Tuesday, March 29, 2022

திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - சில குறிப்புகள்

அங்கு நடந்த "ஒரு இலட்சம் விளக்கேற்றும் திருவிழா" பற்றிய சிறிய, அருமையான, நேர்த்தியான காணொளி: https://youtu.be/Jz3TqIivn5s

🌷 திருவனந்தபுரம் திரு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோயில் - மிகப் பழமையான திருத்தலம் - திரு அகத்திய மாமுனிவரின் (குள்ள மாமுனிவர்) 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதி தலம். இவரது சமாதியின் மீது வைக்கப்பட்டுள்ள அடையாளச் சின்னமே அனந்தபத்மநாபராவார். 

🔸 அனந்த - எல்லையற்ற / முடிவற்ற.

🔸 பத்மநாபம் - அலையலையாக படைப்புகள் (உயிர்கள் & உலகங்கள்) தோன்றுவதைக் குறிக்கும். 

அதாவது, உள்ளபொருளை குறிக்கும்

🌷 அகத்தியரின் காலம் இராமாயண காலமாகும். 

🌷 இன்று இத்திருத்தலம் வைணவர்களிடம் இருக்கிறது. இதற்கு முன்னர் இவர்களே பெளத்தர்களாக இருந்தபோதும் இவர்களிடமே இருந்தது. அதாவது, பெளத்த விகாரமாக இருந்தது. 

🌷 கருவறையை அல்லது நுழைவாயிலை மூன்றாக பகுப்பது சமண & பெளத்தர்களின் வேலை. இதன் பொருள்: நனவு, கனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளிலும் மாறாதது உள்ளபொருள் மட்டுமே! நாம் திருநீற்றை 3 கீற்றுகளாக நெற்றியில் தரிப்பதற்கு சமம்.

🌷 வைணவம் தோன்றியது ஏறக்குறைய 1,300 ஆண்டுகளுக்கு முன்னர். நிலைபெற்றது நாயக்க மன்னர்கள் காலத்தில் - ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னர். பௌத்தம் தோன்றியது ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்னர். நம் பக்கம் வரத்தொடங்கியது 2,000 ஆண்டுகளுக்கு முன்னர். இராமாயண காலமென்பது 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். எனில், வைணவ-பௌத்தர்களுக்கு முன்னர் இந்த திருத்தலத்தை யார் பராமரித்தனர்? நாம் தான்!!

🌷 சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், இத்தலத்துக் கருவறையில் தீப்பிடித்து, மரத்தால் செய்யப்பட்டிருந்த மூலவர் உருவம் எரிந்துவிட்டது. பின்னர், சாலக்கிராம கற்கள் மற்றும் கடுசர்க்கரை எனும் பூச்சுக்கலவை கொண்டு, இப்போதிருக்கும் மூலவர் உருவம் உருவாக்கப்பட்டது. இது பள்ளிகொண்ட பெருமாள் உருவத்தின் நான்காம் பதிப்புருவாகும் (Version 4).

🔸 பள்ளிகொண்ட பெருமாள் மட்டும் - பதிப்புரு 1
🔸 பெருமாளுடன் & அம்மன்(கள்) - பதிப்புரு 2
🔸 பெருமாள், அம்மன்(கள்) & ஏனையோர் - பதிப்புரு 3
🔸 பதிப்புரு 3 உடன் சிவலிங்கம் - பதிப்புரு 4

🌷 பின்வரும் தகவல் வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கிறதென்று இராஜாஜி சொன்னதாக தினமலரின் வாரமலரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்தது:

மேற்குத் தொடர்ச்சி மலைகளினுடே, இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த திரு இராமபிரான் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டாராம்: இராமா, பொதிகை மலைப்பக்கம் சென்றுவிடாதே! அங்கு அகத்திய மாமுனிவர் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை கேட்க நேர்ந்தால், அதன் சுவையில் மயங்கி, உனது நோக்கத்தை மறந்துவிடுவாய்!! 😍

தமிழ் வளர்த்த, காவிரி தந்த அகத்திய பெருமானின் திருவடி போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, March 25, 2022

ஆப்பிள் நிறுவனத்தின் "கடிபட்ட ஆப்பிள்"


ஆப்பிள் நிறுவனத்தின் இலச்சினை: கடிபட்ட ஆப்பிள்

இதைப் பற்றி ஒரு சொல்லில் கூற வேண்டுமென்றால்: ஆசை!

ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறைமறுப்பாளராக சில காலமும், பௌத்தராக சில காலமும் இருந்து, பின்னர், எல்லாவற்றையும் தூக்கியெறிந்தாலும், இளம் வயதில், ஒரு கிறித்தவராகவே வளர்க்கப்பட்டார்.

இங்கு ஆதாம்-ஏவாள் கதையை நினைவு கூறவும். பாம்பின் பேச்சைக் கேட்டு மதி மயங்கிய ஏவாளின் சொல் கேட்டு ஆதாம் ஆப்பிளை கடித்துவிடுகிறான். கிறித்துவ கடவுளின் கோபத்திற்கு ஆளாகிறான். மனநிறைவு என்ற தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். புவி வாழ்க்கை தொடங்குகிறது.

கடிபட்ட ஆப்பிள் - ஆசை, பற்று, விருப்பம், காமம் (ஆரியம்)

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பொன் மொழி: ஆசையே மாயை. ஆசையின்மையே கடவுள்.

மெய்யியலுக்கு வேண்டுமானால் ஆசை எதிரியாகவிருக்கலாம். ஆனால், பொருளாதாரத்திற்கு ஆசைதான் அடிப்படை! ஆப்பிள் பொருள்கள் மீது மக்கள் கொண்ட ஆசை, இன்று அதன் சந்தை மதிப்பை ரூ 2.25 இலட்சம் கோடிகளாக்கியுள்ளது (3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்)!!! 🤑

Thursday, March 24, 2022

திருநீறு & உருத்திராக்கம்: உட்பொருள்


நம் சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நபர், திருநீறு & உருத்திராக்கம் ஆகிய சைவ சின்னங்களின் மேன்மையைக் கூறும் நீண்டதொரு இடுகையை பகிர்ந்திருந்தார். பல தகவல்கள் அந்த இடுகையில் காணப்பட்டாலும், அடிப்படை தகவல்கள் ஒன்று கூட இல்லை!! அவருக்கு நான் அனுப்பிய தகவல்களின் தொகுப்பே இந்த சிறு இடுகையாகும். 🙏🏽

🌷 திருநீறு - காணப்படும் உலகம் பொய். எரிந்து உருக்கலையாத சாம்பல் போன்றது.

🌷 திருநீறு தரித்தல் - மேற்கண்ட அறிவுரையை எப்போதும் நினைவில் நிறுத்துதல்

🌷 உருத்திராக்கம் - தன்மையுணர்வின் மீது குவிந்த மனம்

🌷 உருத்திராக்கம் அணிதல் - தன்மையுணர்வை விட்டு விலகாதிருத்தல்

ஒரு சைவனிடம் இருக்கவேண்டியவை இவையிரண்டும்தான். இதன் பிறகே ஐந்தெழுத்து தேவைப்படுகிறது.

🌷 திருநீறை நெற்றி நிறைய பூசினால் - "காணப்படும் யாவும் பொய். காண்பவனே மெய்." என்பது பூசியிருப்பவரின் கண்ணோக்கம் என்பது பொருள். திருநீற்றை ஒரு சிறு கீற்றாக தரித்தாலும் இதே பொருள்தான்.

🌷 3 கோடுகளாக பூசினால் - நனவு, கனவு & தூக்கம் ஆகிய மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும், மாறாதிருப்பது தான் (தனது தன்மையுணர்வு) மட்டுமே என்பது பூசியிருப்பவரின் கண்ணோக்கம்.

இந்த நுட்பங்களை உணராமல், எப்படிப்பட்ட திருநீற்றை பூசுவதாலும், எப்படிப்பட்ட உருத்திராக்கங்களை அணிவதாலும் எந்த மெய்யியல் மாற்றமும் நிகழாது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, March 23, 2022

சர்ப்ப சாந்தி பூசை எனும் மனதை குளிரவைக்கும் முயற்சி


காணொளி: https://youtu.be/2c61VAXLWcw

🌷 பொதுவாக, நம் சமயத்தில் பாம்பு எனில் மனம் / மாயை.

🌷 சர்ப்ப சாந்தி பூசை என்பது மனதை குளிரவைக்கும் முயற்சி.

🌷 மனம் என்பது ஓட்டைப் பானைக்குச் சமம். எவ்வளவு நிரப்பினாலும் நிறையாது. ஆகையால், சர்ப்ப சாந்தி பூசை என்பது வீண்.

🌷 "விரும்பிய பொருள் கிடைத்தபோதும், வெறுத்த பொருளுக்கு கேடுண்டானபோதும் மனம் அகமுகமாத் திரும்பி, தன்னையே துய்க்கிறது!" என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாக்கு. சர்ப்ப சாந்தி பூசையைவிட இந்த பொன் மொழியை சிந்தித்தால் மேலான பலன் கிட்டும்!

🌷 மனதை ஓட்டம் பிடிக்க வைக்கும் ஒரே நுட்பம்: பகவானருளிய "நான் யார்?" (இதே தன்னாட்ட நுட்பத்தை, நமது திருத்தலங்களில், உடையவருக்கு முன் அமர்ந்து கொண்டிருக்கும் சிவன்காளையும், தில்லை கூத்தபிரானின் தூக்கிய இடது திருவடியும், திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடது காலும் உணர்த்துகின்றன!)

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேரார்க்குமிது உந்தீபற

(மறவாது உசாவ - இடைவிடாது ஆராய / நோக்க)

🙏🏽

oOOo

வேடிக்கையாகச் சொன்னால் ...

- காணொளியிலுள்ள பூசையை செய்ய வைத்தது சிலரது பாம்புகள்
- அதை காணொளியாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பரவ வைத்தது சிலரது பாம்புகள்
- அந்த காணொளிக்கு மேற்கண்ட கருத்துக்களை எழுத வைத்தது என்னுடைய பாம்பு!

😛

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, March 17, 2022

திருக்குறள் #160: உண்ணாது நோற்பார் யார்? இன்னாச்சொல் நோற்பார் யார்?


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

-- திருக்குறள் #160, பொறையுடைமை

பொழிப்புரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (மு.வ.)

(பொறையுடைமை என்ற அதிகார தலைப்பையும், அதிலுள்ள பிற குறட்பாக்களையும் ஒதுக்கி, இந்த குறளை மட்டும் சற்று காண்போம்.)

பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களை யார் பொறுத்துக் கொள்ளவேண்டும்? ஏன் பொறுத்துக் கொள்ளவேண்டும்? வேறு வழியில்லாமல், சில சமயம், தவறு செய்யாதவர்களும் பொறுத்துக் கொள்ளவேண்டிவரும். மற்றபடி, மற்றவர்களின் கொடுஞ் சொற்களை தவறானவர்கள் / தவறு செய்தவர்களே பொறுத்துக் கொள்ளவேண்டும்.

எனில், தவறு செய்தவர்கள் எப்படி பெரியவராக முடியும்? எந்த நோக்கில முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவ்வாறு வரிசைபடுத்தியுள்ளார் என்று பார்ப்போம்.

நோன்பு எனில் கட்டுப்பாடு அல்லது ஒதுங்கியிருத்தல். உண்ணா நோன்பு எனில் உணவு உண்ணுவதில் கட்டுப்பாடு அல்லது உணவு உண்ணாதிருத்தல். இதனால் உடல் வாடும். செருக்கு குறையும். தன்மையுணர்வில் நிலைத்து நிற்க (வடக்கிருக்க) உதவும்.

இன்னொரு வகையிலும் பொருள் காணலாம்.

உணவு என்பது வயிற்றிற்கு இடும் சாப்பாட்டை மட்டும் குறிக்காது. நாம் காணும் காட்சிகளையும், நமக்கு தோன்றும் எண்ணைங்களையும் குறிக்கும். இவற்றை ஒதுக்கியிருத்தலும் உண்ணாநோன்புதான்!

🌷 யார் இப்படிப்பட்ட உண்ணாநோன்பு நோற்பர்? தனது தன்மையுணர்வில் இன்னமும் நிலைபெறாதவர்கள்.

🌷 தன்மையுணர்வில் நிலைபெற்றவர்கள் எப்படியிருப்பர்? நம்மை போல் "உண்டு களிக்கவும்" மாட்டார்கள். மேற்சொன்னவர்களை போல் உண்ணாநோன்பு நோற்கவும் மாட்டார்கள். இருப்பற்ற, வெறும் தோற்றமாத்திரமேயான உலகக்காட்சியால் எந்தவித பாதிப்பும் அடையாதிருப்பார்கள். புகழாரமும் சரி; கொடுஞ்சொற்களும் சரி. அவர்களுக்கு ஒன்றுதாம்.

