Friday, December 31, 2021

ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் சொதப்பல் புத்தாண்டு!!! 👊🏽


வானவியலில் நம் முன்னோர்கள் முன்னோடிகள் என்பதற்கு சில சான்றுகள்:

💥 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், நம் தலைக்கு நேர் மேலே பகலவன் இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே ஆண்டு பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்!! 👏🏽👏🏽 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. (ஆகையால், சித்திரை முதல் நாளன்று புவியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை!)

இந்த நுட்பமான முறையினால் ஒவ்வொரு ஆண்டும் முழுதாக முடிவடையும். ஆனால், பரங்கி ஆண்டு முழுமையாக முடிவடைவதில்லை. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 நாளை சேர்க்கின்றனர். இதற்கும் பல விதிகள் உண்டு (4ஆல் வகுபட வேண்டும், 100ஆல் வகுபட்டாலும் 400ஆல் வகுபட வேண்டும், 400ஆல் வகுபட்டாலும் 4000ஆல் வகுபடக்கூடாது, ...😲). இன்றைய நிலையில் மீண்டும் பரங்கி ஆண்டு சீராவது பொ.ஆ. 4000-த்தில்தான். (பரங்கி ஆண்டை "சொதப்பல் ஆண்டு" என்றழைப்பதற்கு இதை விட சிறந்த ஏது வேறென்ன வேண்டும்? 😛)

💥 நம் முன்னோர்களின் ஆண்டு கணக்கிற்கு, தன் தாவரக் குழந்தைகளை பூக்க விட்டு, இயற்கை அன்னையும் உடன்படுகின்றார்!! மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி, புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் ஆண்டு பிறப்பு காலத்தில் தான்.

💥 உலகிலுள்ள பெரும்பாலான ஆண்டு பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆண்டும் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. மீண்டும் நம்முடன் ஏற்பட்டத் தொடர்பினால் தங்களது ஆண்டு கணக்கை திருத்திக் கொண்ட பரங்கியர்கள், தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தை முன்னிறுத்துவதற்காகவும், இஸ்ரவேல் மெய்யியலாளர் இயேசு பிறந்தது சனவரி 1 என்று ஒரு நம்பிக்கை இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் சனவரி 1-ற்கு மாற்றினர் (மாற்றியது அன்றைய போப் கிரிகோரியன்). அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ ஆண்டு பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள்" என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்! 😏).

💥 சித்திரை 1-ஐ ஆண்டின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். பகலவன் வருடை ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் கற்றுக் கொண்டனர் எனலாம்! ஆரியர்களின் உத்திராயண-தட்சிணாயன கணக்கும் நம்முடையது தான்!!

அவர்களது பிறப்பிடமான ரிஷிவர்ஷாவில் (இன்றைய சைபீரியா போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரஷ்யா) பகலவன் காட்சி தருவதே ஆண்டிற்கு சில நாட்கள் தான். குகைகளையும், கூடாரங்களையும் விட்டு தகுந்த பாதுகாப்பின்றி வெளிவந்தால் இரத்தம் உறைந்துவிடும் நிலை. இதில் எங்கிருந்து அயண ஆராய்ச்சி செய்திருக்க முடியும்? மேலும், உத்திராயணமும் தட்சிணாயனமும் சரியாக 6 மாதங்களாகப் பிரிவது நிலநடுக்கோட்டுப் பகுதியில் தான் - நம் முன்னோர்கள் வாழ்ந்த தென்மதுரையில் தான்!! நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, தமது என்று முத்திரை குத்தி, மீண்டும் நம் தலையிலேயே கட்டிவிட்டார்கள் (கோல்கேட்காரன் கரியையும், உப்பையும் அன்று கிண்டல் செய்து விட்டு, இன்று அவற்றைக் கொண்டு பற்பசை தயாரித்து நம்மிடமே விற்பது போல).

💥 "இவ்வளவு தாென்மை, அறிவியல், வரலாறு இருந்தும் நம் மக்கள் ஏன் ஆங்கில புத்தாண்டன்று திருத்தலங்களுக்கு செல்கின்றனர்?" என்ற கேள்வி எழலாம். அன்று, சமூகத்தின் முக்கிய நபர்கள் ஒவ்வொருவரும்  அவரவர் பகுதிக் கொள்ளைக் கூட்டத்தலைவனை (பரங்கிப் பிரபு) சந்தித்து பூ மாலை, பழம், இனிப்பு போன்ற பரிசுகளை அளித்து வாழ்த்துச் சொல்ல / பெற வேண்டும். தலைக்கனமும் திமிரும் பிடித்த இந்த நச்சுப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய நம் பெரியோர்கள் கண்டுபிடித்த வழிதான்... சாெதப்பல் புத்தாண்டன்று நம் திருத்தலங்களுக்கு செல்வது. திரு வள்ளிமலை சுவாமிகள் திருத்தணி படித்திருவிழாவை தாெடங்கியதும் இப்படித்தான். கொள்ளைக் கூட்டத் தலைவியும் (இங்கிலாந்து ராணி) நம் சமய நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று ஆணையிட்டிருந்தாள். இதையும் பயன்படுத்தி பகுதி கொள்ளையர்களிடமிருந்து தப்பினர் நம் பெரியோர்கள்! 😎

"இன்றும் இவ்வழக்கம் தொடரவேண்டுமா?" என்று கேட்டால், உறுதியாகத் தொடரவேண்டும் என்பேன். பரங்கியரின் சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் கருங்காலி / அறிவிலித் தமிழர்கள் இருக்கும்வரை இவ்வழக்கமும் தொடரவேண்டும்!! 👊🏽

oOOo

மேற்சொன்ன யாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் உயிரிகளும் ஏற்றுக் கொள்ளும் செய்தி ஒன்றுண்டு - மிகப் பழமையான மாந்தர்களான மாயன்களிடமும் எகிப்தியர்களிடமும் பகலவனை அடிப்படையாகக் கொண்ட நாள் மற்றும் நேரக் காட்டிகள் இருந்தன என்பதே அது. இந்த மாயன்களும் எகிப்தியர்களும் நம்மோடு நெருங்கிய தொடர்பிலிருந்தோர் என்பது அண்மை கால ஆராய்ச்சிகளின் முடிவு!!

oOOo

சொதப்பல் ஆண்டு பிறப்பு...

👊🏽 அறிவியல் & வானவியல் அடிப்படையற்றது
👊🏽 இயற்கை சுழற்சிக்கு மாறானது
👊🏽 சூழலுக்கு பொருந்தாத கொண்டாட்டங்களைக் கொண்டது
👊🏽 அடிமை மனப்பான்மையை வளர்ப்பது

சொதப்பல் ஆண்டு பிறப்பைக் கொண்டாடுவதை தவிர்ப்போம். நமது ஆண்டு பிறப்பைக் கொண்டாடி மகிழ்வோம். நமது தொன்மை, வரலாறு, அடையாளங்களைக் காப்போம். தமிழன் என்று பெருமை கொள்வோம். 👍🏽

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே"

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment