நம் சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு நபர், திருநீறு & உருத்திராக்கம் ஆகிய சைவ சின்னங்களின் மேன்மையைக் கூறும் நீண்டதொரு இடுகையை பகிர்ந்திருந்தார். பல தகவல்கள் அந்த இடுகையில் காணப்பட்டாலும், அடிப்படை தகவல்கள் ஒன்று கூட இல்லை!! அவருக்கு நான் அனுப்பிய தகவல்களின் தொகுப்பே இந்த சிறு இடுகையாகும். 🙏🏽
🌷 திருநீறு - காணப்படும் உலகம் பொய். எரிந்து உருக்கலையாத சாம்பல் போன்றது.
🌷 திருநீறு தரித்தல் - மேற்கண்ட அறிவுரையை எப்போதும் நினைவில் நிறுத்துதல்
🌷 உருத்திராக்கம் - தன்மையுணர்வின் மீது குவிந்த மனம்
🌷 உருத்திராக்கம் அணிதல் - தன்மையுணர்வை விட்டு விலகாதிருத்தல்
ஒரு சைவனிடம் இருக்கவேண்டியவை இவையிரண்டும்தான். இதன் பிறகே ஐந்தெழுத்து தேவைப்படுகிறது.
🌷 திருநீறை நெற்றி நிறைய பூசினால் - "காணப்படும் யாவும் பொய். காண்பவனே மெய்." என்பது பூசியிருப்பவரின் கண்ணோக்கம் என்பது பொருள். திருநீற்றை ஒரு சிறு கீற்றாக தரித்தாலும் இதே பொருள்தான்.
🌷 3 கோடுகளாக பூசினால் - நனவு, கனவு & தூக்கம் ஆகிய மாறிக்கொண்டேயிருக்கும் மூன்று நிலைகளிலும், மாறாதிருப்பது தான் (தனது தன்மையுணர்வு) மட்டுமே என்பது பூசியிருப்பவரின் கண்ணோக்கம்.
இந்த நுட்பங்களை உணராமல், எப்படிப்பட்ட திருநீற்றை பூசுவதாலும், எப்படிப்பட்ட உருத்திராக்கங்களை அணிவதாலும் எந்த மெய்யியல் மாற்றமும் நிகழாது.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
No comments:
Post a Comment