🌷 இப்போது வரிசை படுத்துவோம்:

- நிலைபேறு பெற்றவர் - கொடுஞ்சொற்களை பொறுப்பவர்
- நிலைபேறு பெற முயற்சிப்பவர் - உண்ணாநோன்பிருப்பவர்

🌷 வேடிக்கையாக வரிசை படுத்தினால்:

- உணவைக் கண்டுகொள்ளாதவர்
- உணவை ஒதுக்குபவர்
- உணவே வாழ்வென்று கருதுபவர் (நாம்)

😊

(திருவள்ளுவர் ஒரு கிறித்தவரென்று ஊழியம் செய்ய முயற்சிக்கும் நரித்துவர்களுக்கு 👊🏽👊🏽👊🏽!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, March 14, 2022

கோவிலில் விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!



ஒரு திருக்கோயிலில் விளக்கேற்றுகையில் விளக்கேற்றும் பெண்ணின் கூந்தலில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிசிடிவி-யில் பதிவாகியுள்ள அந்த காட்சிகளை, விழிப்புணர்விற்காக பகிர்கிறேன் பேர்வழியென்று, பின்வரும் குறிப்புடன் பகிர்ந்துள்ளார்கள்:

தலைவிரி கோலமாக கோயிலுக்கு வரக்கூடாது என்பது இதற்காகத்தான் என்பது இப்போதாவது புரிகிறதா?

ஒரு வேளை, துப்பட்டாவோ சேலையோ தீ பிடித்திருந்தால், "துப்பட்டா / சேலை அணிந்து வரக்கூடாது என்பது இப்போதாவது புரிகிறதா?" என்பார்களோ?

விளக்கேற்றுவதன் உட்பொருள் தெரிந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது!

🌷 விளக்கு நமதுடலுக்கு சமம். எரியும் நெருப்பு நமதுயிருக்கு சமம்.

🌷 ஒரு விளக்கு எரிவதால் அதற்கெந்த பயனுமில்லை. மற்றவர்களுக்குத்தான் பயன் கிடைக்கும். விளக்கேற்றுதல் எனில் தன்னலமற்று வாழ்தலாகும்.

🌷 அக்காலத்தில் மொத்த ஊரும் திருத்தலங்களில் இருந்தே இயங்கின. எனவே, "கோவிலில் விளக்கேற்று" எனில் "தன்னலமற்று ஊருக்காக உழை" என்று பொருள்.

🌷 எவ்வளவு போராடினாலும் சிலருக்கு ஒன்றுமே கிட்டாது. இப்பிறவியில் நமது கொடுப்பினை அவ்வளவுதான் என்பதையுணர்ந்து அடங்கும் முதிர்ச்சியும் இருக்காது. அத்தகைய மனிதர்களின் ஆற்றலை மடை திருப்பிவிடும் நுட்பம்தான் "கோவிலில் விளக்கேற்றுதல்" ஆகும்.

🌷 எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், வகை வகையாக ஏற்றினாலும், எப்போது ஏற்றினாலும் அவற்றின் உண்மைப் பொருள் மேற்கண்ட ஒன்றுதான்!

இந்த உண்மை தெரிந்திருந்தால் அந்த பெண் விளக்கேற்றியிருப்பாரா? அல்லது, எத்தனை பேர் விளக்கேற்றிவிடப்போகிறார்கள் (அதாவது, தன்னலமற்று வாழ்ந்துவிடப்போகிறார்கள்)? 😊

oOo

அந்த பெண் உள்ளே வரும்போது 2 விளக்குகளைக் கொண்டுவருகிறார். இறையுருவங்களுக்கு முன் நின்று, வலது கையிலுள்ள விளக்கை அரைகுறையாக சுற்றுகிறார். இந்த செய்கையும், பொருள் புரியாமல் பூசாரிகளை பின்பற்றுவதால் விளைந்துள்ளது.

இறையுருவின் முன், தனது தட்டிலுள்ள விளக்கை, பூசாரி சுற்றுவது நமக்காக! இறைவனுக்காக அல்ல!!

o 1 சுற்று - அனைத்தும் நீயே
o 3 சுற்றுகள் - நனவு, கனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளிலும் மாறாமலிருக்கும் பொருள் நீயே

ஓர் அடியாராக திருக்கோவிலுக்குள் நுழைந்த பின்னர், "எப்போதும் மாறாமலிருக்கும் பொருள் நாமே" என்ற பேருண்மையை உணர முயற்சிக்க வேண்டுமேயன்றி, பூசாரியின் செய்கையை நகலெடுப்பதால் எந்த பயனுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