🌷 யானைமுகன் அழிப்பு (அசுரத்தில், கஜமுகன்) - நினைவுகளை சட்டை செய்யாதிருத்தல்.
🌷 கோளரிமுகன் அழிப்பு (அசுரத்தில், சிங்கமுகன்) - "ஒரு செயலை செய்பவன் நான்" என்ற கண்ணோட்டத்தை விட்டுவிடுதல்.
🌷 செருக்கன் அழிப்பு (அசுரத்தில், சூரபதுமன்) - "நான் இன்னார்" என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதல்.
🌷 மாமரப் பிளப்பு
மேற்கண்ட யாவும் நிகழ்ந்தால், நாமொரு மாமரமாக திகழ்வோம். அந்நிலையிலிருந்த பெருமான்களிடமிருந்து வெளிப்பட்ட சில மாங்கனிகள்:
🥭 அறம் செய விரும்பு
🥭 இல்லறமல்லது நல்லறமன்று
🥭 உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
(இப்போது மாமரமாக திகழ்வதென்றால் என்னவென்று புரிந்திருக்கும்!)
மாமர நிலைக்குப் பிறகு, ஒன்று, கருவறை நிலை கிட்டும்; அல்லது, காட்சியறை நிலை கிட்டும்.
⭐ கருவறை - எதுவும் தோன்றாது. நாம் நாமாக இருக்கலாம். நமது பெருமான்கள் பலரும் இந்நிலையிலேயே உள்ளனர்.
⭐ காட்சியறை - ஒரு திரையரங்கில் திரைப்படத்தை பார்ப்பது போன்று, நாம் ஒருபுறம் இருப்போம்; காட்சிகள் இன்னொரு புறம் ஓடிக் கொண்டிருக்கும். இந்நிலையை வேண்டி, அடைந்தவர்களில் ஒருவர்: திரு காரைக்கால் அம்மையார்! ("நான் பாட... நீ ஆட...")
காட்சியறை கிட்டும் நிகழ்வையே மாமரப்பிளப்பாக திருச்செந்தூர் அகப்போரில் பதிவு செய்துள்ளனர்.
🔸 காண்பான் - சேவல்
🔸 காட்சி - மயில்
எனில், மாமரத்தை பிளந்த முருகப்பெருமான் யார்?
oOo
திருச்செந்தூர் கருவறையில் 2 பெருமான்கள் உள்ளனர். கிழக்கு நோக்கிய சிலைக்கு கீழேயிருக்கும் பெருமான் ஆயராக (அசுரத்தில், குருவாக) இருக்கவேண்டும். தெற்கு நோக்கிய சிலைக்கு கீழேயிருக்கும் பெருமான் மேற்கண்ட பெருமானது அடியாராக இருக்கவேண்டும்.
தன்னை அணுகிய அடியாரை, மெல்ல மெல்ல, திருமண் நிலையிலிருந்து திருநீற்று நிலைக்கு பின்வருமாறு உயர்த்தியிருக்கவேண்டும்:
🌷 முதலில், உனக்கு தோன்றும் நினைவுகளை சட்டை செய்யாதே (யானைமுகன் அழிப்பு).
🌷 அடுத்து, ஒரு செயலை நீதான் செய்கிறாய் என்ற கண்ணோட்டத்தை விட்டுவிடு (கோளரிமுகன் அழிப்பு).
🌷 இறுதியாக, "நான் இன்னார்" என்ற எண்ணத்தை கைவிட்டு, நீ நீயாக மட்டும் இரு (செருக்கன் அழிப்பு).
மேற்கண்ட அறிவுரைகளை செவ்வனே கடைபிடித்து, அந்த அடியவர் பெருமானும் மாமர நிலைக்கு உயர்ந்து, நல்ல மாங்கனிகளை வையகத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்திருப்பார். இனி இவர் எகிப்தியரின் (பள்ளிகொண்ட பெருமாள் - இவ்வடிவம் எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது) பாசாங்கிற்கு ஆளாகமாட்டார் என்பதை உறுதி செய்த பின்னர், அவரை (மாமரத்தை) பிளக்க திருவுள்ளங்கொண்டிருப்பார் (வேல்).
அதாவது, அந்த ஆயர் பெருமானே மாமரத்தை (அடியவரை) சேவல் (காண்பான்) & மயில் (காட்சி) என்று இரு கூறுகளாக பிளந்த முருகப்பெருமான் ஆவார்!!
(ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக அணுகவேண்டும். இங்கு, முருகன் என்பது ஆயரை குறிக்கும். பழனி கதையில், முருகன் என்பது மனதை குறிக்கும். சுவாமிமலையில் மெய்யறிவை குறிக்கும்.)
சரி. அப்பெருமான் பயன்படுத்திய வேல் என்பது யாது?
oOo
அடியவருக்கு அருள வேண்டுமென்பது ஓர் எண்ணமாகும். எந்த எண்ணத்தையும் தோற்றுவிப்பது என்பது அன்னையின் (மனம்) பணியாகும். இதையே, "அன்னையிடமிருந்து முருகப்பெருமான் (ஆயர்) வேலை (எண்ணத்தை) பெற்றார்!" என்று சிக்கல் திருக்கோவிலின் கதையில் பதிவு செய்துள்ளனர்.
(இதை சிந்தித்துப் பார்த்தால் சிக்கல் மிகுந்ததாக தோன்றும். சிக்கல் மிகுந்த மேற்கண்ட சிக்கலை தெளிவாக உணர்ந்துகொண்ட பெருமான் திருவிடம் கொண்டிருப்பதால், அவ்வூர் "சிக்கல்" என்று வழங்கப்படுகிறதோ? ☺️)
அடியவருக்கு அருள வேண்டுமென்ற எண்ணத்தின் செயல்வடிவமே திருச்செந்தூர் பெருமானின் வேலாகும்!! (பொது வழக்கில், அருட்பார்வை என்கிறோம்.)
oOOo
அலைவாய் உகந்த பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment