து விலகி, மீண்டும் வையக வாழ்க்கைக்கு திரும்பி, "கோவிந்தா" ஆவதை குறிக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) பெண்ணாசையால் தன்னிலை தவறியது.

> மலர்மகள் - மெய்யறிவு பெற்ற மணாளர்
> பெருமாள் - மேனகை, மேனகையால் அவருக்கு தோன்றிய பெண்ணாசை, அதனால் பிறந்த சகுந்தலை...

எவ்வாறு குடித்து உடல், குடும்பம் & நாட்டு நலன்களை கெடுத்துக் கொள்ளுமிடத்திற்கு "மனமகிழ் மன்றம்" என்று கொல்டியாள் கூட்டம் பெயரிட்டுள்ளதோ, அவ்வாறே உயர்ந்த வீடுபேற்றிலிருந்து, தாழ்ந்த வையக வாழ்க்கைக்கு திரும்புதலை, கொல்டியாள் மண்ணிலிருந்து வந்த நாம மதம் திருமணமென்று அழைக்கிறது!

ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் காணும் கூட்டத்திற்கு, திருமணம் என்பது கோவிந்தாவாகவும், கோவிந்தா ஆவது திருமணமாகவும் தோன்றுவதில் வியப்பில்லை! 👊🏽👊🏽

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 17, 2025

டகால்டிக்காரர்தான் மீன்குஞ்சுக்கும் நீந்தக் கற்றுக் கொடுத்தவராம்! 😜


பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வையகத்தை தப்பும் தவறுமாக படைத்து விட்டு, அதை சரி செய்ய, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஒரே மகனை அனுப்பி வைத்தார் இறைவன் என்று ஒப்பாரி வைக்கும் ஒரு கூட்டம்!

பிறைநிலவைக் கூட ஆண்குறியின் உட்திறப்பாக கண்ட ஒரு பெருமகனார் காட்டிய "அன்பு" வழிதான் வையகத்தை உய்ய வைக்குமென்று ஊளையிடும் இன்னொரு கூட்டம்!

இவ்வரிசையில், டகால்டி வேலைகளை செய்து கொண்டிருந்த ஒரு தெலுங்கர்தான், நாராயணன் என்ற அசுரச்சொல்லிற்கான பொருளை வெளிப்படுத்தினார் என்று டோலிவுட் வகை படங்காட்டுகிறது ஒரு கூட்டம்!

சமயம் என்ற சொல்லுக்குள் அடங்கும் யாவற்றையும், "அக்கு வேறு ஆணி வேறாக" என்றோ பிரித்து மேய்ந்தவர் தொல் தமிழர். டகால்டிக்காரருக்கு 1300-1400 ஆண்டுகளுக்கு முன்னரே,

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

என்று எழுதிவைத்துள்ளார் முப்பால் முனிவர்.

பொருள்: எப்போதும் உயர்ந்த உள்ளபொருளை மட்டுமே சிந்திக்கவேண்டும். அப்படி சிந்திக்கவிடாமல் "மற்றது" தடுத்தாலும், அப்படி தடுக்கும் அந்த "மற்றதை" விடாது தவிர்க்கவேண்டும்.

"மற்றது" என்ற சொல்லினால் முனிவர் குறிப்பிடுவது... நாராயணனை!

உண்மையில், அவர் குறிப்பிடுவது அன்னையை (டகால்டிக்காரரின் நாராயணனை, அன்று, பண்பட்டோர் மதிக்கவேயில்லை! 😏). அன்னை எதை குறிப்பிடுகிறாரோ அதை ஆணாகக் கொண்டால் நாராயணன். இதனால்தான் மாயோனை அன்னையின் தமையன் என்றனர்.

> நாராயணன் - நீராய் இருப்பவன்.
> நீர் - நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருக்கும் யாவும். அதாவது, மனம், உடல், வையகம் என மொத்த படைப்பும் ஆனவன்.

சுவரிருந்தால்தான் வரைபடம்!
> சுவர் - உள்ளபொருள்
> வரைபடம் - நாராயணன்

இவ்வளவுதான் நாராயணன்!

இதைப் போய் ஒருவர், "வெளியே சொல்லக் கூடாது" என்று கட்டளையிட்டாராம். அதை மீறி டகால்டிக்காரர், ஒரு நெடுமாடத்தின் மீதேறி, வெளியிட்டாராம். அக்கால பாலகிருஷ்ணாவாக (திராவிட நடிகர் 😉) இருந்திருப்பார் போலிருக்கிறது! 🤣

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Saturday, November 15, 2025

பெருமாளின் கையிலுள்ள வாள் பேயாழ்வாராக பிறந்ததாம்! 😁


> வாள் - அறிவு.
> வாளோடு பிறந்த மூத்தக்குடி - அறிவோடு பிறந்த மூத்தக்குடி.

சிலர் பொருள் சேர்க்க பிறந்திருப்பர். சிலர் ஊர் சுற்ற பிறந்திருப்பர். சிலர் யாவற்றையும் நுகர பிறந்திருப்பர். இது போன்று, பேயாழ்வார் சிந்திக்கப் பிறந்திருப்பார். அதாவது, அறிவின் வடிவமாகிறார்.

இப்படி எளிமையாக சொல்லாமல், ஏன் "பெருமாளின் கையிலுள்ள வாள்" என்று பிட் போடுகின்றனர்?

ஏனெனில், ஒரு பயலுக்கும் தெளிவு கிடைத்துவிடக்கூடாது. தெளிவு கிடைத்துவிட்டால், படங்காட்டும் தொழில் படுத்துவிடுமே! பிறகு, சேஃபா, கம்ஃபர்ட்டா, செக்யூர்டா, வாழையடி வாழையா நன்னா போஜனம் செய்வதெப்படி?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் = ஏமாற்று வேலை!
> வைணவம் = ஏமாற்று வேலை!!

அறிவின் வடிவாக வாழ்ந்த ஒருவர், எவ்வாறு ஏமாற்று வேலையை பின்பற்றமுடியும்?

அல்லது, அவர் பின்லேடன்-வகை அறிவாளியாக இருக்கலாம். பின்லேடன், அமெரிக்காவை நிலைகுலைய வைத்தான், USD10B செலவு செய்யவைத்தான் & 10 ஆண்டுகள் பாடுபட வைத்தான். பின்னரே சிக்கினான். எனில், அவன் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்திருக்க வேண்டுமென்று கற்பனை செய்து கொள்ளலாம். அவனை போன்றொரு சிறந்த அறிவாளியாக பேயாழ்வார் இருந்திருக்கலாம்! 😏

அல்லது, திரு நம்மாழ்வாரை போன்று பேயாழ்வாரும் திருநெறியராக இருந்திருக்கலாம். நம்மாழ்வாருக்கு பெண்குறி (நாமம்) சாத்தி, அவரை தங்களவராக காட்டுவது போன்று, பேயாழ்வாருக்கும் பெண்குறி சாத்தி, காப்புரிமை கொண்டாடுகின்றனர் என்று கொள்ளலாம். இதற்கான குறிப்பையும் அவர்களே கொடுத்துள்ளனர்

"ஐசுவரியம் உண்டாக, எதிரிகள் குறைய இங்கு வேண்டிக் கொள்ளலாம்" என்று எழுதியிருக்கிறார்கள். மெய்யியலில், ஐசுவரியம் எனில் மெய்யறிவாகும்; எதிரிகள் எனில் பற்றுகளாகும். அதாவது, பேயாழ்வரின் அருள் பெற்றால் பற்றுகள் குறைந்து, மெய்யறிவு கிட்டும் என்பது பொருளாகும். ஆனால், நாம மதமோ இரண்டிற்குமே எதிரானதாகும். மெய்யறிவை தூற்றும். பற்றுகளை சேர்த்துக் கொள்ளச் சொல்லும். எனில், எப்படி பேயாழ்வார் நாம மதத்தை சார்ந்தவராக முடியும்?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்கு பின்னர், வடக்கிலிருந்து வந்த சமணம், பௌத்தம் போன்ற நச்சுக் கூட்டங்களால் தொழில் செய்ய முடியாமல் போனது. அப்போது, மொட்டையரில் ஒரு பிரிவினர், "நம்மாளாண்டதான் கம்ப்ளீட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இருக்கே. கண்டன்ட்ட மாத்தி பிசினஸ் செஞ்சா என்ன?" என்று சிந்தித்து, அப்போது சிறியளவில் இருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கி, இன்றுள்ள நாமத் தொழிலாக வளர்த்தெடுத்தனர்.

💥 பள்ளிகொண்ட பெருமாள் - எகிப்திலிருந்து சுடப்பட்டது.
💥 பெண்குறி (நாமம்) - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அங்கு பயன்பாட்டிலருந்த 'n' வடிவத்தையெடுத்து, தலைகீழாக்கி ('u'), அதன் நடுவில் சிவப்புக் கோட்டை சேர்த்தது தெலுங்கனனா இராமானுஜர்.
💥 சடாரி - பாலைவன மதங்களிலிருந்து சுடப்பட்டது. அவர்களது குல்லா, இங்கு சடாரியானது.
💥 சக்கிரத்தாழ்வார் - யூதரிடமிருந்து சுடப்பட்டது. அவரது தாவீது விண்மீன் (David's Star), இங்கு சக்கிரத்தாழ்வாரானது.
💥 திரங்கன்முகவன் (குரங்கு) - ஆனைமுகனுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டது
💥 கோளரிப் பெருமாள் கதை - திருக்கடவூர் கதையின் உல்டா.
💥 தெலுங்கனான இராமானுஜர் 7 மலைகளை முழங்கால்களால் கடந்தது - திரு காரைக்கால் அம்மையார் திருக்கயிலாய மலையை தலையால் கடந்த வரலாற்றின் உல்டா.

oOOo

கண்ணனே சொன்னான். கண்ணனே எழுதினான். (இங்கு கண்ணன் என்பது மனமாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல. 🌺🙏🏽🙇🏽‍♂️)

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, November 11, 2025

திருச்செந்தூர் அகப்போர் (அசுரத்தில், சூரசம்ஹாரம்)!


🌷 யானைமுகன் அழிப்பு (அசுரத்தில், கஜமுகன்) - நினைவுகளை சட்டை செய்யாதிருத்தல்.

🌷 கோளரிமுகன் அழிப்பு (அசுரத்தில், சிங்கமுகன்) - "ஒரு செயலை செய்பவன் நான்" என்ற கண்ணோட்டத்தை விட்டுவிடுதல்.

🌷 செருக்கன் அழிப்பு (அசுரத்தில், சூரபதுமன்) - "நான் இன்னார்" என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதல்.

🌷 மாமரப் பிளப்பு

மேற்கண்ட யாவும் நிகழ்ந்தால், நாமொரு மாமரமாக திகழ்வோம். அந்நிலையிலிருந்த பெருமான்களிடமிருந்து வெளிப்பட்ட சில மாங்கனிகள்:

🥭 அறம் செய விரும்பு
🥭 இல்லறமல்லது நல்லறமன்று
🥭 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

(இப்போது மாமரமாக திகழ்வதென்றால் என்னவென்று புரிந்திருக்கும்!)

மாமர நிலைக்குப் பிறகு, ஒன்று, கருவறை நிலை கிட்டும்; அல்லது, காட்சியறை நிலை கிட்டும்.

கருவறை - எதுவும் தோன்றாது. நாம் நாமாக இருக்கலாம். நமது பெருமான்கள் பலரும் இந்நிலையிலேயே உள்ளனர்.

காட்சியறை - ஒரு திரையரங்கில் திரைப்படத்தை பார்ப்பது போன்று, நாம் ஒருபுறம் இருப்போம்; காட்சிகள் இன்னொரு புறம் ஓடிக் கொண்டிருக்கும். இந்நிலையை வேண்டி, அடைந்தவர்களில் ஒருவர்: திரு காரைக்கால் அம்மையார்! ("நான் பாட... நீ ஆட...")

காட்சியறை கிட்டும் நிகழ்வையே மாமரப்பிளப்பாக திருச்செந்தூர் அகப்போரில் பதிவு செய்துள்ளனர்.

🔸 காண்பான் - சேவல்
🔸 காட்சி - மயில்

எனில், மாமரத்தை பிளந்த முருகப்பெருமான் யார்?

oOo

திருச்செந்தூர் கருவறையில் 2 பெருமான்கள் உள்ளனர். கிழக்கு நோக்கிய சிலைக்கு கீழேயிருக்கும் பெருமான் ஆயராக (அசுரத்தில், குருவாக) இருக்கவேண்டும். தெற்கு நோக்கிய சிலைக்கு கீழேயிருக்கும் பெருமான் மேற்கண்ட பெருமானது அடியாராக இருக்கவேண்டும்.

தன்னை அணுகிய அடியாரை, மெல்ல மெல்ல, திருமண் நிலையிலிருந்து திருநீற்று நிலைக்கு பின்வருமாறு உயர்த்தியிருக்கவேண்டும்:

🌷 முதலில், உனக்கு தோன்றும் நினைவுகளை சட்டை செய்யாதே (யானைமுகன் அழிப்பு).
🌷 அடுத்து, ஒரு செயலை நீதான் செய்கிறாய் என்ற கண்ணோட்டத்தை விட்டுவிடு (கோளரிமுகன் அழிப்பு).
🌷 இறுதியாக, "நான் இன்னார்" என்ற எண்ணத்தை கைவிட்டு, நீ நீயாக மட்டும் இரு (செருக்கன் அழிப்பு).

மேற்கண்ட அறிவுரைகளை செவ்வனே கடைபிடித்து, அந்த அடியவர் பெருமானும் மாமர நிலைக்கு உயர்ந்து, நல்ல மாங்கனிகளை வையகத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்திருப்பார். இனி இவர் எகிப்தியரின் (பள்ளிகொண்ட பெருமாள் - இவ்வடிவம் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது) பாசாங்கிற்கு ஆளாகமாட்டார் என்பதை உறுதி செய்த பின்னர், அவரை (மாமரத்தை) பிளக்க திருவுள்ளங்கொண்டிருப்பார் (வேல்).

அதாவது, அந்த ஆயர் பெருமானே மாமரத்தை (அடியவரை) சேவல் (காண்பான்) & மயில் (காட்சி) என்று இரு கூறுகளாக பிளந்த முருகப்பெருமான் ஆவார்!!

(ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக அணுகவேண்டும். இங்கு, முருகன் என்பது ஆயரை குறிக்கும். பழனி கதையில், முருகன் என்பது மனதை குறிக்கும். சுவாமிமலையில் மெய்யறிவை குறிக்கும்.)

சரி. அப்பெருமான் பயன்படுத்திய வேல் என்பது யாது?

oOo

அடியவருக்கு அருள வேண்டுமென்பது ஓர் எண்ணமாகும். எந்த எண்ணத்தையும் தோற்றுவிப்பது என்பது அன்னையின் (மனம்) பணியாகும். இதையே, "அன்னையிடமிருந்து முருகப்பெருமான் (ஆயர்) வேலை (எண்ணத்தை) பெற்றார்!" என்று சிக்கல் திருக்கோவிலின் கதையில் பதிவு செய்துள்ளனர்.

(இதை சிந்தித்துப் பார்த்தால் சிக்கல் மிகுந்ததாக தோன்றும். சிக்கல் மிகுந்த மேற்கண்ட சிக்கலை தெளிவாக உணர்ந்துகொண்ட பெருமான் திருவிடம் கொண்டிருப்பதால், அவ்வூர் "சிக்கல்" என்று வழங்கப்படுகிறதோ? ☺️)

அடியவருக்கு அருள வேண்டுமென்ற எண்ணத்தின் செயல்வடிவமே திருச்செந்தூர் பெருமானின் வேலாகும்!! (பொது வழக்கில், அருட்பார்வை என்கிறோம்.)

oOOo

அலைவாய் உகந்த பெருமான் திருவடி போற்றி  🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, November 6, 2025

பிரும்மதேயம், இராமேச்சுரம் & காசி - ஒப்பீடு தேவையில்லை!


பிரும்மதேய அசுரர் காட்டும் படத்தைக் காண்பதென்பது, காசிக்கு சென்று அவ்வூர் அசுரரும், இராமேச்சுரத்திற்கு சென்று அவ்வூர் அசுரரும் காட்டும் படத்தை காண்பதற்கு நிகராகும்.

👆🏽 படிப்பதற்கு எப்படியிருக்கிறது? 😏

காசி காசியாக இருக்கட்டும். இராமேச்சுரம் இராமேச்சுரமாக இருக்கட்டும். பிரும்மதேயம் பிரும்மதேயமாக இருக்கட்டும். ஒப்பீடு தேவையில்லை.

oOo

🌷 காசி - ஒளி - உள்ளபொருள் - அருள்.
🌷 இராமேச்சுரம் - கடல் - மனம், உடல், வையகம் - படைப்பு - பொருள்.

பிரும்மதேயப் பெருமானை வணங்கினால் அருளும் கிட்டும். அருள் கிட்டும் வரை, உடலில் உயிர் தங்கியிருக்க தேவையான பொருளும் கிட்டும்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 3, 2025

திருவானைக்கா திருக்கோவிலிலிருந்தும், எகிப்திலிருந்தும் சுட்ட நாமாசுரர்!!

தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத நாமாசுரர், இம்முறை, திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றிலிருந்து ஒரு செய்தியை உட்டாலங்கடி செய்துள்ளனர்! 🤭

முதலில், அவர்களது உட்டாலங்கடி கைங்கரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு:

திரு காரைக்கால் அம்மையார், கயிலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலை அவருக்கு ஓர் இறைச்சின்னமாக (அசுரத்தில், சிவலிங்கமாக) தோன்றியது. எனவே, அம்மலையை காலால் கடக்காமல், தலையால் கடந்து சென்று, அங்கிருந்த பெருமானை வணங்கினார்.

நாமாசுரரின் உட்டாலங்கடி: 

தெலுங்கனான இராமானுஜர் திருமலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலைத்தொடரானது, எகிப்திலிருந்து நாமாசுரர் சுட்டுக் கொண்டுவந்த பள்ளிகொண்ட பெருமாள் (1) போலத் தோன்றியது. எனவே, அம்மலைத்தொடரை காலால் கடக்காமல், முழங்காலால் கடந்து சென்று, [நாமாசுரரின் பித்தலாட்டங்களை தலையெழுத்தே 🤦🏽என்று தாங்கிக் கொண்டிருக்கும்] திரு கொங்கணவப் பெருமானை (திருமலைப் பெருமாள்) வணங்கினார்.

வேறுபாடு: அம்மையார் ஒரு மலையை கடந்தார். தெலுங்கர் ஏழு மலைகளை கடந்தார்.

🥹🥹🥹

திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி: 

அங்குள்ள 4வது மதில்சுவரை, அங்கு உறையும் திரு நாவல் முனிவரே மனிதவடிவில் வந்து, பணியாளருக்கு திருநீற்றை கொடுத்துக் கட்டினார். பின்னர், அந்நீறு அவரவர் கூலிக்கேற்ற பொன்னாக மாறியது.

இப்போது, திருநாங்கூருக்கு வருவோம்:

இந்த விகாரையை பெருமாளே கட்டினார்.

(அங்கு திருநீறு கொடுக்கப்பட்டதற்கு நிகராக இங்கு செய்தியேதுமில்லை. அதாவது, Story Development சரியாக நடக்கவில்லை! 😜)

வேறுபாடு: திருவானைக்கா பெருமான் மதில்சுவரை மட்டுமே கட்டினார். திருநாங்கூர் பெருமான் கோவிலையே கட்டினார்.

🥹🥹🥹

பின் குறிப்புகள்:


1. எகிப்தில் கிடைத்திருக்கும் வரைபடத்தில், ஒரு மனிதர் நீரில் படுத்திருப்பார். அவரை சுற்றி 5 தலைகள் கொண்ட ஒரு பாம்பு இருக்கும். அதை சற்று மாற்றி, பள்ளி கொண்ட பெருமாளாக நம் தலையில் கட்டியுள்ளனர். எகிப்திய வரைபடத்தை பார்த்தவுடன், அதுதான் பள்ளிகொண்ட பெருமாளின் வேரென்ற உண்மை பளிச்சென்று விளங்கும். (வரைபடத்தில், நீல நிற கோடிட்ட குறியீடுகள் நீரை குறிக்கும்)

(திருநெறியை வீழ்த்துவதற்காக நாமாசுரர் எவ்வளவு "உழைத்திருக்கின்றனர்" 😪!! ஆனாலும், பெருமாள் அவர்களுக்கு வழங்கியுள்ள பட்டம்... ஏமாற்றுக்கூட்டம்! (\|/ = ஏமாற்றுவேலை) 😃)

2. "திருநாங்கூர் விகாரையை கோச்செங்கட் சோழர் கட்டினார்" என்றொரு பிட்-ஐ பதிவு செய்திருக்கின்றனர்!

"மறைக்காயர் நகர் கலவி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"

"டுமீல் குப்பம் ஒப்பாரி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"

மேற்கண்ட இரு சொற்றொடர்களை படித்தவுடன் என்னென்ன உணர்வுகள் தோன்றுகின்றனவோ, அதே உணர்வுகள் முதற்சொற்றொடரை படித்ததும் தோன்றவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது? கோவில் என்ற சொல்லுக்கு தகுதியான திருநெறி திருக்கோவிலுக்கு இணையாக ஒரு நாம விகாரையை காணும்படி கொம்பு சீவியிருக்கின்றனர்!! 🤬

எல்லாம், கடந்த 7+ நூற்றாண்டுகளாக தமிழரை தமிழரல்லாதோர் ஆண்டதின், பராமரித்ததின் விளைவாகும்! 😡😤

பொழுது இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். யாவும் மீண்டும் நலமாகும்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪷🪷🪷🪷🪷